toxic ott.. யானைக்கும் அடி சறுக்கும்.. யாஷ் இதனை இனி எப்போதுமே மறக்க மாட்டார்

  • சென்னை: டாக்ஸிக் திரைப்படம், ₹800 கோடி நஷ்டமில்லா இலக்கை நிர்ணயித்திருந்த நிலையில், திரையரங்குகளில் சுமார் ₹300 கோடி வசூலித்து முடித்ததாக சொல்லப்படுகிறது. வெளியீட்டிற்கு முன்பு, ஓடிடி தளங்கள் அதன் டிஜிட்டல் உரிமைகளுக்காக சுமார் ₹150 கோடி வழங்கியதாகக் கூறப்படுகிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு படத்தின் மதிப்பு உயரும் என்று எதிர்பார்த்து, பட தயாரிப்பு குழு அந்த சலுகைகளை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், திரையரங்குகளில் படம் ஓடிய விதத்தை பார்த்து ஆடிப்போன ஒடிடி நிறுவனம், 150 கோடிக்கு பதில் ₹30 கோடிக்கு வாங்கி உள்ளதாம். டாக்ஸிக் திரைப்படம் இப்போது செப்டம்பர் 25 அன்று ZEE5-ல் வெளியாகிறது.

    Advertisement

    யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கு யாஷ் சிறந்த உதாரணம். அதேபோன்ற இன்னொரு உதாரணம் அஜித்குமார். கேரியரின் உச்சத்தில் சென்று கொண்டிருந்த அஜித் குமார், 2003ம் ஆண்டு வாக்கில் மக்களிடையே வரவேற்பையே பெறாத படங்களில் நடிக்க தொடங்கினார், அதில் இருந்து மீண்டு வர அஜித்திற்கு மூன்று வருடம் தேவைப்பட்டது.

    Advertisement

    பில்லாவிற்கு பின்பே அஜித் குமார் மீண்டும் வெற்றி பயணத்திற்கு திரும்பினார். அஜித்தை போல் யாஷ் உச்சத்தில் தான் இருந்தார், 'கே.ஜி.எஃப்' சாப்டர் ஒன்று, சாப்டர் இரண்டு என அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு யாஷ்ஷை வைத்து படம் பண்ண பல இயக்குனர்கள் காத்துக்கிடந்தார்கள். தமிழ் இயக்குனர், தெலுங்கு இயக்குனர்கள், கன்னட இயக்குனர், மலையாளம் மற்றும் இந்தி இயக்குனர்கள் கதைகளுடன் காத்துக்கிடந்தனர்.

    இந்த சூழலில் நடிகை கீது மோகன்தாஸ்க்கு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை யாஷ் வழங்கினார். முற்றிலும் புரட்சிகரமான ஹீரோ பிம்பத்தில் இருந்த யாஷ், டாக்ஸிக் படத்தில் மிகவும் நெருக்கமான காட்சிகள் நடித்தார். ட்ரெய்லரை பார்த்தே பலரும் மிரண்டார்கள். டாக்ஸிக் இப்படத்தில் யாஷுடன் கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    Advertisement

    படம் எப்படி வெல்லும் என்று நினைத்தார்கள். ஆனால் படத்தில் அதிகப்படியான நெருக்கமான காட்சிகள், பொருந்தாத வசனங்கள், உயிரோட்டம் இல்லாத திரைக்கதை, மக்களிடம் முகம் சுளிக்க வைக்கும் காட்சி அமைப்புகள் என படத்திற்கு எல்லாமே எதிராக அமைந்திருந்தது. இவை எதுவுமே படம் வெளியாகும் வரை யாருக்குமே தெரியாது.

    கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'டாக்ஸிக்' திரைப்படம் ரசிகர்களின் எதிர்மறையான விமர்சனங்களால் பாக்ஸ் ஆபீஸில் பெரும் சரிவைச் சந்தித்தது. ரூ.337 கோடி மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் தோல்வி அடைந்தது. 337 கோடி வசூலித்து எப்படி தோல்வி படம் ஆகும் என்றால், படத்திற்கு செலவே 600 கோடிக்கு மேல் ஆனதாக சொல்லப்பபடுகிறது. பட தயாரிப்பு நிறுவனம் 800 கோடி வருமானம் கிடைக்கும் என இலக்குடன் செயல்பட்டிருககிறது.

    Advertisement

    முன்னதாக திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு, இப்படத்தின் ஓடிடி உரிமத்துக்கு முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று ரூ.150 கோடி வரை வழங்க முன்வந்தது. ஆனால், படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என்ற நம்பிக்கையில், ஓடிடி உரிமத்தை ரூ.200 கோடிக்கும் அதிகமாக விற்க படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.

    ஆனால் தியேட்டர்களில் படம் மோசமான வரவேற்பை பெற்றதால், தற்போது ஓடிடி தளங்கள் அனைத்து மொழிகளுக்குமான உரிமத்துக்கு வெறும் ரூ.30 கோடி மட்டுமே வாங்க முடியும் என்று ஓடிடி நிறுவனம் கைவிரித்தது. எனினும் ஓடிடி பதிப்புக்காக படத்தின் காட்சிகளை முற்றிலுமாக மாற்றி அமைத்து எடிட் செய்யப்பட்ட ஒரு புதிய பதிப்பை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனாலும் கைகொடுக்கவில்லை.

    Advertisement

    30 கோடிக்கு மேல் தர ஒடிடிநிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லையாம். இந்த சூழலில் தயாரிப்பு நிறுவனம் வேறுவழியின்றி படத்தை ஓடிடிக்கு சொன்ன விலைக்கே கொடுத்துவிட்டார்களாம். டாக்ஸிக் திரைப்படம் இப்போது செப்டம்பர் 25 அன்று ZEE5-ல் வெளியாகிறது. சரியான நேரத்தில் சரியான கதையை தேர்வு செய்யாவிட்டால யாராக இருந்தாலும் வீழ்வார்கள் என்பதற்கு யாஷ் உதாரணம். யாஷ் கண்டிப்பாக அடுத்த படத்தில் மீண்டுவிடுவார் என்றாலும், யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் அவருக்கு நடந்த இந்த சம்பவத்தை இனி அவர் மறக்கவே மாட்டார்.

    English Summary

    Toxic OTT: What is the unforgettable moment involving Yash in this film? Stunned by the film's theatrical performance, the OTT platform reportedly acquired the rights for ₹30 crore instead of the initially planned ₹150 crore. The movie Toxic is now set to release on ZEE5 on September 25.