சென்னை: ரேஷன் அரிசியில் இட்லி, தோசை செய்தால் சுவையாக இருக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் செய்தால் இட்லி பூ போல் வரும் என்பதில் சந்தேகமே இல்லை.
இட்லி, தோசைக்கென வீடுகளில் தனியாக அரிசி வாங்குவதுண்டு. அதாவது சாப்பாட்டுக்கு தனி, டிஃபனுக்கு தனி என அரிசி இருக்கும்.
இட்லிக்கென அரிசி வாங்குவது பொருளாதார ரீதியில் சிரமமாக இருந்தால், ரேஷனில் கொடுக்கும் அரிசியில் கூட இட்லி, தோசை செய்யலாமே. ரேஷன் புழுங்கல் அரிசி- 2 கப் அரிசியை தண்ணீர் கிளியராகும் வரை கழுவி 3 மணி நேரத்திற்கு மேல் ஊற வைத்துக் கொள்ளவும். உளுந்து 2 மணி நேரம் ஊற வைத்தால் போதுமானது. அரிசியுடனே வெந்தயத்தையும் போட்டு ஊற வைக்க வேண்டும். இவை எல்லாம் ஊறியதும் மிக்ஸி அல்லது கிரைண்டரில் முதலில் உளுந்து போட்டு தண்ணீர் தெளித்து தெளித்து வெண்ணெய் போல் வரும் வரை அரைக்கவும். அதை வழித்து ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும். இதையடுத்து அரிசியை போட்டு ரவை பதத்திற்கு அரைத்து அதையும் ஏற்கெனவே உளுந்து வழித்து வைத்துள்ள பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். பிறகு உப்பு போட்டு கரைத்து 8 மணி நேரம் புளிக்கவிட்டு இட்லி, தோசை வார்த்தால் அருமையாக இருக்கும்.தேவையான பொருட்கள்
ரேஷன் பச்சை அரிசி - 1 கப்
உளுந்து- முக்கால் கப்
வெந்தயம் - சிறிதுசெய்முறை