வெந்தய சாதத்தை எப்படி செய்யலாம்? கசப்பே தெரியாத குளிர்ச்சி கொடுக்கும் உணவு!


  • சென்னை: உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடிய, அதே நேரம் வயிற்று பிரச்சனைகளை சரி செய்ய வெந்தய சாதம் சிறந்த உணவாகும். வெந்தயம் ஓவர் குளிர்ச்சி என்பதால் இதை மழைக்காலத்தில் எடுக்க வேண்டாம்.

    Advertisement

    இந்த வெந்தய சாதம் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    பச்சரிசி அல்லது பொன்னி அரிசி- 1 கப்
    வெந்தயம்- 1 டீஸ்பூன்
    பூண்டு-10 பற்கள்
    சின்ன வெங்காயம்- 10 பொடியாக நறுக்கியது
    தக்காளி- 1
    பச்சை மிளகாய் - 2
    தண்ணீர் - இரண்டரை கப்
    மஞ்சள் தூள்- சிறிது
    குழம்பு மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
    நல்லெண்ணெய் , கடுகு, உப்பு, கறிவேப்பிலை- தேவையான அளவு

    செய்முறை

    அரிசியை கழுவி 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். அது போல் வெந்தயத்தையும் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    ஒரு குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடேறியதும் கடுகு, பெருங்காயத் தூள், சீரகம், வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

    Advertisement

    அத்துடன் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    அடுத்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து வெந்தயத்தையும் சேர்த்து வதக்கவும்.

    பிறகு மஞ்சள் தூள், சாம்பார் மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்

    இரண்டரை கப் தண்ணீரை ஊற்றி அது கொதிக்கும் போது அரிசியை போட்டு, உப்பு, காரம் சரி பார்த்துவிட்டு குக்கரை மூடவும்.

    மிதமான தீயில் 2 விசில் விட்டு எடுக்கவும். பிறகு ஆவி அடங்கியதும் அதில் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    இதற்கு உருளைக் கிழங்கு சிப்ஸ், பொரியல், தேங்காய் துவையல், அப்பளம், வத்தல் உள்ளிட்டவைகளை தொட்டுக் கொள்ளலாம்.

    English Summary

    Do you know how to do Venthaya sadham without having bitter taste?