தள்ளுவண்டி கடை காலிஃபிளவர் 65! மசாலா பிரியாமல் மொறுமொறுப்பாக கோபி 65 செய்வது எப்படி?


  • Street Style Cauliflower 65 Recipe In Tamil: ஹோட்டலில் கிடைப்பது போல மொறுமொறுப்பான காலிஃபிளவர் 65 வீட்டிலேயே செய்ய ஆசையா? மசாலா உதிராமல், கிரிஸ்பியாக வரவில்லையே என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா? கவலை வேண்டாம், இந்த செய்முறையில் சரியான அளவுகளுடன் செய்து பாருங்க. தெருவோரக் கடைகளில் விற்கப்படும் அதே சுவையுடனும், மணத்துடனும் மிக எளிமையான முறையில் இந்த கோபி 65-ஐ உங்கள் சமையலறையிலேயே தயார் செய்து அசத்தலாம்.

    Advertisement

    இந்த ரெசிபியின் சிறப்பம்சமே இதில் சேர்க்கப்படும் மசாலா கலவை தான். பொதுவாக வீட்டில் செய்யும்போது காலிஃபிளவர் மென்மையாகிவிடும் அல்லது மசாலா எண்ணெயோடு பிரிந்துவிடும். ஆனால், நாம் இங்கே பயன்படுத்தும் சரியான அளவு சோளமாவு மற்றும் அரிசி மாவு கலவை, காலிஃபிளவருக்கு ஒரு அபாரமான மொறுமொறுப்பைத் தரும்.

    Advertisement

    ஆரோக்கியமான முறையில் தரமான எண்ணெயைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்வதால், இது கடைகளில் வாங்குவதை விட மிகவும் பாதுகாப்பானது மற்றும் சுவையானது. குறைந்த நேரத்தில் அதிக சுவையுடன் கூடிய இந்த ஸ்டார்டர் உங்கள் விருந்தினர்களை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

    இதே காலிபிளவர் 65 செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன, எப்படி செய்வது என்பதை பாரக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    • காலிஃபிளவர் - 1 பெரிய பூ
    • கடலை மாவு - 3 மேசைக்கரண்டி
    • சோள மாவு (Corn flour) - 2 மேசைக்கரண்டி
    • அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
    • இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
    • தனி மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
    • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
    • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    • மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
    • உப்பு - தேவையான அளவு
    • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
    • கருவேப்பிலை - ஒரு கைப்பிடி

    செய்முறை விளக்கம்

    • முதலில் காலிஃபிளவரை சிறு சிறு பூக்களாக நறுக்கி, கொதிக்கும் நீரில் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடங்கள் ஊற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
    • பின் ஒரு அகலமான பாத்திரத்தில் வடிகட்டிய காலிஃபிளவர் துண்டுகளைப் போட்டு, அதனுடன் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் அனைத்து மசாலா தூள்களையும் சேர்க்கவும்.
    • அடுத்து மிகக் குறைந்த அளவு தண்ணீர் தெளித்து, மசாலாக்கள் காலிஃபிளவர் துண்டுகளின் மீது நன்கு ஒட்டும் படி மென்மையாகப் பிசையவும்; அதிக தண்ணீர் சேர்த்தால் மசாலா பிரிந்துவிடும்.
    • பிறகு ஒரு வாணலியில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் (Medium Flame) வைத்து நன்கு சூடுபடுத்தவும்.
    • இறுதியாக எண்ணெய் நன்கு காய்ந்ததும், மசாலா தடவிய காலிஃபிளவர் துண்டுகளை ஒவ்வொன்றாகப் போட்டு, பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை சிவக்க விட்டு எடுக்கவும்.

    Topics: #Veg recipes