Ridge Gourd Peel Thuvayal Recipe In Tamil: பீர்க்கங்காய் சமைக்கும்போது அதன் தோலை குப்பையில் வீசிவிடுகிறீர்களா? காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அதன் தோலில்தான் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி தூக்கி எறியும் தோலை கொண்டு ஒரு அருமையான துவையல் செய்யலாமா? வீணாகும் பொருளை வைத்து எப்படி ஒரு ருசியான சைடு டிஷ் செய்வது என்பதை இந்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
இந்த துவையலில் மருத்துவ குணங்கள் ஏராளம். பீர்க்கங்காய் தோலில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக வைக்க உதவுகிறது. குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். மேலும், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
கடைகளில் வாங்கும் காய்கறிகளில் உள்ள சத்துக்களை முழுமையாகப் பெற இதுவே சிறந்த வழி. சுவையில் இது பருப்பு துவையலை விடவும், புதினா சட்னியை விடவும் ஒரு படி மேலாகவே இருக்கும். சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் இது கச்சிதமாகப் பொருந்தும். ஒருமுறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்வீர்கள்.
மிகக் குறைந்த நேரத்தில், வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டே இந்த துவையலைத் தயார் செய்துவிடலாம். காலையில் அவசரமாக சமைக்கும்போது, காய்கறியை நறுக்கிவிட்டு அதன் தோலை மட்டும் தனியாக எடுத்து வைத்து இரவு நேரத்தில் இந்த துவையலைச் செய்துவிடலாம். இதோ உங்களுக்காக எளிய செய்முறை விளக்கம்.தேவையான பொருட்கள்
செய்முறை விளக்கம்