மகாளய அமாவாசை நாளில் குழந்தைகள் பிறக்கலாமா? பலன்கள் என்ன?

  • சென்னை: மகாளய அமாவாசை நாளில் குழந்தைகள் பிறந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். பொதுவாக அமாவாசை நாளில் குழந்தை பிறப்பை யாரும் விரும்ப மாட்டார்கள். அதிலும் சிசேரியன் டெலிவரி என்றால் நல்ல நாள் குறித்து செய்து கொள்வார்கள்.

    Advertisement

    அமாவாசை அன்று சுகபிரசவம் ஆனால் அதை தடுக்க முடியாது. அந்த வகையில் மகாளய அமாவாசை என்பது 16 நாட்கள் நம் முன்னோர்களை எம தர்மன் விடுப்பு கொடுத்து நம் வீடுகளுக்கு அனுப்புவார் என்பது ஐதீகம். பூமிக்கு வரும் அவர்கள் நம்முடன் தங்கி, உணவு அருந்தி நமக்கு ஆசி தருவதாக நம்பிக்கை!

    Advertisement

    எனினும் இந்த 16 நாட்களில் எந்த சுபகாரியங்களையும் செய்வதில்லை. மகாளய அமாவாசையின் போது குழந்தை பிறந்தால் என்னென்ன பலன்கள் என்பதை பார்க்கலாம்.

    மகாளய அமாவாசையின் போது குழந்தை பிறப்பது என்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் தங்களுக்கு மட்டுமல்ல, தங்கள் குடும்பத்திற்கும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். இந்த குழந்தைகளுக்கு முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    மகாளய அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் அதிர்ஷ்டத்தால், குடும்பத்தின் நிதி நிலைமை வளர்ச்சி பாதையில் செல்லும். இந்த குழந்தைகள், குழந்தைகளாக இருக்கும் போதே பொறுப்பாக இருப்பார்களாம். அது போல் குடும்பத்தையும் கவனித்துக் கொள்வார்களாம். இவர்கள் சமூகத்தில் நற்பெயரையும் பெறுவார்கள். ஆனால் மிகவும் சென்டிவ்வாகவும் இவர்கள் இருப்பார்கள் என சொல்லப்படுகிறது.

    Advertisement

    அமாவாசை நாளில் பிறந்தால் மனதைத் திருடுபவர்கள் என சொல்வார்கள். அது போல் இந்த குழந்தைகளின் பேச்சு, செயலாற்றல் மற்றும் திறமையால் பிறரின் மனதை கவரும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பர்.

    அமாவாசை நாளில் சந்திரன் இருக்காது. இதனால் அன்றைய தினம் பிறக்கும் குழந்தைகள் வளரும் போது அதிக உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், மனச்சஞ்சலம் அடைபவர்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இதற்காக பெற்றோர் பயப்படத் தேவையில்லை. எனவே மகாளய அமாவாசைகளில் குழந்தை பிறப்பது என்பது புனிதமான ஒன்று. எனவே யாரும் தேவையில்லாத பயம் கொள்வதோ, மூட நம்பிக்கைகளை நம்புவதோ வேண்டாம் என்கிறார்கள்.

    அமாவாசை அன்று குழந்தை பிறந்தால் அமாவாசை சாந்தி ஹோமம் செய்தால் தோஷங்கள் நிவர்த்தி ஆகும். குழந்தைகளும் ஆரோக்கியத்துடனும், சுபிக்ஷத்துடனும் வாழ்வார்கள்.

    Advertisement

    பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் இணையதளத்தில் வெளியான தகவல்களை அடிப்படையாக கொண்டவை. எனவே வாசகர்கள், அவரவர் நம்பிக்கைப்படி முடிவெடுத்துக் கொள்ளலாம்.

    English Summary

    Can babies birth on Mahalaya Amavasya? Myth around the birth of child is true? What is the truth behind this?