செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை துடைக்கலாமா? பூஜை பாத்திரங்களை துலக்கலாமா?

  • சென்னை: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை துடைத்து சுத்தம் செய்யலாமா என்ற சந்தேகம் பெரும்பாலானோருக்கு உண்டு. முந்தைய நாளான திங்கள், வியாழக்கிழமைகளில் சுத்தம் செய்ய நேரமில்லாதவர்கள் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    வீடு முழுவதையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவ்வாறு முடியாதவர்கள் குறைந்தபட்சம் சமையலறையையும் பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    Advertisement

    தினமும் மாலை நேரங்களில் விளக்கேற்றுவது நல்லது. அதே நேரம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீடுகளில் சாம்பிராணி புகை போட்டு சுவாமி கும்பிடுவது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும்.

    இதற்காக வீடு வாசலை பெருக்கி, சுத்தம் செய்து பூஜை பாத்திரங்களையும் நன்கு பளபள என விலக்கி பயன்படுத்த வேண்டும். இதில்தான் நிறைய பேருக்கு சந்தேகம்! அதாவது பூஜை பொருட்களை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யலாமா, சிலர் திங்கள், வியாழக்கிழமைகளில் சுத்தம் செய்து கொள்ள சொல்கிறார்களே! இதற்கு தெளிவான பதிலை தேடுகிறார்கள்.

    மேலும் திங்கள், வியாழக்கிழமைகளில் நேரம் இல்லாத நிலையில் வீட்டை துடைப்பது, பூஜை சாமான்களை சுத்தம் செய்வதை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்யலாமா என்ற சந்தேகம் உள்ளது.

    Advertisement

    அதாவது செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள், மகாலட்சுமிக்கு உகந்த நாளாகும். இந்த நாட்களில் வீட்டை துடைத்து சுத்தம் செய்வது லட்சுமி கடாட்சத்தை குறைத்துவிடும். அதனால் வியாழக்கிழமை மாலை அல்லது புதன்கிழமைகளில் பூஜை அறையையும் பூஜை பாத்திரங்களையும் துலக்கி வைத்துக் கொள்வதே நல்லது என்கிறார்கள்.

    அதே வேளை வெள்ளிக்கிழமை அதிகாலையில் எந்தவிதமான சுத்த பணிகளையும் செய்யாமல் நேரடியாக விளக்கேற்றி வழிபாடு நடத்துவது மங்கலத்தை தரும். வீட்டை துடைப்பது, சாம்பிராணி போடுவது, தூசி தட்டுவது உள்ளிட்டவைகளை வியாழக்கிழமையுடன் முடித்துக் கொள்ளுங்கள், செவ்வாய், வெள்ளிகளில் வேண்டாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.