அகல் விளக்குகளின் அற்புதம்.. பழைய விளக்குகளை யூஸ் பண்ணலாமா? எந்தெந்த எண்ணெய் பயன்படுத்தலாம்


  • சென்னை: தமிழர் பண்பாட்டிலும்சரி, ஆன்மிகத்திலும்சரி. அகல் விளக்குக்கு எப்போதுமே முதன்மையான இடமுண்டு. உலோகங்களால் செய்யப்பட்ட விலைமதிப்பற்ற விளக்குகள் நிறைய இருந்தாலும், மண்ணால் செய்யப்படும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதே மிகச்சிறந்த வழிபாடாக கருதப்படுகிறது. இதற்கு பின்னாலுள்ள ஆன்மீக காரணங்களும், அது உணர்த்தும் வாழ்வியல் தத்துவங்களும் ஒவ்வொரு மனிதனும் அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான பொக்கிஷங்களாகும். அகல் விளக்குகள் பற்றின இன்னும் பல சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

    Advertisement

    நாம் எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும், அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவதே மகிமை என்பார்கள். மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி என முப்பெருந்தேவியர் இந்த அகல்விளக்கில்தான் என்றென்றும உறைந்திருக்கிறார்கள்..

    Advertisement

    அதனால் இதில் தீபம் ஏற்றும்போது, மகாலட்சுமி வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது நம்பிக்கையாகும்.. மேலும், இந்த விளக்கின் அடிபாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும் நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்கிறார்கள்.

    அகல்விளக்கு உணர்த்தும் தத்துவம்

    அகல் விளக்கு என்பது சூரியனை குறிக்கிறது.. அதில் ஊற்றப்படும் நெய் / எண்ணெய், சந்திரனை குறிக்கிறது.. விளக்கில் போடப்படும் திரி, புதன் ஆகும்.. அதில் எரியும் ஜுவாலையே செவ்வாய் எனப்படும்.. ஜுவாலையின் நிழல் ராகுவை குறிக்கிறது.. அந்த ஜூவாலையின் மஞ்சள் நிறம் குருவை குறிக்கிறது. ஜூவலை எரிந்து அணைந்தவுடன் மீதமுள்ள கரி, சனியை குறிக்கிறது.

    Advertisement

    வெளிச்சம் பரவும் ஞானமே கேது எனப்படுகிறது. திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது ஆசையை குறிக்கும் சுக்கிரன் ஆகும். அதாவது, ஒருவர் ஆசையை குறைத்துக்கொண்டால் சுகம் கிடைக்கும் என்பதே இதன் அர்த்தம். நம்மை அழிக்க செய்வதே ஆசைகள்தான்.. மோட்சம் கிடைக்காமல் நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்க செய்வது கர்மா.. இதுவே அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் ஆகும்.

    இன்பம் - துன்பம்

    மண்ணிலிருந்து உருவான இந்த உடல்,, ஒரு நாள் மண்ணோடு மண்ணாகப் போகும் என்ற பிரபஞ்ச நிஜத்தை அகல் விளக்குகள் நமக்கு உணர்த்துகின்றன. விளக்கை ஏற்றும்போது எரியும் சுடரானது, எப்போதும் மேல்நோக்கியே எரியும். இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? மனிதன் தன்னுடைய வாழ்வில் எவ்வளவு துன்பங்களை சந்தித்தாலும், அவனது எண்ணங்களும் ஆன்மீக தேடலும் எப்போதும் உயர்வை நோக்கியே இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை போதிக்கிறது.

    Advertisement

    எந்தெந்த எண்ணெய்

    விளக்கேற்ற பயன்படுத்தும் எண்ணெய்களைப் பொறுத்து அதற்கான ஆன்மீக பலன்கள் மாறுபடுவதாக கூறுகிறார்கள்.. தூய்மையான பசு நெய் கொண்டு விளக்கேற்றும்போது, அது அந்த வீட்டின் லட்சுமி கடாட்சத்தையும், பாசிட்டிவ் ஆற்றலையும் அள்ளித் தரும். நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றும்போது, அது நவகிரக தோஷங்களை, குறிப்பாக சனி தோஷத்தின் தாக்கத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் போன்ற பஞ்ச தீப எண்ணெய்களைப் பயன்படுத்தும்போது குலதெய்வ அருள் கிட்டும் என்பது ஐதீகமாகும்.

    பழைய அகல் விளக்கை ஏற்றலாமா? இந்த 10 பொருளையும் உடனே வீட்டில் இருந்து எடுத்துடுங்க.. பணக்கஷ்டம் வரும்
    Advertisement

    எந்தெந்த திசைகள்

    அதேபோல அகல் விளக்குகள் ஏற்றப்படும் திசைகளுக்கும் தனித்துவமான முக்கியத்துவம் உண்டு. கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் துன்பங்கள் நீங்கி இல்லத்தில் அமைதி நிலவும். மேற்கு நோக்கி ஏற்றினால் கடன் தொல்லைகள் அகலும் மற்றும் கிரக தோஷங்கள் நீங்கும். வடக்கு நோக்கி விளக்கேற்றினால் திருமணத் தடை நீங்கி, செல்வ வளம் பெருகும். ஆனால், எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கி விளக்கேற்றக் கூடாது என்பது ஆன்மீக விதியாகும்.

    ஏழைக்குடும்பங்களுக்கு வருமானம்

    இந்த அகல் விளக்கின் அவசியத்திற்கு மற்றொரு காரணமும் உண்டு.. களிமண்ணில் தண்ணீரை ஊற்றி, சூரிய வெளிச்சத்தில் அதை காய வைத்து, காற்றின் உதவி கொண்டு நெருப்பிலிட்டுதான், அகல் விளக்குகள் செய்யப்படுகின்றன.

    Advertisement

    அப்படிப்பார்த்தால் மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என 5 பூதங்களை கொண்டு தயார் செய்யப்படுவதே அகல் விளக்குகள் .. எனவே, இந்த அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது, அம்பாளுக்கு பிடித்தமான ஒன்று. அதுமட்டுமல்ல, அகல் விளக்கை வாங்குவதால், இதை விற்பனை செய்யும் ஏழைக்குடும்பங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. இது புண்ணியமாகும்.

    பூஜையில் அகல் விளக்கு உடைந்தால்? விளக்கு தவறி விழுவது நல்லதா? பழைய விளக்குகளை என்ன செய்வது? ஆன்மீகம்

    பழைய விளக்குகளை எப்படி சுத்தம் செய்வது

    அதேபோல அகல் விளக்குகள் ஏற்கனவே பயன்படுத்தியிருந்தாலும், அவைகளை சுத்தம் செய்து, மீண்டும் விளக்கேற்றலாம். இதற்கு பழைய அகல் விளக்குகளை சுடுநீரில் போட்டு, துணி துவைக்கும் சோப்பை கொட்டி ஊறவைக்கும். பிறகு இதனை நன்றாக தேய்த்து கழுவி காயவைக்கலாம்.

    அல்லது ஒரு பழைய தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடுசெய்து, அதன் மீது பழைய அகல்விளக்குகளை அனைத்தையும் கவிழ்த்து வைக்க வேண்டும். தோசைக்கல்லுடன், அகல் விளக்கும் சேர்ந்து சூடானதும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

    இந்த சூட்டிலேயே மண் அகல் விளக்கில் இருக்கும் எண்ணெய் எல்லாம் வெளியேறிவிடும். இதன்பிறகு ஒரு காட்டன் துணியை வைத்து துடைத்தெடுத்துவிடலாம். இதற்கு பிறகு, சுடுநீரில், துணிதுவைக்கும் பவுடரை கொட்டி, மண் அகல் விளக்குகளை ஊறவைத்து கழுவி, வெயிலில் காயவைக்கலாம். இது ஒரு வருடம்வரை பத்திரமாக இருக்கும்.

    English Summary

    Clay Lamp Benefits! Can You Use Old Lamps? Which Oil Is Best for Lighting?