Diwali 2026: தீபாவளி பண்டிகை எப்போது? கங்கா ஸ்நானம் செய்ய நல்ல நேரம் எது?

  • சென்னை: தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்ய சிறந்த நேரம் எது என்பதை பார்க்கலாம். மேலும் தீபாவளி பண்டிகை 8 ஆம் தேதியா இல்லை 9 ஆம் தேதியா என்பதில் பலருக்கு குழப்பம் உள்ளது, அதையும் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.

    Advertisement

    இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: தீபாவளி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான பண்டிகை! இது நாடு முழுவதும் உலகம் முழுவதும் கொண்டாடப்படக் கூடியது.

    Advertisement

    நரகாசுரனை கொன்ற நாள் தீபாவளி, ஆனால் நரகாசுரனை கொன்றதற்காக தீபாவளி கொண்டாடுவதில்லை. தீபாவளி கந்தபுராணத்தில் பேசப்பட்ட ஒரு பண்டிகை.

    கேதார கவுரி விரதத்தின் தொடர்ச்சியாக வருவதுதான் தீப ஒளி திருநாள். சிவபெருமானை ஒளிமயமாக வழிபடக் கூடிய நாள்! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரே ரூபமாக ஜோதி பிழம்பாக அடிமுடி காணா அண்ணாமலையாக நின்று காட்சியளித்த அற்புதமான ஜோதி தரிசனத்தை நாம் எல்லோருமே தெரிந்திருக்கிறோம்.

    இறைவன் ஜோதிமயமானவர் என்பதால் அந்த ஜோதியின் மூலமாகவே இறைவனை வழிபடுவது என்ற மரபை நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்ததுதான் இந்த தீபாவளி. தீப ஆவளி திருநாள் என்றால் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்தல் ஆகும். விரதமிருந்து சிவனை வழிபடக் கூடிய ஒரு முக்கியமான நாள்!

    Advertisement

    ஐப்பசி மாதம் வரக் கூடிய சதுர்த்தசி அமாவாசையை முன்னிட்டு வரக் கூடியதுதான் இந்த தீபாவளி. கங்கா ஸ்நானம் செய்யும் போது சதுர்த்தசி திதியில் செய்ய வேண்டும். தீபாவளிக்கு காலையில் எழுந்ததுமே நாம் செய்ய வேண்டியது கங்கா ஸ்நானம்!

    காலை 4 மணி முதல் 6 மணிக்குள் இந்த கங்கா ஸ்நானத்தை செய்துவிட வேண்டும். பெரியவர்களிடம் எண்ணெய்யை வாங்கி, தலையில் வைத்து, சீயக்காய் பொடி போட்டு வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். அன்றைய தினம் வெந்நீரில் கங்கா தேவி வாசம் செய்கிறாள்.

    திருநெல்வேலியில் களைகட்டும் தீபாவளி! பருத்திப் பால், கருப்பு கவுனி அரிசியில் அல்வா தயார்!
    Advertisement

    எல்லாராலும் கங்கைக்கு போய் குளிக்க முடியாது என்பதால் கங்கையே தீபாவளி அன்று நம் வீட்டு வெந்நீரில் வாசம் செய்கிறாள்! குளித்து முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்ததும் நம் பூஜையறையில் 15, 24, 51, 108 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கேற்பமும் பூஜை அறையின் அளவிற்கேற்பவும் விளக்குகளை அடுக்கி அதன் ஒளியில் நம் வீட்டு இறைவனை நாம் வழிபாடு செய்ய வேண்டும்.

    இத்தனை விளக்குகளை ஏற்ற முடியாவிட்டாலும் 6 விளக்குகளை ஏற்றி வைங்க. எத்தனை விளக்குகள் ஏற்றியிருந்தாலும் அதில் ஒரு விளக்கு நெய் விளக்காக இருக்க வேண்டும். நெய் விளக்கு வீட்டில் லட்சுமியின் வாசத்தை கொண்டு வந்து தரும். தீபாவளிக்கு உங்களால் முடிந்த பலகாரங்களை வைத்து சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்யுங்கள்.

    Advertisement

    புதுத் துணி வைத்து படைப்பதாக இருந்தால் அதன் மேல் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் , ஒரு பாக்கெட் பட்டாசு வைத்து படைத்துவிட்டு, பிறகு பட்டாசை வெடித்துவிட்டு பலகாரம் சாப்பிடுங்கள். அன்றைய தினம் திருமுறைகள், திருவாசகம், சிவபுராணம், அபிராமி அந்தாதி உள்ளிட்டவைகளை படித்து சுவாமி கும்பிடலாம்.

    நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி அமைந்துவிட்டது. கங்கா ஸ்நானம் செய்ய நேரம் காலை 4 மணி முதல் 6 மணி வரை, அல்லது 7.20 மணி முதல் 9 மணி வரையும், அல்து 10.30 மணி முதல் 11.45 மணி வரையும் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    What is the good time to do Ganga snan on Diwali festival? Here is the details.