Fly Dubai விமானத்தில் உயிருக்கு போராடிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் ஜபித்த அனுமன் சாலிஸா வரிகள் இதோ

  • சென்னை: ஃபிளை துபாய் விமான கடத்தலை தடுத்து 170- க்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்றி இந்திய விமானி ஸ்மித் மச்சார், பிரதமர் மோடியிடம் தனக்கு வலி ஏற்பட்ட போதெல்லாம் அனுமன் சாலிசா பாடினேன் என குறிப்பிட்டிருந்தாரே, அந்த அனுமன் சாலிசாவை நீங்களும் பாடலாமே! இதோ வரிகள்!

    Advertisement

    அனுமன் சாலிசா துளசிதாசர் இயற்றியது. இந்த மந்திரத்தை சொன்னாலே துன்பங்கள், துயரங்கள், தடைகள், தொல்லைகள் எல்லாமே தவிடுபொடியாகும் என்பது நம்பிக்கை.

    Advertisement

    அப்படிப்பட்ட அனுமன் சாலிசாவை தமிழில் பார்க்கலாம்.

    விருத்தம் (த்யானம்):

    மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
    குருநாதனே துணை வருவாய்
    வாயுபுத்ரனே வணங்கினேன்
    ஆற்றலும் ஞானமும் வரமும் தர
    வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே

    ஸ்ரீஹனுமன் சாலீஸா (தமிழில்)

    ஜயஹனுமானே..ஞானகடலே,
    உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)
    ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
    அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)
    மஹா வீரனே..மாருதி தீரனே..
    ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)
    தங்க மேனியில் குண்டலம் மின்ன,
    பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)
    தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
    இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)
    சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
    உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)
    அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
    ராம சேவையே..சுவாசமானவா.. (7)
    உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
    ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)

    Advertisement

    ராம லக்ஷ்மண..ஜானகி..,
    ஸ்ரீராம தூதனே மாருதி

    உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
    கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)
    அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
    ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)
    ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
    லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)
    உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
    பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)
    ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
    அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)
    மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
    நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)
    எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
    உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)
    சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
    ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)

    ராம லக்ஷ்மண..ஜானகி..,
    ஸ்ரீராம தூதனே மாருதி

    இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
    உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)
    கதிரவனை கண்ட கவி வேந்தனே
    கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)
    முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
    கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)
    உன்னருளால் முடியாதது உண்டோ
    மலையும் கடுகென மாறிவிடாதோ (20)
    ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
    ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)
    சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
    கண் இமை போல காத்தே அருள்வாய் (22)
    உனது வல்லமை சொல்லத் தகுமோ,
    மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)
    உன் திருநாமம் ஒன்றே போதும்
    தீய சக்திகள் பறந்தே போகும். (24)

    Advertisement

    ராம லக்ஷ்மண..ஜானகி..,
    ஸ்ரீராம தூதனே மாருதி

    ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
    துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)
    மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
    உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)
    பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
    ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)
    அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
    இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)
    நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
    உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)
    ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
    ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)
    அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
    அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)
    ராம பக்தியின் சாரம் நீயே
    எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)

    ராம லக்ஷ்மண..ஜானகி..,
    ஸ்ரீராம தூதனே மாருதி

    Advertisement

    ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
    பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)
    ராம நாமமே வாழ்வில் உறுதுணை
    அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)
    என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
    உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)
    நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
    துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)
    ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே
    ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)
    "ஹனுமான் சாலீஸா" அனுதினம் பாடிட
    பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)
    சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
    இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)
    அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
    துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)

    ராம லக்ஷ்மண..ஜானகி..,
    ஸ்ரீராம தூதனே மாருதி

    இதை தினமும் பாராயணம் செய்து வாருங்கள். அண்மையில் ஃபிளை துபாய் விமானக் கடத்தலை தடுத்து 170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் தனக்கு வலி ஏற்பட்ட போதெல்லாம் அனுமன் சாலீஸா பாடியதாக பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஃபிளை துபாய் விமானத்தை மோத வைத்து தாக்குதல் நடத்த ஓமன் நாட்டு துணை விமானி திட்டமிட்டிருந்த நிலையில் அதை இந்திய விமானி முறியடிக்கும் முயற்சியில் இந்திய விமானி மச்சார் மீது ஓமன் விமானி தாக்குதல் நடத்தியதால் தனது உயிரை பணயம் வைத்து 170-க்கும் மேற்பட்ட பயணிகளை மச்சார் காப்பாற்றினார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரிடம் நலம் விசாரிக்க பிரதமர் மோடி, வீடியோ காலில் பேசினார். அப்போது மச்சார் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார். அப்போது மச்சார் கண்கலங்கியபடி, எனக்கு ஏற்பட்ட காயங்களால் நான் சரிந்து விழுந்தேன். நான் எதுவும் செய்யாவிட்டால் மொத்த பயணிகளும் இறந்துவிடுவார்கள் என உணர்ந்தேன். நான் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வருகிறேன்.

    விமானத்தில் நடந்த அந்த தாக்குதலின் போது எனக்கு வலி ஏற்பட்ட போதெல்லாம் அனுமன் சாலிஸாவை பாடிக் கொண்டிருந்தேன். அவர்தான் என்னை காப்பாற்றினார் என்பது எனக்கு நன்றாக தெரியும் என தெரிவித்துள்ளார். விமானி மச்சார் சொன்னது முதல் அனுமன் சாலிஸாவை நிறைய பேர் கூகுளில் தேடி வருகிறார்கள்.

    English Summary

    Do you know the lyrics of Hanuman Chalisa in Tamil? This was told by Indian Pilot Smit Machchar when he was attacked in flight.