சென்னை: தமிழகத்தில் ஆண்டுக்கு அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 கோயில்களில் முதலிடத்தில் இருப்பது எந்த கோயில் தெரியுமா? அதிலும் எத்தனை கோடி வசூலாகியுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள உலக அளவில் புகழ் பெற்ற கோயில்களில் தினமும் ஆயிர்க்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
இந்த நிலையில் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆண்டுதோறும் அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 முன்னணி கோயில்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உண்டியல் காணிக்கைகள், திருவிழாக்கள், சிறப்பு தரிசனக் கட்டணங்கள், நன்கொடைகள் மூலம் இந்த வருவாய் ஈட்டப்படுகிறது. அவை எந்தெந்த கோயில் என்பதை பார்க்கலாம். இதில் டாப் 10- இல் இருப்பது பழனி தண்டாயுதபாணி திருக்கோயில்! இங்கு ஆண்டு வருமானம் ரூ.233.50 கோடி ஆகும். முருகனின் அறுபடை வீடுகளில் 3ஆவது படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். 2ஆவது இடம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு! ஆண்டு வருமானம் ரூ 139.06 கோடியாக உள்ளது. பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் இது. பவுர்ணமி கிரிவலம், கார்த்திகை தீபத் திருவிழா போன்ற விசேஷ நாட்களில் இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இருப்பது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகனின் இரண்டாவது படை வீடு! இங்கு ஆண்டு வருமானம் ரூ 131.38 கோடியாக உள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த கோயிலின் ஆண்டு வருமானம் ரூ 111.09 கோடியாகும். பூச்சொரிதல் திருவிழா, சித்திரை தேரோட்டம், ஆடித் திருவிழா உள்ளிட்டவை விசேஷமாக கொண்டாடப்படுகிறது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உண்டியல் வருமானம் 5ஆவது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ரூ 74.98 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, கார்த்திகை தீபம் உள்ளிட்டவை விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அது போல் 6ஆவது இடத்தில் அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு வருமானம் ரூ 73.72 கோடியாகும். இங்கு உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். மீனாட்சி திருக்கல்யாணமும் விமரிசையாக நடத்தப்படும். அது போல் உண்டியல் வசூலில் 7ஆவது இடத்தில் இருப்பது புண்ணிய தலமான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் ஆகும். இங்கு ரூ 64.33 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படுகிறது. காசியை போல் இங்கு திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது என புண்ணிய காரியங்கள் செய்யப்படுகின்றன. அது போல் வட இந்தியர்கள் ஏராளமானோர் இங்கு வருகை தருகிறார்கள். ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் 8ஆவது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டு வருமானம் ரூ 50.57 கோடியாகும். 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. வைகுண்ட ஏகாதசி, மார்கழி உற்சவங்கள் என பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். மதுரை கள்ளழகர் கோயில் 9ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த கோயிலின் ஆண்டு வருமானம் ரூ 34.20 கோடியாகும். சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் வைகை ஆற்றில இறங்கும் வைபவத்தை காண உலக நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். கடைசி இடத்தில் ஈரோடு சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் ஆண்டு வருமானம் ரூ 29.16 கோடியாகும். இங்கு ஆண்டுதோறும் பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம், அது போல் தீமிதி திருவிழாவும் விமரிசையாக நடப்பது வழக்கம்.பழனிதான் டாப்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
சமயபுரம் மாரியம்மன் கோயில்
திருத்தணி முருகன் கோயில்
மதுரை மீனாட்சி
ராமேஸ்வரம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர்
மதுரை அழகர்
ஈரோடு பண்ணாரி