ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரித்து வைப்பது ஏன்? சித்திரையின் மர்மம் என்ன?

  • சென்னை: ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் ஏன் பிரித்து வைக்கப்படுகிறார்கள்? உண்மையிலேயே ஆடி மாதத்தில் தாம்பத்ய உறவில் ஈடுபட்டு, சித்திரையில் குழந்தை பிறந்தால் வீட்டிற்கு ஆகாதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    ஆடி மாதம் என்றால் அம்மனுக்கு உகந்த மாதம், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப் பெருக்கு என பல்வேறு விசேஷங்கள் நடத்தப்படுகிறது.

    Advertisement

    அது போல் அம்மனுக்கு கூழ்வார்த்தலும் நடைபெறுவது வழக்கம். எனினும் குடும்ப விசேஷங்கள் எதுவும் இந்த ஆடி மாதத்தில் செய்யப்படாது. திருமணங்கள், வீடு கிரகபிரவேசம், பால் காய்ச்சுதல், சீமந்தம் உள்ளிட்ட எதுவும் செய்ய மாட்டார்கள்.

    அத்துடன் புதிதாக திருமணமானவர்களை ஆடி மாதத்தில் பிரித்து வைத்திருப்பார்கள். ஆடி 1 - 17 ஆம் தேதி பிறந்தது. அதற்கு முன்னர் ஒரு நல்ல நாள் பார்த்துவிட்டு வரிசை வைத்து பெண்ணை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள்.

    ஆடி மாதம் முடிந்ததும் ஆவணி மாதத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து மீண்டும் பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். அந்த வகையில் ஜூலை 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை ஆடி மாதம்தான். இந்த ஒரு மாத காலத்திற்கு புதிதாக திருமணமானவர்களை பிரித்து வைக்கிறார்கள்.

    Advertisement

    அதாவது திருமணமாகி உடனே கர்ப்பம் தரித்து விட்டால் பிரச்சினை இல்லை. திருமணமாகி குழந்தை பேறுக்கு தயாராகும் தம்பதியை பிரித்து வைப்பார்கள். அதாவது ஆடியில் கணவன், மனைவி கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும். இது வீட்டிற்கு ஆகாது என்பதால் அதை தவிர்க்கவே இந்த பிரிவு என்கிறார்கள்.

    ஆனால் அது தவறு என்கிறார்கள். யார் ஒருவரும் நல்ல நிலையில் இருப்பதும் கஷ்டப்படுவதும் அவரவர் தலையெழுத்து படிதான் நடக்குமே தவிர சித்திரை மாதம் குழந்தை பிறப்பதால் அல்ல என்கிறார்கள்.

    இது குறித்து சிலர் கூறுகையில், ஆடியில் கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும். அந்த மாதம் வெயில் அதிகம் இருக்கும். அதாவது ஏப்ரல், மே மாதங்களில் கத்தரி வெயில் இருக்கும்.

    Advertisement

    இதனால் அந்த சமயத்தில் பிறக்கும் குழந்தை வெயிலால் கஷ்டப்படும் என்பதால் இப்படி ஒரு விஷயத்தை சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கிறார்களாம். எனவே ஆடி மாதம் தம்பதியரை பிரித்து வைக்க இதுதான் காரணம் என சொல்லப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த காரணங்களை கமென்ட்டில் சொல்லுங்கள்.

    English Summary

    Do you know Why newly wed couples are asked to stay apart during Aadi Month? Here are some reasons.