கூடிய கூட்டங்கள் தலையா? கடல் அலையா? கிருத்திகை முருகனை காண குவிந்த பக்தர்கள்! திணறுது திருச்செந்தூர்


  • தூத்துக்குடி: உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினம் மற்றும் கிருத்திகை நட்சத்திரம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் ஆறு மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில், கோவிலில் விரைவாக தரிசனம் செய்ய வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    அறுபடை வீடுகளில் கண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் திருவிழா விசேஷ நாட்களை தவிர்த்து மற்ற நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில் இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் முருகப்பெருமானை வழிபட உகந்த நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரம் என்பதால், தமிழக மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

    கோவில் கடல் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் ஆறு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் முடி காணிக்கை செலுத்துவதற்கும் நாளைக்கு நெருப்பு புனித தீர்த்தத்தில் நீராடுவதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக காட்சியளிக்கிறது.

    Advertisement

    மேலும் திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. கோவிலில் வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால், வாகனங்களில் வந்த பக்தர்கள் புறநகர் பகுதியில் வாகனத்தை நிறுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் புறநகர் பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கோவிலில் விரைவாக பார்க்கிங் வசதி அமைத்து கொடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English Summary

    Thousands of devotees throng Tiruchendur Murugan Temple on Krithigai, facing long queues and severe traffic congestion.