பர்ஸில் பணம் தங்கவே இல்லையா? பிறந்த தேதிக்கு ஏற்ற இந்த ஒரு பொருளை வைத்து பாருங்களேன்

  • சென்னை: செல்வம் சேர வேண்டும், பணப் பிரச்சினைகள் குறைய வேண்டும், வருமானம் பெருக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கத்தான் செய்யும்.. எண் கணிதம் மற்றும் வாஸ்து நம்பிக்கைகளின்படி, நம்முடைய பிறந்த தேதிக்கு ஏற்ற சில பொருட்களை பர்ஸில் வைத்திருப்பது நல்ல பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. அதேபோல், பர்ஸை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதற்கும் சில எளிய விதிகள் சொல்லப்பட்டுள்ளன. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

    Advertisement

    மாதத்தின் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு எண் 1. சூரிய பகவான் இவர்களுக்குரியவர் என்பதால், மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படும் தங்க நாணயத்தை பர்ஸில் வைத்திருக்கலாம். அல்லது தங்க நிறத்தில் இருக்கும் லட்சுமி தேவியின் படத்தையும் வைத்துக்கொள்ளலாம்.

    Advertisement

    பர்ஸில் செல்வம் தங்க

    2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 2-க்கு உரியவர்கள். சந்திரன் இவர்களின் அதிபதி. இவர்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்வது முக்கியம். பர்ஸில் வெள்ளை யானையின் உருவத்தை வைத்திருப்பது செல்வம் பெருகுவதற்கான புதிய வாய்ப்புகளை ஈர்க்கும் என்பது நம்பிக்கை.

    3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 3. குரு பகவான் இவர்களின் அதிபதி. இவர்கள் மஞ்சள் கலந்த அரிசியை சிறிதளவு பர்ஸில் வைத்துக்கொள்வது வருமானம் அதிகரிக்க உதவும் என்று எண் கணிதம் கூறுகிறது.

    Advertisement

    ஆந்தை உருவம்

    4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 4. ராகு இவர்களின் அதிபதி. இவர்கள் உலோகத்தால் செய்யப்பட்ட சிறிய ஆந்தை உருவத்தை பர்ஸில் வைத்துக்கொள்ளலாம். இது செல்வத்தையும் நல்ல வாய்ப்புகளையும் ஈர்க்கும் என்பது நம்பிக்கை.

    5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 5. புதன் பகவான் இவர்களுக்குரியவர். இவர்கள் சிறிய சங்கு ஒன்றை பர்ஸில் வைத்துக்கொள்வது செல்வத்தை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

    பழைய ரசீதுகள், பேப்பர்கள்

    இதைத்தவிர, எந்த எண்ணில் பிறந்தவராக இருந்தாலும் பர்ஸை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. பழைய ரசீதுகள், தேவையில்லாத பேப்பர்கள், காலாவதியான சீட்டுகள் போன்றவற்றை அதில் சேர்த்து வைக்க வேண்டாம். பணத்தை கசக்காமல், ஒழுங்காக அடுக்கி வைக்கலாம். கிழிந்த அல்லது உடைந்த பர்ஸை பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம்.

    Advertisement

    கருப்பு அல்லது பழுப்பு நிற பர்ஸ் நிலைத்தன்மையை குறிக்கும் என்பது வாஸ்து நம்பிக்கை. பச்சை துணி அல்லது சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை பர்ஸில் வைத்திருப்பதும் பண ஈர்ப்புக்கான பரிகாரமாக கூறப்படுகிறது. சிறிய இலவங்கப்பட்டை துண்டையும் வைத்துக்கொள்ளலாம்.

    பர்ஸில் ஓம் - ஸ்வஸ்திக்

    மேலும், பர்ஸில் முன்னோர்களின் போட்டோக்களை வைப்பதை தவிர்த்து, ஓம் அல்லது சுவஸ்திக் போன்ற சின்னங்களை வைத்துக்கொள்ளலாம். பர்ஸை தரையில் போடாமல் உயரமான இடத்தில் வைப்பதும் நல்லது என்கிறார்கள்.

    வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதுடன், அன்று உப்பு வாங்குவதும் ஐஸ்வர்யத்தை பெருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வீட்டின் வாசல் அல்லது பணப்பெட்டியில் சிறிய பாத்திரத்தில் கல் உப்பு வைப்பதும் எதிர்மறை ஆற்றலை நீக்கும் என்று சொல்லப்படுகிறது..

    Advertisement

    பணத்தை செலவு செய்யும்போது நன்றியுடன் செலவு செய்வதும், முடிந்தவரை ஏழைகளுக்கும் பசியால் வாடுபவர்களுக்கும் உதவுவதும் நல்லது என பெரியவர்கள் சொல்வார்கள்.

    மஞ்சள் நிற பர்ஸ்

    அதேபோல, மஞ்சள் நிற பர்ஸ் செல்வத்தை ஈர்க்குமாம்.. மணி பர்ஸ் பயன்படுத்துபவர்கள் அதை காலியாகாமல், ஓரிரண்டு ரூபாய்களை அதில் போட்டு வைத்திருக்க வேண்டும். உங்கள் பர்ஸில் மற்றவர்களது பொருளை வைத்திருக்கக்கூடாது.. அந்த பொருட்களால், நெகட்டிவ் எனர்ஜி அதிகமாகிவிடும்.. அதனால் மற்றவர்கள் தந்த விசிட்டிங் கார்டு முதல் எந்த பில்லையும் வைத்திருக்க வேண்டாம். உங்களது மெடிக்கல் பில் என்றாலும்கூட, அதையும் பர்ஸில் வைக்ககூடாது.

    Advertisement

    கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகளுடன், 11 ரூபாய் பணம், பெருமாள் கோவிலில் தரும் 2 துளசி இலையை பர்ஸில் வைத்துக் கொள்ளலாம்.

    English Summary

    Wallet Vastu Tips.. Keep This One Thing Based on Your Birth Date to Attract Money and Wealth