ஒரு ரீசார்ஜ் போதும்.. இன்னொரு ரீசார்ஜ் இலவசம்.. ஏர்டெல் அறிவித்த Buy 1 Get 1 சலுகை!

  • சென்னை: ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.349 அல்லது ரூ.399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், அதே மதிப்பிலான இன்னொரு ரீசார்ஜை இலவசமாகப் பெறலாம். அதாவது ஒரு ரீசார்ஜ் கட்டணத்தில் இரு மாதங்களுக்கு வேலிடிட்டி பெறும் வகையில் 'Buy 1 Get 1 Free' சலுகையை ஏர்டெல் வழங்குகிறது.

    Advertisement

    இதற்கிடையே ஏர்டெல் நிறுவனம் தீபாவளி பரிசாக ஒரு அட்டகாசமான திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. Buy 1 Get 1 Free எனப்படும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு நாம் ரீசார்ஜ் செய்தால் இரு மாதங்களுக்கான பலனை பெறலாம். ரூ.349 அல்லது ரூ.399க்கு ரீசார்ஜ் செய்வோருக்கு மட்டுமே இந்த பலன் கிடைக்கும். அதாவது ரூ.349க்கு ரீசார்ஜ் செய்தால் 56 நாட்களுக்கு நெட் கிடைக்கும்.

    Advertisement

    ஒன் பிளஸ் ஒன்

    இந்த சலுகை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதுவும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில மொபைல் நம்பர்களுக்கு மட்டுமே இந்த ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலமாகவே இந்த சலுகையை பெற முடியும்.

    ஏர்டெல்லின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பயன்படுத்தலாம்.

    Advertisement

    சலுகைகள்

    இதனுடன் 12 மாதங்களுக்கான Adobe Express Premium சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.4,000 என கூறப்படுகிறது. மேலும், இலவச ஹலோ டியூன்ஸ், ஏர்டெல் சேஃப் சேவைகளும் கிடைக்கின்றன. இதில் ஸ்பேம் அழைப்புகளை உடனடியாக அடையாளம் காண்பது, மோசடி இணையதள லிங்குகளை தடுப்பது, ஓடிபி மோசடிகள் தொடர்பான எச்சரிக்கைகளை வழங்குவது போன்ற பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

    அன்லிமிடெட் டேட்டா

    ரூ.399 திட்டத்தில் தினசரி டேட்டா வரம்பு இல்லை. அன்லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா பெற முடியும். இதனால் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி, 4ஜி மொபைல் பயன்படுத்துபவர்களும் இந்த திட்டத்தின் டேட்டா பலனை பெறலாம். இதிலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 12 மாத Adobe Express Premium சந்தா ஆகியவை அடங்கும்.

    Advertisement

    எப்படி சரிபார்ப்பது?

    உங்கள் மொபைலில் Airtel Thanks செயலியை ஓபன் செய்து ரூ.349 அல்லது ரூ.399 திட்டத்தை பார்க்க வேண்டும். அந்த திட்டத்தின் அருகில் '1+1 Recharge Free' என்ற என்று இருந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். அப்படி எதுவும் இல்லையென்றால், உங்கள் நம்பருக்கு இன்னும் இந்த சலுகை இல்லை என்று அர்த்தம்.

    இரண்டாவது ரீசார்ஜ் எப்படி கணக்கில் சேர்க்கப்படும் என்பது குறித்து விரிவான விளக்கம் இல்லை. ஜியோவின் இதேபோன்ற சலுகையில் இலவச ரீசார்ஜ் வவுச்சராக வழங்கப்பட்டு, ஏற்கெனவே உள்ள திட்டத்தின் வேலிடிட்டி முடிந்ததும் தானாக அது நீடிக்கப்பட்டது. ஏர்டெல்லும் இதே முறையை பின்பற்றும் என தெரிகிறது.

    English Summary

    Airtel is offering a limited-period Buy 1 Get 1 Free recharge deal on select Rs.349 and Rs.399 prepaid plans(ஏர்டெல் இலவச ரீசார்ஜ்): Airtel recharge plan latest news in tamil.