ஆப்பு வைக்கும் ஏர்டெல்.. இனி இஷ்டத்திற்கு ஹாட்ஸ்பாட் போட்டு அன்லிமிடெட் யூஸ் பண்ண முடியாது!


  • சென்னை: இப்போது கிட்டத்தட்ட எல்லா டெலிகாம் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 5ஜி இலவசமாகவே வழங்குகிறார்கள். இருப்பினும். ஒரு ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஹாட்ஸ்பாட் போடும்போது தங்களால் 5ஜி பயன்படுத்த முடிவதில்லை என்று குற்றஞ்சாட்டிய நிலையில், இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தின் விதிகள் இப்போது பேசுபொருளாகியுள்ளது.

    Advertisement

    ஏர்டெல் நிறுவனம் அன்லிமிடெட் 5G டேட்டா என்றே விளம்பரப்படுத்துகிறது. இதனால் பலரும் பிராட்பேண்ட்டிற்கு தனியாக ரீசார்ஜ் செய்வதை தவிர்த்துவிட்டு, செல்போன் ரீசார்ஜ்ஜை வைத்தே இணையத்தை பயன்படுத்தி வந்தனர். இருப்பினும், சமீப காலமாக அன்லிமிடெட் 5ஜி கிடைப்பதில்லை என்று பரவலாக புகார் எழுந்தது.

    Advertisement

    ஏர்டெல்

    இந்தச் சூழலில் தான் ஏர்டெல் நிறுவனத்தின் 5G திட்டங்கள் குறித்து சில முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் மற்ற சாதனங்களுடன் பகிர்ந்து பயன்படுத்த முடியாதாம். மேலும், சில குறிப்பிட்ட திட்டங்களில் அதிகபட்சமே 300GB வரை மட்டும் தான் பயன்படுத்த முடியுமாம். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்சவ் டெக்கி என்பவர் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விதிமுறைகளின் ஸ்கிரீன்ஷாட்டை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் தான் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது ஏர்டெல் வழங்கும் அன்லிமிடெட் 5G டேட்டாவை மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் மற்ற சாதனங்களுக்குப் பகிர முடியாதாம். இதுவே வாடிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு இந்த நிபந்தனை முன்பே தெரியாது என்றும் அன்லிமிடெட் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இதுபோல போலியாக ஏமாற்றக்கூடாது என சாடி வருகிறார்கள்.

    Advertisement
    டவரில்லாத இடத்திலும் பயன்படுத்தலாம்.. பிஎஸ்என்எல் சேட்டிலைட் போன் அறிமுகம்! ஐபோனுக்கு நிகரான விலை

    ஏர்டெல் 5G பிளஸ்

    இது மட்டுமின்றி ஏர்டெல், அன்லிமிடெட் 5G டேட்டா என்பது ஏர்டெல் 5G பிளஸ் நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் மட்டுமே செயல்படுமாம். 5G கவரேஜ் இல்லாத இடங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது திட்டத்தின் வழக்கமான டேட்டா வரம்பை மட்டுமே பயன்படுத்த முடியும். அது முடிந்துவிட்டால் தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும்! இது அன்லிமிடெட் 5G டேட்டாக்குள் வராது.

    AIஆல் பறிபோன லட்சக்கணக்கான வேலைகள்? இந்தியாவில் நிலைமை ரொம்பவே மோசம்.. என்ன செய்தால் தப்பிக்கலாம்?
    Advertisement

    லிமிட்

    இது ஒரு பக்கம் இருக்க ரூ.399 ரீசார்ஜ் தொடர்பாகவும் விவாதம் எழுந்துள்ளது. நெட்டிசன் ஒருவர் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை அனுப்பியதாக சொல்லி ஒரு மெயிலை இணையத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் ரூ.399 திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா என குறிப்பிடப்பட்டு இருந்தாலும்.. 30 நாட்களுக்குள் 300GB வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு மேல் பயன்படுத்தப்பட்டால் அது வணிக ரீதியான பயன்பாடாக கருதப்படும் என கூறப்பட்டு இருந்தது.

    முடிவுக்கு வரும் அன்லிமிடெட் டேட்டா.. இனி ஒவ்வொரு ஜிபிக்கும் காசு கட்டணம்? அதிர்ச்சி மாற்றம்
    Advertisement

    அதிருப்தி

    இது தொடர்பாகவும் நெட்டிசன்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். 300GB என்று வரம்பு இருந்தால் அதை எப்படி அன்லிமிடெட் திட்டம் என்று கூறலாம்? என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக அதிகளவு டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் வீட்டில் பிராட்பேண்ட் வசதி இல்லாமல் மொபைல் ஹாட்ஸ்பாட்டை நம்பி வேலை செய்பவர்கள் இந்த விதிகளால் கொந்தளித்து பேய் இருக்கிறார்கள்..

    மேலும் சிலர் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களை ஒப்பிட்டு, ஏர்டெல் அதிக கட்டணம் வசூலிப்பதோடு மட்டுமல்லாமல் 300GB வரம்பு மற்றும் ஹாட்ஸ்பாட் கட்டுப்பாடு போன்ற நிபந்தனைகளையும் விதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஏர்டெல் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் வரவில்லை.

    English Summary

    Airtel has clarified that customers using its Unlimited 5G Data offer cannot share the unlimited data(ஏர்டெல் அன்லிமிடெட் 5G டேட்டா கட்டுப்பாடு): Airtel Unlimited 5G Data latest news in tamil.