ஆரம்ப விலையே ரூ.1.50 லட்சம்.. ஐபோன் 18 ரேட்டை கேளுங்க.. கண்டிப்பா தலையே சுத்திடும்!

  • சியாட்டில்: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 18 சீரியஸ் இன்றிரவு வெளியாகிறது. உலகெங்கும் இந்த ஐபோன் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது. இதற்கிடையே இந்த ஐபோன்களின் விலை என்னவாக இருக்கும்.. குறிப்பாக இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் விலை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது

    Advertisement

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் அறிமுக நிகழ்ச்சி மீது உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குபெர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட புதிய சாதனங்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோனும் அறிமுகமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    ஐபோன் 18 ப்ரோ சீரிஸ்

    ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக எந்த விவரங்களையும் உறுதி செய்யாத போதிலும் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் குறித்த பல தகவல்கள் முன்கூட்டியே லீக் ஆகியுள்ளன. புதிய A20 Pro சிப், மேம்படுத்தப்பட்ட கூலிங் சிஸ்டம், சிறிய டைனாமிக் ஐலாண்ட், புதிய கலர் மற்றும் கேமராவில் மிக பெரிய மாற்றம் ஆகியவை முக்கிய அப்கிரேட்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே இப்போது அதன் விலை, குறிப்பாக இந்தியாவில் அதன் விலை குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது. முன்னதாக ஐபோன் 17 ப்ரோ அமெரிக்காவில் 1,099 டாலர் மற்றும் இந்தியாவில் ரூ.1,34,900 முதல் விற்பனை செய்யப்பட்டது. இப்போது உதிரிப்பாகங்கள் மற்றும் ரேம் விலை அதிகரித்துள்ள நிலையில், புதிய 2nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் A20 ப்ரோ சிப் ரேட் காரணமாக ஐபோன் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    ஆரம்ப விலை

    அமெரிக்காவிலேயே இந்தாண்டு ஐபோன் 18 ப்ரோவின் ஆரம்ப விலை 100 டாலர் அதிகரித்து 1,199 டாலராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.1,44,900 ஆக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் ஐபோன் 18 ப்ரோவின் விலை 1,249 முதல் 1,299 டாலராகவும், ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 1,349 முதல் 1,399 டாலராகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் சமீபத்தில் தனது மேக் சாதனங்களின் விலையை உயர்த்திருந்தது. அதை வைத்த பார்க்கும்போது ஐபோன் விலை கட்டாயம் உயரும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. எவ்வளவு உயரும் என்பதே இப்போது விவாதமாகியுள்ளது.

    Advertisement

    புதிய தொழில்நுட்பம்

    ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ ஆகிய இரு மாடல்களிலும் புதிய A20 ப்ரோ சிப் இடம்பெறலாம் என சொல்லப்படுகிறது. 2nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த சிப் செயல்திறன் மற்றும் பேட்டரி பயன்பாட்டில் மேம்பாட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேம்படுத்தப்பட்ட வேப்பர் சாம்பர் கூலிங் சிஸ்டம் இதில் இருக்கும். இதனால் கேமிங் மற்றும் AI சார்ந்த அதிக எனர்ஜி தேவைப்படும் பணிகளின்போது போனில் உருவாகும் வெப்பத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியும். மேலும், புதிய C2 மோடமும் இடம்பெறலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    Advertisement

    டிசைனில் பெரிய மாற்றங்கள் இருக்காதாம். ஐபோன் 17 ப்ரோ சீரிஸை போலவே இருக்கும். ஆனால், டைனமிங் ஐலாண்ட் சிறியதாக மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. அதை சுற்றியுள்ள பகுதியை ஆப்பிள் சிறப்பாக பயன்படுத்தி, ஒரே நேரத்தில் கூடுதல் தகவல்களை காண்பிக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளதாம்.

    கேமரா

    ஐபோன் 18 ப்ரோ மேக்ஸில் mechanical அல்லது variable-aperture கேமரா இடம்பெறலாம் என்பது சொல்லப்படுகிறது.. இதன் மூலம் லென்ஸுக்குள் நுழையும் ஒளியின் அளவை கட்டுப்படுத்த முடியும். இது கேமரா அனுபவத்தை மொத்தமாக மாற்றிப்போடும். கேமரா கண்ட்ரோல் பட்டனிலும் மாற்றங்கள் இருக்கலாம். இருப்பினும், அதன் பிரஷர் சென்சிங் வசதி தொடரும் என கூறப்படுகிறது.

    English Summary

    Apple is expected to unveil the iPhone 18 Pro and iPhone 18 Pro Max, with reports suggesting higher prices in the US and India(ஐபோன் 18 ப்ரோ விலை): iPhone 18 Pro price in India news in tamil.