போடு தகிட தகிட.. அட்டகாச அம்சங்களுடன் iPhone 18 Pro, iPhone 18 Pro Max! விலையை கேட்டா தலை சுத்திரும்

  • சென்னை: கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள் தலைமையகத்தில் நடைபெற்ற சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்வில் ஆப்பிள் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புதிய தலைமுறை ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன? விலை எவ்வளவு? என்னென்ன வசதிகளை ஆப்பிள் அறிமுகப்படுத்தி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்..

    Advertisement

    இந்த 18 ப்ரோ மாடலில் கேமரா, செயல்திறன், பேட்டரி மற்றும் வெப்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக புகைப்படம் எடுப்பவர்களுக்கு கூடுதல் கண்ட்ரோல்களை வழங்கும் வகையில் கேமராவில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    அதுமட்டுமில்லாமல் தற்போது ஏஐ மூலம் டிஜிட்டல் முறையில் புகைப்படங்களை எடுப்பது அதிகரித்து வரும் நிலையில் அந்த புகைப்படம் உண்மையானதா அல்லது ஏஐ மூலம் மாற்றப்பட்டதா என்பதை கண்டறிய உதவும் அதிநவீன அப்டேட்டும் இந்த ஐபோனில் இடம் பெற்றுள்ளது.

    இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோ மாடல்களின் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெரிய திரை மற்றும் கூடுதல் அம்சங்களைக் கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸின் ஆரம்ப விலை ரூ.1,79,900 ஆக இருக்கும் இரண்டு மாடல்களுமே 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி மற்றும் 2 டிபி என 5 வகை சேமிப்பு திறன் கொண்ட மாடல்களில் கிடைக்கும். இந்த போன்களுக்கான முன்பதிவு இந்தியாவில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல்தொடங்கும் என்றும், செப்டம்பர் 18ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    புதியஐபோன் 18 ப்ரோ சீரிஸின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று அதன் கேமரா தான். குறிப்பாக, புதிய 48MP Fusion Main Camera அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் ஐபோனில் இதுவரை வழங்கப்படாத Adjustable Aperture வசதி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் கேமராவுக்குள் செல்லும் ஒளியின் அளவை நாம் கண்டுரோல் செய்ய முடியுமாம். மேலும், புகைப்படத்தின் பேக்ரவுண்ட் எவ்வளவு அளவுக்கு ஃபோகஸில் இருக்க வேண்டும் என்பதிலும் கூடுதல் கண்ட்ரோல் கிடைக்கும்.

    புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பவர்களுக்காக கேமரா அப்ளிகேஷனிலேயே Pro Controls வசதியை ஆப்பிள் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாம், Shutter Speed, Aperture, White Balance, Exposure போன்ற முக்கியமான கேமரா கண்ட்ரோல்களை மாற்ற முடியும்.

    Advertisement

    ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு மாடல்களிலும் புதிய A20 Pro Chip உள்ளது. இந்த சிப் 2nm தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. முந்தைய தலைமுறை A19 Pro சிப்புடன் ஒப்பிடும்போது Memory Bandwidth சுமார் 50 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

    குறிப்பாக, அதிக நேரம் கேம் விளையாடுவது அல்லது வீடியோ எடிட்டிங் போன்ற பணிகளை மேற்கொள்ளும்போது ஸ்மார்ட்போன் சூடாவது வழக்கமான பிரச்சனையாக உள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் iPhone 18 Pro மாடல்களில் புதிய தலைமுறை Vapor Chamber Cooling System பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போன் அதிகமாக சூடாவதை கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் பயன்படுத்தலாம் என்கிறது ஆப்பிள்.

    English Summary

    iPhone 18 Pro and Pro Max feature 48MP camera, A20 Pro chip, adjustable aperture and advanced cooling with premium pricing.