ஒவ்வொரு ஆண்டும் ரீசார்ஜ் ரேட் ஏறினாலும் கவலை இல்லை.. ஜியோ வாடிக்கையாளர்கள் செம குஷி!

  • மும்பை: ரிலையன்ஸ் ஜியோ ஒரே ரீசார்ஜில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு வேலிடிட்டி உள்ள ₹10,000 மதிப்பிலான புதிய நீண்டகால ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தினமும் அதிவேக டேட்டா, அன்லிமிடெட் கால்கள் என பல பலன்கள் கிடைக்கும். இதனுடன் ஓடிடி, கிளவுட் ஸ்டோரேஜ் வசதிகளும் நமக்கு கிடைக்கும். இந்த பிளானில் நமக்கு என்னவெல்லாம் கிடைக்கும். இது யாருக்கு செட் ஆகும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    இந்த காலத்தில் செல்போன் என்பது கிட்டத்தட்ட நமக்கு ஆறாவது விரல் போல மாறிவிட்டது. இதனால் மொபைல் டேட்டா என்பது கிட்டத்தட்ட அத்தியாவசிய ஒன்றாகவே மாறியுள்ளது. மாதாமாதம் ரீசார்ஜ் என்பது கட்டாயம் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் ரீசார்ஜ் கட்டணம் திடீர் திடீரென உயர்த்தப்படுவது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தையே ஏற்படுத்துவதாக உள்ளது.

    Advertisement

    3 ஆண்டுகள்

    இந்த சூழலில் தான் ஜியோ நிறுவனம் ஒரு மெகா ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 36 மாதங்களுக்கு, அதாவது 3 ஆண்டுகளுக்கு வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் நமக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கும். இதில் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும் டெலிகாம் நிறுவனங்கள் திடீர் திடீரென ரேட் ஏற்றுவார்கள் என்ற கவலைப்படத் தேவையில்லை. எதிர்காலத்தில் கட்டணங்கள் உயர்ந்தாலும் உங்களுக்கு 3 ஆண்டுகள் தடையில்லாமல் சேவை கிடைக்கும்.

    ஜியோவின் இந்த ₹10,000 மதிப்பிலான 3 ஆண்டு திட்டம் இன்று, நவம்பர் 7 முதல் நாடு முழுவதும் அறிமுகமாகிறது. வாடிக்கையாளர்கள் MyJio செயலி, Jio.com அதிகாரப்பூர்வ இணையதளம், ஜியோ ஸ்டோர் என எங்கு வேண்டும் என்றாலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் 3 ஆண்டுகளுக்கான நீண்டகால வேலிடிட்டி தான்.

    Advertisement

    என்ன கிடைக்கும்

    வேலிடிட்டி: 3 ஆண்டுகள் (36 மாதங்கள்)

    கால்: அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்

    தினசரி டேட்டா: 2.5GB அதிவேக டேட்டா

    5G: அன்லிமிடெட் 5G டேட்டா

    எஸ்எம்எஸ்: தினமும் 100 SMS

    ஓடிடி

    அதாவது, தினமும் 2.5GB அதிவேக டேட்டா கிடைப்பதுடன், தகுதியான 5G நெட்வொர்க் மற்றும் 5ஜி செல்போன் இருந்தால் அது அன்லிமிடெட்டாக கிடைக்கும். இதுபோல சில ஓடிடி தளங்களும் இதில் இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோஹா்டஸ்டார் மொபைல் பேக் + ஹாலிவுட்: விளையாட்டு போட்டிகள், ஹாட்ஸ்டார் ஒரிஜினல் நிகழ்ச்சிகள், பிரீமியம் தொடர்கள் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்க்கலாம்.

    Advertisement

    கேன்வா ப்ரோ லைட்: டிசைன் டெம்ப்ளேட்கள், கிரியேட்டிவ் வசதிகள் 12 மாதங்களுக்கு கிடைக்கும்.

    ஜியோ ஏஐ க்ளவுட்: போட்டோ, ஆவணங்கள் மற்றும் பைல்ஸ்கலை சேமிக்க 50GB இலவச கிளவுட் ஸ்டோரேஜ்.

    யாருக்கு பலன் தரும்

    அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்கள், நீண்டகாலம் ஒரே நெட்வொர்க்கை பயன்படுத்த திட்டமிடுபவர்களுக்கு இது பலன் தரும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் இப்போது கட்டணம் உயர்த்தப்படுகிறது. அல்லது குறைந்த மதிப்பிலான திட்டங்கள் நீக்கப்படுகிறது. அந்த தொல்லைகளில் இருந்து தப்பிப்போருக்கும் இது உதவியாக இருக்கும். ₹10,000ஐ ஒரே நேரத்தில் செலுத்த வேண்டியிருந்தாலும், 36 மாதங்களுக்கு சர்வீஸ் கிடைப்பது நமக்கு லாபம் தான்.

    English Summary

    Reliance Jio is introducing a long-term prepaid plan worth around ₹10,000 from November 7(ஜியோ 3 ஆண்டுகள் மெகா ரீசார்ஜ் திட்டம்): Jio Rs 10,000 Recharge latest news in tamil.