அமெரிக்க உளவு அமைப்பை ஊடுருவிய AI.. ஒரு நொடி அதிர்ந்த அதிகாரிகள்.. என்ன நடந்தது!


  • வாஷிங்டன்: இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ குறித்த பேச்சுகளே இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அமெரிக்காவின் உளவு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு சிஸ்டம்களில் இருக்கும் குறைகளை வெறும் சில மணி நேரத்தில் ஆந்த்ரோபிக் நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த சோதனை முடிவுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

    Advertisement

    ஏஐ பயன்பாடு உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. நாம் கற்பனை கூட செய்து பார்க்காத துறைகளிலும் கூட ஏஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் சில சிக்கல்கள் இருந்தாலும் கூட பல பிரச்சினைகளை நம்மால் நொடிகளில் தீர்க்க முடிவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

    Advertisement

    பிழைகள்

    இதற்கிடையே அமெரிக்க அரசின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கம்யூட்டர் அமைப்புகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'மைதோஸ்' (Mythos) ஏஐ மாடல் அம்பலப்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    அமெரிக்க உளவு அமைப்புகளுடன் இணைந்து புராஜெக்ட் கிளாஸ்விங் (Project Glasswing) என்ற திட்டத்தின் கீழ், மைதோஸ் ஏஐ மாடலை பயன்படுத்தி சோதனைகளை நடத்தப்பட்டன. அதாவது ஹேக்கர்கள் வெளியில் இருந்து ஹேக் செய்யும் முன்பே, ஏஐ வைத்து என்ன மாதிரியான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன என்பதைக் கண்டறிவதே இதன் நோக்கமாகும். அதற்காகத் தான் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    Advertisement

    சில மணி நேரம்

    அதிலும் இந்த குறைபாடுகளை எல்லாம் கண்டுபிடிக்க மைதோஸ் ஏஐ மாடல் பல வாரங்கள் எல்லாம் எடுத்துக் கொள்ளவில்லையாம். வெறும் சில மணி நேரங்களிலேயே இதில் இருக்கும் குறைபாடுகளைக் கண்டுபிடித்துவிட்டது. அனைத்து சீக்ரெட் சிஸ்டம்களிலும் ஊடுருவிவிட்டதாம். மைதோஸ் சில மணிநேரங்களுக்குள் பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்த போதிலும், அந்த குறுகிய நேரத்திற்குள் ஏஐ மாடலால் சைபர் தாக்குதலை நடத்த முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து வெள்ளை மாளிகை, ஆந்த்ரோபிக் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆகியவை எந்தவொரு விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.

    Advertisement

    விரிசல்

    இதுபோல ஆய்வுகள் எல்லாம் வெற்றிகரமாக நடந்தாலும் கூட அமெரிக்க அரசுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கும் இடையே நல்லுறவு இல்லை. இரு தரப்பிற்கும் இடைய அமெரிக்க அரசுக்கும் இடையே விரிசல் நிலவி வருகிறது. அதாவது அமெரிக்காவில் உளவு பார்க்கவும் சுயமாக முடிவெடுத்துத் தாக்கும் ஆயுத அமைப்புகளிலும் தனது ஏஐ மாடல்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்த ஆந்தரோபிக் நிறுவனம் அனுமதி மறுத்துவிட்டது. இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்க அரசு அந்த நிறுவனத்தைத் தேசிய பாதுகாப்பு பிளாக் லிஸ்ட்டில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது..

    மேலும், தேசியப் பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி, தனது அதிநவீன 'மைதோஸ்' மற்றும் 'ஃபேபிள்' ஏஐ மாடல்களை அமெரிக்காவைத் தாண்டி வெளிநாடுகளில் இருப்போர் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு இந்த மாத தொடக்கத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Under Project Glasswing, Anthropic's 'Mythos' AI tool successfully penetrated highly secure US defense computer networks(அதிர வைக்கும் அமெரிக்க ஏஐ ஆய்வு): AI Model Exposes Vulnerabilities in US defense.