வெறும் ₹200 கட்டினால் போதும் ரூ.1,500க்கு பலன்கள்! ஜியோ கொட்டி தரும் ஆஃபர்.. ஆனா ஒரு குட்டி கண்டிஷன்

  • சென்னை: டெலிகாம் சந்தையில் அதிரடி ஆஃபர்களை வாரி வழங்குவதில் பெயர்போன ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நேற்று (புதன்கிழமை) இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஜியோ ஓடிடி பாஸ் (Jio OTT Pass) என்ற ஒரு முக்கியமான பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் வெறும் ஒரே ரீசார்ஜில் பொழுதுபோக்கு, லைவ் டிவி என பல சலுகைகளைப் பெற முடியும்.

    Advertisement

    இந்த காலத்தில் நம்மில் பலரும் ஓடிடி பக்கம் திரும்பிவிட்டோம். கேபிள்கள் ஆதிக்கம் குறைந்து, ஓடிடி ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஆனால், ஓடிடிக்கு ரீசார்ஜ் செய்வதே தலைவலி தான். நாம் விரும்பும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் இருக்கும். அவை அனைத்திற்கும் தனித்தனியாகப் பணம் கட்டினால் பெரிய தொகை வந்துவிடும். இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையிலேயே ஜியோ ஓடிடி பாஸ் என்ற புதிய ஒருங்கிணைந்த சந்தாவை கொண்டு வந்துள்ளது.

    Advertisement

    ரூ.200 மட்டும்

    பொதுவாகத் தனித்தனியாக ரீசார்ஜ் செய்தால் மாதம் கிட்டத்தட்ட ₹1,500 வரை செலவாகக்கூடிய பிரீமியம் சேவைகளை, ஜியோ நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வெறும் ₹200க்கு வழங்குகிறது. ரூ.200 செலுத்தி ஆட் ஆன் போல போட்டு கொண்டால்.. 28 நாட்களுக்கு இந்த பாஸ் கிடைக்கும். நாடு முழுக்க உள்ள வாடிக்கையாளர்கள் இந்த பிளானை மை ஜியோ ஆப், ஜியோ இணையதளம் மற்றும் பிற ரீசார்ஜ் தளங்கள் மூலம் உடனடியாக ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.

    என்னவெல்லாம் கிடைக்கும்

    இந்த ₹200 ஜியோ ஓடிடி பாஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சலுகைகள் கிடைக்கும். குறிப்பாகப் பிரதான ஓடிடிக்களான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் ஆகியவை இலவசமாகக் கிடைக்கிறது. இதுதவிர, ஜியோடிவி ஆப் வழியாகச் சோனி லிவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி+, சன் நெக்ஸ்ட், ஃபான்கோட், ஹோய்சோய் உள்ளிட்ட மேலும் 12 ஓடிடி தளங்களை வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பார்க்க முடியும்.

    Advertisement

    இந்த பிளானின் ஆகச்சிறந்த ஹைலைட் அம்சமாக யூடியூப் பிரீமியம் சந்தாவும் இதனுடன் வருகிறது. இதன் மூலம் விளம்பரங்கள் இல்லாத வீடியோக்கள், பேக்கிரவுண்ட் ப்ளேபேக் மற்றும் ஆஃப்லைன் டவுன்லோடு வசதிகளைப் பயனர்கள் எவ்விதக் கூடுதல் கட்டணமுமின்றி அனுபவிக்கலாம்.

    லைவ் சேனல்கள்

    ஓடிடி தளங்கள் மட்டுமன்றி, ஜியோடிவி ஆப் மூலம் 1,000க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை லைவ்வாக பார்க்கும் வசதியும் இதில் வழங்கப்படுகிறது. இதில் ஜியோஸ்டார், சோனி, சன் டிவி நெட்வொர்க், வார்னர் பிரதர்ஸ் மற்றும் ஈடிவி போன்ற முன்னணி நெட்வொர்க்குகளின் 150க்கும் மேற்பட்ட கட்டணச் சேனல்களையும் கூட இலவசமாக நம்மால் பார்க்க முடியும்.

    Advertisement

    கனெக்டிவிட்டியைப் பொறுத்தவரை, யூசர்களுக்கு 30 ஜிபி அதிவேக 4ஜி/5ஜி டேட்டா கிடைப்பதுடன், வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) பலன்களும் அள்ளி வழங்கப்படுகின்றன.

    நோட் செய்ய வேண்டியது

    ஆஃபர் லாபம்தான், ஆனா இந்த ஒரு விஷயத்தை நோட் பண்ணுங்க.. அதாவது முன்பே சொன்னது போல ஜியோ அறிவித்துள்ள இந்த ஓடிடி பாஸ் என்பது ஒரு ஆட்-ஆன் தான். இதனை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால், உங்களது ஜியோ சிம்மில் ஏற்கனவே ஏதேனும் ஒரு அடிப்படை ரீசார்ஜ் திட்டம் கண்டிப்பாக ஆக்டிவாக இருக்க வேண்டும். மேலும், இதில் வாய்ஸ் காலிங் வசதிகள் எதுவும் தனியாக வராது என்பதால், வழக்கமான காலிங் பிளான் வைத்திருப்பவர்கள் ஓடிடிக்களை பார்க்க இந்த பேக் சரியானதாக இருக்கும்.

    English Summary

    Reliance Jio has introduced a new Jio OTT Pass add-on bundle priced at Rs 200, offering access to Prime Video, Hotstar, YouTube Premium(ஜியோ ஓடிடி பாஸில் உள்ள சிறப்புகள்): All things to know about Jio OTT Pass.