சென்னை: ஜனனிக்கு 2 ஆண் வாரிசுகள் இருப்பது போல, மனோஜுக்கும் 2 பெண் வாரிசுகள் உள்ளனர். தாத்தா என்ற முறையில் பேரன்களுக்கு இருக்கும் அதே சம உரிமை பேத்திகளுக்கும் இரத்த உறவு முறையில் உண்டு. ஆனால், வாரிசுதாரர்களான பேத்திகளுக்கு சேர வேண்டிய பெரும் பங்கு மறுக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நந்தனாவுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து கூறியிருக்கிறார்.
Aram Naadu சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு சொந்தமாக தமிழ்நாட்டில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன. கடந்த 45 வருடங்களுக்கு முன்னால் அவர் வாங்கிப் போட்ட நிலங்கள் மற்றும் வீடுகளின் சந்தை மதிப்பு இன்று 1000 மடங்கு வரை உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் பாரதிராஜாவுக்குச் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிற்குச் சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நீலாங்கரையில் உள்ள அவரது வீடானது சுமார் 4 கிரவுண்ட் பரப்பளவு கொண்டது ஆகும். அதன் தற்போதைய மதிப்பு மட்டுமே 60 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அதற்கு அருகிலேயே 9 கிரவுண்ட் பரப்பளவு கொண்ட காலி மனை ஒன்றும் அவருக்குச் சொந்தமாக இருந்தது. மேலும் சென்னை தி.நகர் கிருஷ்ணா தெருவில் உள்ள அவரது முதலாவது வீடு, சேத்துப்பட்டு பகுதியில் உள்ள வீடு மற்றும் தி.நகர் நாயுடு ஹால் அருகில் உள்ள ஒரு ஸ்டுடியோ, வளசரவாக்கத்தில் அம்பிகா ராதா ஸ்டுடியோ அருகில் உள்ள இடம் எனச் சென்னையின் முக்கியப் பகுதிகளில் ஏகப்பட்ட சொத்துக்கள் அவருக்கு இருந்தன. இவை தவிர தேனி காட் ரோடு மற்றும் வத்தலகுண்டு பகுதிகளில் ஏக்கர் கணக்கில் பெரிய தோப்புகளும், விவசாயத் தோட்டங்களும் பாரதிராஜாவுக்குச் சொந்தமாக இருந்தன. மனோஜ் தனது இறுதி காலகட்டத்திற்கு முன்னால், அதாவது சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்து தன் தந்தையிடம் தனக்குரிய சொத்துப் பங்கைக் கேட்டுப் பெரிய அளவில் போராடி வந்தார். தனக்குரிய சொத்துப் பங்கைத் தனியாகக் கொடுத்துவிட்டால் தன் வாழ்க்கை முறையை தானே பார்த்துக் கொள்வேன் என்று மனோஜ் தொடர்ந்து உரிமை கோரிய போதிலும், பாரதிராஜா அதற்குச் சில காரணங்களால் மறுப்பு தெரிவித்து வந்தார். ஒரு கட்டத்தில் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த மனோஜ், பாரதிராஜாவைத் தன் தந்தை போல் மதிக்கும் சில சினிமா இயக்குனர்களைத் தொடர்பு கொண்டு, தன் அப்பா சொத்து தர மறுப்பதையும், தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதையும் கூறி சொத்தைப் பெற்றுத் தருமாறு உதவி கேட்டார். அந்த இயக்குனர்களும் பாரதிராஜாவிடம் சென்று பேச, அவரும் மனம் மாறி அன்றைய தினமே மாலை 7 மணிக்கு மனோஜைச் சந்தித்து என்னென்ன சொத்துக்களைத் தரலாம் என்று பேசி முடிவெடுக்கச் சம்மதித்தார். இந்தச் சுமுகமான தகவல் மனோஜுக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சொத்து கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில் இருந்த மனோஜ், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மகன் உயிரோடு இருந்து சொத்துக் கேட்டபோதெல்லாம் கொடுக்காமல் மறுத்துவிட்டோமே, இப்போது பையனே இல்லையே என்ற குற்ற உணர்ச்சி பாரதிராஜாவை வாழ்நாளின் இறுதிவரை நரக வேதனையில் ஆழ்த்தியது. மனோஜின் மறைவிற்குப் பிறகு, பிற்காலத்தில் சட்டப்படியான பிரச்சனைகள் ஏதும் வரக்கூடாது என்பதற்காக மனோஜின் மனைவியும், பாரதிராஜாவின் மருமகளுமான நந்தனாவிற்குச் சில சொத்துக்கள் கொடுக்கப்பட்டன. சுமார் 15 முதல் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தச் சொத்துக்களின் மூலம் நந்தனாவிற்கு மாதம் 4 லட்சம் ரூபாய் வரை வாடகை வருமானம் வரும்படி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. இந்த சொத்துக்களை பெற்றுக் கொண்டு நந்தனாவும் அவரது இரண்டு மகள்களும் கேரளாவில் குடியேறி வாழ்ந்து வந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, 1000 கோடி சொத்தில் வெறும் 15 முதல் 20 கோடியை மட்டும் கொடுத்துவிட்டு, மீதி அத்தனை சொத்துக்களையும் மகள் ஜனனி தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதால், மருமகள் மற்றும் பேத்திகளின் வாரிசு உரிமை அங்கே முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது. இந்த 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களில் பெரும்பாலானவற்றை பாரதிராஜாவின் மகள் ஜனனி, தனது அப்பா உயிருடன் இருந்த காலகட்டத்திலேயே பேசி கன்வின்ஸ் செய்து, சட்டப்படி தன் பெயருக்கு ரிஜிஸ்டர் செய்து வாங்கிக் கொண்டார். "இனி சட்டப்படி நம்மைக் கேட்க யாரும் இல்லை, ஒன்றும் செய்ய முடியாது" என்கிற தைரியத்தில் தான், மனோஜின் மனைவி நந்தனாவிற்கு உரிய மரியாதையையும் சொத்துக்களையும் தராமல் அவரை ஒரு கிள்ளுக்கீரை போல் தூக்கிப் போட்டுவிட்டு இப்படி அவமானப்படுத்துகிறார் என்றும் சொல்கிறார்கள். பாரதிராஜாவின் மரணச் செய்தியைக் கேட்டு, சென்னை நீலாங்கரை வீட்டிற்கு வந்தபோது, குடும்பத்தினர் நந்தனாவை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தனர். இறுதிச்சடங்கிலும், "நந்தனாவை ஏன் இங்கிருக்க விட வேண்டும்? அவர் எதற்கு இங்கு வந்தார்?" என்பது போன்ற வாக்குவாதங்களும், எதிர்ப்புகளும் குடும்பத்திற்குள் நடந்து நந்தனாவை அங்கிருந்து அப்புறப்படுத்தப் பார்த்துள்ளனர். எல்லார் வீடுகளிலும் நாத்தனார் பிரச்சனை இருப்பது இயல்புதான் என்றாலும், இது ஒரு மாபெரும் மனிதரின் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை என்பதால் தர்மப்படி நியாயம் பார்க்கப்பட வேண்டும். மனோஜ் உயிரோடு இருந்திருந்தால் இந்தச் சொத்தை இப்படி ஜனனி மட்டும் மொத்தமாக எடுத்திருக்க முடியாது, அவருக்கும் சரிபாதி பங்கு கிடைத்திருக்கும். இன்னும் ஒரு படி மேலே போய் நியாயமாகப் பார்த்தால், இந்தச் சொத்தை, பாரதிராஜா மனைவிக்கும் சேர்த்து மூன்றாக பிரித்திருக்க வேண்டும்: ஜனனிக்கு 2 ஆண் வாரிசுகள் இருப்பது போல, மனோஜுக்கும் 2 பெண் வாரிசுகள் உள்ளனர். தாத்தா என்ற முறையில் பேரன்களுக்கு இருக்கும் அதே சம உரிமை பேத்திகளுக்கும் இரத்த உறவு முறையில் உண்டு. ஆனால், மகள் ஜனனி அனைத்து சொத்துக்களையும் சட்டப்படி தன் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டதால், வாரிசுதாரர்களான பேத்திகளுக்கு சேர வேண்டிய பெரும் பங்கு மறுக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நந்தனாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.. நந்தனாவைக் கேட்க ஆள் இல்லை என்ற காரணத்திற்காக 1000 கோடி சொத்துள்ள குடும்பத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட இந்தச் செயல், மனோஜின் ஆன்மாவிற்குச் செய்யப்படும் துரோகம் என்று பொதுவெளியில் விமர்சிக்கப்படுகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.1000 கோடி சொத்துக்கள்
பாரதிராஜாவின் சொத்துக்கள்
மனோஜ்ஜின் 2 பெண்கள்
1000 கோடி ரூபாய் சொத்து
நாத்தனார் பிரச்சனை
நந்தனாவுக்கு நியாயம் வேண்டும்