118 பவுன் நகை போச்சு.. ஆனால் கன்னியாகுமரி இன்ஸ்ட்டா மதுமிதாவிற்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்! இனி என்ன ஆகுமோ?

  • சென்னை: கன்னியாகுமரி பக்கம் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் மதுமிதா வீட்டில் நடந்த கொள்ளை தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் பேசு பொருளாக இருக்கிறது. வீட்டில் இருந்த 118 பவுன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் 50,000 பணம் கொள்ளை போய் இருப்பதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த சம்பவத்தை இன்னொரு விஷயம் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    ஒரு பவுன் தங்க நகை விலை 1 லட்சத்தை தாண்டி போய்விட்ட நிலையில், ஒரு பவுன் தங்கம் தொலைந்தாலே பலர் வேதனையில் உச்சத்துக்கு போய்விடுவார்கள். ஆனால் 118 பவுன் தங்க நகையை பறிகொடுத்த மதுமிதா தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஜாலியாக வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அவர் எப்படி பணத்தால் அபிஷேகம் செய்வது, பணத்தை கட்டிலில் போட்டு அதன் மீது உருளுவது எல்லாம் செய்து கொண்டு இருந்தாரோ அதே அலப்பறை தான் இப்போது மீண்டும் செய்து கொண்டிருக்கிறார்.

    Advertisement

    இன்ஸ்டாகிராம் மதுமிதா

    இன்ஸ்டாகிராமில் யாரையுமே ஃபாலோ பண்ணாத மதுமிதாவை பல பிரபலங்களும் ரசிகர்களும் பாலோ பண்ணி வருகிறார்கள். அதுவும் இந்த திருட்டு சம்பவம் நடந்த பிறகு அவர் யார் என்ற தேடல் அதிகமாகவே இருக்கிறது. அவருக்கு ஃபாலோவர்ஸ்களும் கூடி வருகிறார்கள். யூடியூப்பில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகத் தான் அவர் நான் தன்னுடைய வீட்டு நகை பணத்தை எல்லாம் வீடியோவில் காட்டிக்கொண்டிருந்தார். இப்போது அவர் நினைத்தது நடந்து விட்டது.

    திருட்டு போன விஷயம் தெரிந்ததும் சோசியல் மீடியாவில் அவருடைய வீடியோக்களை அதிகமான ரசிகர்கள் தேடி போய் பார்த்து வருகிறார்கள். முன்பை விட சப்ஸ்கிரைப் கூடியிருக்கிறது. பழைய வீடியோக்கள் கூட இப்போ ட்ரெண்டாகி வருகிறது. 118 பவுன் நகை திருடு போனால் என்ன? என்பது போல நடந்து கொள்ளும் மதுமிதா ஒரு வழியாக அவர் ஆசைப்பட்ட மாதிரி சோசியல் மீடியா பிரபலமாகிவிட்டார்.

    Advertisement

    செய்திகளில் வைரல்

    எல்லா செய்தி சேனலிலும் அவரை பற்றிய செய்திகள் தான் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை ஒரு வீட்டில் திருட்டு நடந்தால் திருடர்களை எப்படியாவது பிடிக்கணும் என்று மக்கள் சொல்வார்கள். ஆனால் இங்கே கதையே கொஞ்சம் வேற மாதிரி போய்க்கொண்டிருந்தது. இவர் வீட்டில் திருடிய திருடர்களுக்கு சோசியல் மீடியா கமெண்ட்களில் மக்கள் பாராட்டு விழாவே நடத்தி வருகிறார்கள்.

    அந்த அளவிற்கு மக்கள் மனதில் இவர் தன் வீட்டு நகை, பணத்தை காட்டி வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறார். ஆனால் என்னதான் தன்னைப் பற்றி நெகட்டிவ் கமாண்டுகள் வந்தாலும் அதற்கெல்லாம் கண்டுகொள்ளாமல் மதுமிதா பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கின்றார். நான் என்னுடைய சொந்த பணத்தை காட்டுகிறேன் அதை பார்க்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் பாருங்கள் இல்லை என்றால் போய்க் கொண்டே இருங்கள். அதற்காக என்னைப் பற்றி தப்பு தப்பாக பேச வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    திருடர்களுக்கு அட்வைஸ்

    இதற்கு முன்பு மற்ற மாநிலங்களில் திருட்டுப் போனால் கூட சில நெட்டிசன்கள் இவருடைய ஐடியை டேக் செய்து தமிழ்நாட்டிலும் மதுமிதா என்ற ஒரு பொண்ணு இருக்காங்க அவங்க நிறைய நகை வச்சிருக்காங்க அவங்க வீட்டுக்கு போங்க என்று சிலர் கமெண்ட் கொடுத்ததற்கு பதிலடி கொடுத்திருந்தார். இப்போ இவர் வீட்டில் திருடிய திருடர்கள் யாராக இருக்கும் என்ற தேடலும் ரசிகர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

    English Summary

    Insta Madhumitha: A burglary at the home of Madhumitha—a popular social media personality from the Kanyakumari region—has been a hot topic online over the past few days. A police complaint has been filed stating that 118 sovereigns of gold jewelry, diamond jewelry, and ₹50,000 in cash were stolen. Reports indicate that the value of the stolen items is around ₹1.5 crore. However, it is a different aspect of this incident that is being heavily mocked on social media.