16 ஆண்டுகள் காதலும், கலாட்டாவும்.. திருமண நாளில் நெருக்கமான போட்டோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன் மனைவி

  • சென்னை: சினிமாவில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குடும்பம் என்று வந்துவிட்டால் அவருடைய உலகமே வேறு. மனைவி ஆர்த்தி, குழந்தைகள் என குடும்பத்துடன் இருக்கும் தருணங்களை அவ்வபோது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு இன்று 16வது திருமண நாள். இதை ஒட்டி ஆர்த்தி வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றன.

    Advertisement

    "Happy anniversary to us My King❤️" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக இருக்கும் அழகான போட்டோக்களை ஆர்த்தி பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒரு போட்டோவில் சிவகார்த்திகேயன் ஆர்த்தியின் நெற்றியில் முத்தம் கொடுக்க, ஆர்த்தி வெக்கத்துடன் சிரிக்கும் காட்சி இருக்கிறது. இன்னொரு போட்டோவில் இருவரும் ஒருவரை ஒருவர் அனைத்தபடி காதல் ஜோடியாக போஸ் கொடுத்திருக்கின்றார். அது மட்டுமல்லாமல் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.

    Advertisement

    சிவகார்த்திகேயன் திருமண நாள்

    தங்களுடைய திருமண நாளில் குடும்பமாக கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் கூட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் இன்று இருக்கும் இடத்தை பார்த்தால் அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டவர் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். சிவகார்த்திகேயன் ஆர்த்தி திருமணம் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற்றது. அதாவது சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆவதற்கு முன்பு ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.

    அதற்கு பிறகு சின்னத்திரை, வெள்ளித்திரை என சிவகார்த்திகேயன் வாழ்க்கை வேகமாக மாறியது. ஆனால் அந்த மாற்றம் அனைத்திலும் அவருடைய மனைவி ஆர்த்தி அவருக்கு துணையாகவே இருந்திருக்கிறார். சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி பற்றி சமீபத்தில் கூட தாய்க்கிழவி படத்தில் வெற்றி விழாவில் பேசும்போது, என்னுடைய பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் கூட எனக்கு தெரியாது. நான் இப்போ தயாரிப்பாளராக இருப்பதற்கு ஆர்த்தியின் பைனான்ஸ் நிறுவனம் முக்கிய காரணம் என்றும் பாராட்டி இருந்தார்.

    Advertisement

    சிவகார்த்திகேயன் குடும்பம்

    அதனால் திரையில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றால் வீட்டில் ஆர்த்தி தான் பைனான்ஸ் மினிஸ்டர் என்று ரசிகர்கள் அப்போதே கலாய்த்து இருந்தனர். சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். மகள் ஆராதனா, மற்றும் குகன், பவன் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். சினிமா நிகழ்ச்சிகள் படபிடிப்புகள் என்று எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சிவகார்த்திகேயன் அவ்வப்போது ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.

    ஆரம்ப காலம்

    ஆரம்பத்தில் மேடை நிகழ்ச்சிகள், மிமிக்ரி, ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன் பிறகு தொகுப்பாளராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதிலிருந்து சினிமாவிற்குள் நுழைந்து மெரினா படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதிலிருந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், வேலைக்காரன், சீமராஜா, டாக்டர், டான், மாவீரன் என்று தொடர்ந்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

    Advertisement

    சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

    அவருடைய நடிப்பில் அமரன் படம் ஒரு பெரிய மைல்களாக அமைந்திருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான அந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தது, அவர் இதுவரைக்கும் கடந்து வந்த பாதையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 2026 பராசக்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் சேயோன் படத்தில் நடித்து வருகிறார். மதுரையை பின்னணியாக கொண்ட இந்த படத்தின் சூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இதற்கிடையில் தன்னுடைய திருமண நாளையும் எளிமையாக வீட்டிலேயே கொண்டாடி இருக்கிறார்.

    English Summary

    Sivakarthikeyan: No matter how busy Sivakarthikeyan is as a film hero, his world transforms completely when it comes to his family. The couple—Sivakarthikeyan and Aarthi—often share moments spent with their family, including their children, with fans; today marks their 16th wedding anniversary. To celebrate the occasion, Aarthi shared romantic photos that are currently going viral on social media.