சென்னை: சில வருடங்கள் நமக்கு எவ்வளவோ மகிழ்ச்சியான நினைவுகளைக் கொடுக்கும். ஆனால், சில வருடங்கள் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதைவிட்டு நீங்காது. அந்த மாதிரியான ஒரு வருடமாகத்தான் 2026 தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. நாம் பார்த்து ரசித்த படங்கள், தினமும் கேட்டுப் பழகிய பாடல்கள், நம்முடைய வாழ்க்கையோடு சேர்ந்து பயணித்த கலைஞர்கள் என இந்த ஆண்டில் அடுத்தடுத்து 5 முக்கியமான பிரபலங்களை இழந்திருக்கிறோம்.
பாடகி எஸ். ஜானகி, நடிகை சௌகார் ஜானகி, இயக்குநர் பாரதிராஜா, நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், இசையமைப்பாளர் தேவா என ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் தனி அடையாளத்தை உருவாக்கியவர்கள். இவர்களில் சிலர் நீண்ட காலமாக உடல்நல பிரச்சினைகளை சந்தித்து வந்த நிலையில் மறைந்திருக்கிறார்கள். ஆனால், பாக்யராஜ், தேவா போன்றவர்கள் திடீரென உயிரிழந்த செய்தி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
இந்த 5 பேரையும் இணைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது. இவர்கள் வெறும் சினிமா பிரபலங்கள் கிடையாது. பல தலைமுறை ரசிகர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் இடம்பிடித்தவர்கள். ஒருவர் பாடிய பாடலை கேட்டிருப்போம், ஒருவர் நடித்த படத்தை பார்த்திருப்போம், இன்னொருவர் இயக்கிய கதையை ரசித்திருப்போம். அதனால்தான் இவர்களை பற்றிய மறைவு செய்தி வரும்போது, நமக்கு நெருக்கமான ஒருவரை இழந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
ஜூலை 11-ம் தேதி பாடகி எஸ். ஜானகி தனது 88-வது வயதில் மைசூருவில் காலமானார். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இசைத்துறையில் பயணித்த அவர், பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். மைசூருவில் சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஜூலை 12-ம் தேதி அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றன. ஆகஸ்ட் 21-ம் தேதி மூத்த நடிகை சௌகார் ஜானகி தனது 94-வது வயதில் சென்னையில் காலமானார். 7 தசாப்தங்களுக்கும் மேலாக திரையுலகில் பயணித்த அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர். வயது முதிர்வால் வரும் உடல்நல பிரச்சினைகளால் அவர் உயிரிழந்ததாகச் செய்திகள் தெரிவித்தன. ஆகஸ்ட் 22-ம் தேதி பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. ஜூன் 10-ம் தேதி இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது 84-வது வயதில் சென்னையில் காலமானார். சில மாதங்களாக உடல்நல பிரச்சினைகளை சந்தித்து வந்த அவர், வயது முதிர்வு பாதிப்புகள் மற்றும் சுவாச பிரச்சினைகளுக்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு ஜூன் 11-ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. ஜூன் 27-ம் தேதி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் தனது 73-வது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவர் உயிரிழந்த செய்தி வெளியானபோது, ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் அதிர்ச்சியடைந்தனர். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்புகூட நடிகை குஷ்பூ மகள் கல்யாணத்தில் கலந்து கொண்டார். இப்போது அக்டோபர் 17-ம் தேதி இசையமைப்பாளர் தேவாவின் மறைவு மீண்டும் தமிழ் சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 75 வயதான தேவாவுக்கு காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் சுமார் 90 நிமிடங்கள் வரை மீட்பு சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள். பாக்யராஜ் மறைந்தபோதும் திடீர் மாரடைப்புதான் காரணம். இப்போது தேவாவும் மாரடைப்பால் திடீரென உயிரிழந்திருப்பது ரசிகர்களுக்கு இன்னொரு பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இருவரும் தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர்கள். ஒருவர் திரைக்கதையாலும் இயக்கத்தாலும் ரசிகர்களை ஈர்த்தார்; மற்றொருவர் இசையால் பல தலைமுறைகளின் மனதில் இடம்பிடித்தார்.எஸ். ஜானகி
சௌகார் ஜானகி
பாரதிராஜா
தேனிசை தென்றல் தேவா இனி இல்லையா? மருத்துவமனை வாசலிலேயே கதறி அழுத பாடகி அனுராதா
பாக்யராஜ்
தேவா கடைசியாக சொன்ன வார்த்தை! கள்ளம் கபடம் இல்லாத சொக்க தங்கம்.. நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்
தேவா