சென்னை: தமிழகத்தில் 234 எம்எல்ஏகளுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு தற்போது அரசியல் வட்டாரத்தை தாண்டி சோசியல் மீடியாக்களிலும் விவாதமாகி வருகிறது. இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்எல்ஏக்களுக்கான சலுகை
எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவதோடு அதன் பராமரிப்பு செலவுக்கு மாதம் ரூ. 75,000 ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் உதவியாளர் ஒருவருக்காக மாதம் 25,000 அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு எம்எல்ஏவுக்கு கார் தொடர்பான செலவுகளுக்கு மட்டும் மாதம் ஒரு லட்சம் வரை அரசு செலவு செய்ய இருக்கிறது. 234 எம்எல்ஏக்களுக்கும் கணக்கு போட்டால் இந்த இரண்டு படிகளுக்குமான செலவு மட்டும் மாதத்திற்கு சுமார் 2.34 கோடி, ஆண்டுக்கு சுமார் 28.08 கோடி என்ற கணக்கு வருகிறது.
ஜேம்ஸ் வசந்தன் பதிவு
இந்த அறிவிப்பு வெளியான உடனே சட்டமன்றத்தில் சில எம்எல்ஏக்கள் இதை வரவேற்றாலும் சோசியல் மீடியாக்களில் வேறு மாதிரியான கேள்விகள் என ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது.. மக்களின் தேவைகள் எண்ணில் அடங்காமல் இருக்கும் நிலையில் எம்எல்ஏக்களுக்கு கார் கொடுப்பதுதான் இப்போது தலையாய பிரச்சனையா?
விவசாயிகள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் தங்களுடைய பிரச்சனைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல துறைகளும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் மக்கள் பணத்தில் எம்எல்ஏக்களுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுவது எவ்வளவு அவசியம் என்பதுதான் ஜேம்ஸ் வசந்தனின் கேள்வியின் மையம். அவருடைய பதிவில் இன்னொரு விஷயத்தையும் கடுமையாக சுட்டிக்காட்டி இருக்கிறார். தனது பணத்தை வழங்காமல் நம் பணத்தை உதறித்தனமாக அள்ளி வீசுகிறார் என்று விமர்சித்திருக்கிறார். ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகளுக்கு சம்பளம் மற்றும் பல்வேறு படிகள் இருக்கும்போது அதற்கு மேலாக கார் பராமரிப்பு, உதவியாளர் என கூடுதல் செலவுகளை அரசு ஏற்க வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே சம்பளம் மற்றும் பல்வேறு பணிகள் வழங்கப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவை வெளியிட்ட வசதி விவரங்களின்படி சம்பளம் மற்றும் பல்வேறு மாதாந்திர படிகள் சேர்த்து மொத்தம் 1.05 லட்சம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது அதனால் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் 75 ஆயிரம் வாகன செலவு மற்றும் 25 ஆயிரம் உதவியாளர் செலவு ஏற்கனவே இருக்கும் சலுகைகளுக்கு மேலான கூடுதல் அரசு செலவாகிறது என்று விமர்சித்து இருக்கிறார். இந்த பதிவை சிலர் வரவேற்று இருக்கின்றனர் இன்னும் ஒரு சிலர் விஜய் அறிவித்த இந்த சலுகைகள் ஏற்க முடியாது மக்களுக்கு எவ்வளவோ தேவைகள் இருக்கிறது. அதை விட்டுவிட்டு பல கார்கள் வைத்திருக்கும் எம்எல்ஏக்களுக்கு இப்போ புதியதாக ஒரு கார் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே முந்தைய அரசு கஜானாவை காலி பண்ணி வைத்திருந்தது என்று சொன்னார்கள். ஆனால் இப்போ இவர்கள் செய்கிற செலவை பார்த்தால் கடன் மேல் கடன் வாங்கி மக்கள் தலையில் தான் மொத்தமாக விடிய போகிறதா? என்றும் குரல் கொடுத்து இருக்கிறார்கள். மக்கள் பணத்தை மக்களுக்காக செலவு செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றிக் கருத்து இருக்க முடியாது. ஆனால் எம்.எல்.ஏக்களின் பணியை சிறப்பாக செய்ய இந்து செலவு உண்மையிலேயே அவசியமா? அல்லது தேவையற்ற சலுகையா? என்பதுதான் இப்போ விவாதமாகி வருகிறது.சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம்
மக்கள் விவாதம்