சென்னை: துரைமுருகன் பேத்தி செந்தாமரையின் திருமணம் தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. திருமண அழைப்பிதழ் முதல் வரவேற்பு நிகழ்ச்சி உணவு வகைகள் வரை ஒவ்வொன்றும் தனித்தனியாக கவனம் ஈர்த்த நிலையில், இப்போது மாப்பிள்ளை தீபக் ரவி வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ மீண்டும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அது வேற எதுவும் இல்லை அவருடைய 12.25 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட வீடியோ தான்.
துரைமுருகன் வீட்டு கல்யாணம்
திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் பேத்தி செந்தாமரைக்கும் திரைப்பட தயாரிப்பாளரும் தொழில் அதிபருமான கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் கடந்த நவம்பர் 1ம் தேதி சென்னையில் கல்யாணம் பிரம்மாண்டமாக நடந்தது. இதற்கு முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சியில் பெரிதாக நடத்தப்பட்டது. இந்த 2 நிகழ்ச்சிகளிலும் அரசியல் மற்றும் திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பே இந்த ஜோடியின் அழைப்பிதழ் பெரிய அளவில் பேசப்பட்டது. கண்ணன் ரவி பிரபலங்களுக்கு லெட்டர் கொடுத்ததை வீடியோ எடுத்து வெளியிட்டு இருந்தார். இதுவே பெரிதாக பேசப்பட்டது.
அதுபோல கல்யாணம் லெட்டரும் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. அதன் விலை மட்டும் சுமார் 25 ஆயிரம் என்றும் தகவல் வெளியானது. இதை பார்த்த பலரும் பத்திரிக்கைக்கே இவ்வளவு செலவு செய்திருக்கிறார்களே? அப்படி என்றால் திருமண ஏற்பாடுகள் எப்படி இருக்கும் என்று ஆச்சரியப்பட்டனர். அதற்கு ஏற்ற மாதிரி வரவேற்பு நிகழ்ச்சியும் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்தில் 60க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. மாதம்பட்டி ரங்கராஜ் தான் சமையல் செய்திருந்தார். இப்படியாக ஒவ்வொரு நாளும் திருமண விஷயத்தைப் பற்றி பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது மாப்பிள்ளை தீபக் ரவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள வீடியோ புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் விமானத்தில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்படும் காட்சிகள் இருக்கிறது. குறிப்பாக துபாயிலிருந்து விமானம் மூலம் அந்த கார் சென்னைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த காரின் மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன். இதன் மதிப்பு சுமார் 12.25 கோடி என்றும் கூறப்படுகிறது. பொதுவாக வெளிநாட்டில் இருந்து சொகுசு கார்களை விமானம் மூலம் கொண்டு வருவது சாதாரண விஷயம் கிடையாது. அதுவும் திருமண நிகழ்ச்சிக்காக இப்படி ஒரு கார் கொண்டுவரப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.கவனம் ஈர்த்த பத்திரிக்கை
விமானத்தில் வந்த கார்