ஜீ தமிழ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே மேடையில் நடனமும் நடிப்பும்! ரசிகர்களின் ஆசை நிறைவேறுதே

  • சென்னை: தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் Zee தமிழ் தொலைக்காட்சியின் இரண்டு பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளான 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' மற்றும் 'மகா நடிகை' இந்த வாரம் சிறப்பு மகா சங்கமம் நிகழ்ச்சியாக ஒன்றிணைய உள்ளன. இதனால் என்ஜாய்மென்ட்க்கும் எமோஷனலுக்கும் பஞ்சம் இருக்காது போல. சிரித்துக்கொண்டே அழுவதற்கும் ரெடியா இருந்துக்கோங்க மக்களே.

    Advertisement

    டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி

    'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியை மணிமேகலை மற்றும் அசார் இணைந்து உற்சாகமாக தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சினேகா, சிம்ரன் மற்றும் நடிகர் பிரசாந்த் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று போட்டியாளர்களுக்கு மோட்டிவேஷன் கொடுத்து வருகிறார்கள். திறமையான நடனக் கலைஞர்களின் அசத்தலான ஆட்டங்களால் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

    Advertisement

    மகா நடிகை நிகழ்ச்சி

    அதேபோல், நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தும் 'மகா நடிகை' நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா மற்றும் சங்கீதா நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சி, இந்த வாரம் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' குழுவினருடன் இணைந்து பிரம்மாண்டமான மகா சங்கமமாக ஒளிபரப்பாக உள்ளது.

    மகா சங்கமம்

    நடனமும் நடிப்பும் ஒரே மேடையில் சங்கமிக்கும் இந்த சிறப்பு எபிசோட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த வாரம் ஒளிபரப்பாகும் 'டான்ஸ் ஜோடி டான்ஸ் - மகா நடிகை மகா சங்கமம்' நிகழ்ச்சியை Zee தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

    English Summary

    Zee Tamil: Zee Tamil TV's two popular reality shows, 'Dance Jodi Dance' and 'Maha Anthakam', which are catching the hearts of the Tamil screen fans, are coming together for a special Maha Sangam show this week. As if there is no dearth of enjoyment and emotional. Get ready to laugh and cry folks.