எனக்கு எதிராக பிரபல நடிகரும், அவர் மனைவியும் பிஆர் செய்கிறாங்க! நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உருக்கம்! யார் அந்த ஹீரோ?

  • சென்னை: மலையாள திரை உலகில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருப்பது நடிகர் ஜோஜு ஜார்ஜ் சொன்ன குற்றச்சாட்டு தான். ஜோஜு ஜார்ஜ் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பலருக்கும் பிரபலமானவர்தான். அவர் சமீபத்தியத்தில் தனது புதிய படமான "வரவு" வெளியான பிறகு ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவில் பேசி இருந்தார். அப்போது பெயரை குறிப்பிடாமல் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவரையும் அவருடைய மனைவியையும் பற்றி கடுமையான குற்றசாட்டை வைத்திருக்கிறார்.

    Advertisement

    அதாவது லைவில் பேசிக் கொண்டு இருந்த ஜோஜு ஜார்ஜ், மலையாள சினிமாவில் பிரபல நடிகர் ஒருவர் அவருடைய மனைவியும் சேர்ந்து என்னோட படங்கள் மற்றும் எனக்கு எதிராக பணம் கொடுத்து நெகட்டிவ் பிஆர் வேலை செய்கிறார்கள். இது பல வருஷங்களாக நடந்துட்டு வருது. என்னைப் பற்றிய தவறான தகவல்களை திட்டமிட்டு பரப்புறாங்க.

    Advertisement

    என்னுடைய ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் அந்த படத்தை பற்றியும், என்னைப் பற்றியும் நெகட்டிவ்வாகவே பேசி வருவதால் படத்தின் வசூலும் பாதிக்கப்படுகிறது என்று அவர் வேதனையோடு கூறியிருக்கிறார். இந்த பேச்சு வெளியான சில மணி நேரங்களிலே சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது. குறிப்பாக யார் அந்த நடிகர்? என்ற கேள்விதான் ரசிகர்கள் மத்தியில் விவாதமாக மாறி இருக்கிறது.

    மலையாள நடிகர் ஜோஜூ வருத்தம்

    ஆனால் ஜோஜூ ஜார்ஜ் எந்த நடிகர் பெயரையும் ஓப்பனாக சொல்லவில்லை. அதனாலேயே அந்த நடிகராக இருக்குமோ? இந்த நடிகராக இருக்குமோ? என்று பலரை பற்றி பேசி வருகிறார்கள். இது குறித்து ஜோஜுவே முழுமையான விளக்கம் கொடுத்தால் தான் தெளிவாக அனைவருக்கும் தெரியும். ஒருவேளை அதுபோன்று நடந்திருந்தால் தைரியமாக அந்த நடிகரின் பெயரை சொல்ல வேண்டியது தானே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    யார் அந்த நடிகர்

    இன்னும் ஒரு சிலர் அவர் பெயரை சொல்லி தேவையில்லாத புதிய பிரச்சனையும் ஏற்படுத்த வேண்டாம். ஒருவேளை அதுபோன்று நடந்திருந்தால் கூட இனியாவது சக நடிகரும் நல்லா இருக்கட்டும் என்று அந்த நடிகர் ஒதுங்கிக் கொள்ளட்டும் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

    ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர் தான். ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கேரக்டரிலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பை காட்டி வருகிறார். தமிழில் அவர் ஏற்கனவே ஜகமே தந்திரம், புத்தம் புது காலை, பப்பூன், ரெட்ரோ, தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார்.

    Advertisement

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    நடிகராக மட்டுமல்லாமல் அவர் தயாரிப்பாளர், இயக்குனர் என்ற வகையிலும் தன்னுடைய தடத்தை பதித்தவர். இதுவரைக்கும் ஜார்ஜ் பெரிதாக அடுத்த நடிகர்களை பற்றி குறை சொல்லியது கிடையாது என்பதால் இப்போது இவர் சொன்னது இணையத்தில் அதிகமாக வைரல் ஆகி வருகிறது. விரைவில் யார் அந்த நடிகர்? அவருடைய மனைவி யார்? என்பது பற்றி விளக்கம் சொல்வாரா என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

    English Summary

    Joju George: The allegation made by actor Joju George is currently causing a stir in the Malayalam film world. Joju George is famous not only as an actor but also as a director. He recently interacted with his fans on Instagram Live after the release of his new film "Varau". Then, without mentioning his name, he made serious allegations against a leading actor in Malayalam cinema and his wife.