ஆடிஷன் போன பிரபல சீரியல் நடிகை.. நி***மாக போட்டோ எடுத்த தயாரிப்பாளர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

  • சென்னை: பிரபல சீரியல் நடிகைக்கு நடந்த கொடுமைதான் சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புதியதாக ஒரு சாமி படத்தில் நடிக்க கதாநாயகி வேண்டும் என்று வந்த அட்வர்டைஸ்மென்ட்டை நம்பி போன நடிகைக்கு கடைசியில் பெரிய அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. அதாவது அந்த நடிகையை ஆடையின்றி போட்டோ எடுக்க முயற்சி செய்திருக்கின்றனர். கடைசியில் அந்த நடிகை அவர்களுக்கு சரியான பாடம் கற்பித்திருக்கிறார்.

    Advertisement

    போன வருஷம் ஒரு சின்னத்திரை நடிகையின் வீடியோ வெளியாகி அனைவருமே அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. இது ஒரிஜினல் வீடியோவா? அல்லது ஐ வீடியோவா? என்ற குழப்பம் இருந்தது. எதிர் தரப்பில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஒரு தயாரிப்பாளர் என்னவெல்லாம் செய்ய சொல்கிறாரோ அதையெல்லாம் அந்த நடிகையும் செய்து செய்வது போல காட்சிகள் இருந்தது.

    Advertisement

    பிரபலமான சீரியலில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஆடையின்றி அந்த வீடியோவில் இருந்தார். அது மட்டும் இல்லாமல் அந்த தயாரிப்பாளர் செய்ய சொன்ன ஆபாசமான செயல்களை எல்லாம் மறுக்காமல் செய்து கொண்டு இருந்தது ரசிகர்களை பதற வைத்திருந்தது. சினிமா துறையில் வாய்ப்புக்காக இப்படியெல்லாம் செய்வார்களா? என்று கூட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    சீரியல் நடிகை ஏமாற்றம்

    இந்த நிலையில் இப்போது அதேபோல இன்னொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது சென்னை பெருங்குடி பகுதியை சார்ந்த நந்தி ராமநாதன் என்பவர் தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் என்று பலரிடம் அறிமுகம் செய்திருக்கிறார். அதோடு தான் புதியதாக தொடங்க இருக்கும் சாமி படத்தில் அம்மன் வேடத்தில் நடிப்பதற்காக புதுமுக ஆள் தேவைப்படுவதாக விளம்பரம் செய்திருக்கிறார். இதனை நம்பிய ஒரு சீரியல் நடிகை அந்த சாமி படத்தில் நடிப்பதற்காக அந்த நபருக்கு போன் செய்து பேசியிருக்கிறார்.

    Advertisement

    தயாரிப்பாளரின் மோசடி

    அப்போது அந்த நபர் விருகம்பாக்கத்தில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு நடிகையை ஆடிசனுக்கு வர சொல்லி இருக்கிறார். தயாரிப்பாளரின் பேச்சை நம்பி சீரியல் நடிகையும் அந்த விருகம்பாக்கம் ஹோட்டலுக்கு போய் இருக்கிறார். அங்கு நந்தி ராமனுடன் இந்திராணி மற்றும் பார்திகா என்ற இரண்டு பெண்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் தயாரிப்பாளரின் அசிஸ்டன்ட் என்று சொல்லிக்கொண்டு அந்த நடிகையை விதவிதமாக தங்களுடைய செல்போனிலேயே போட்டோஸ்கள் எடுத்திருக்கிறார்கள்.

    பிறகு அந்த நடிகையிடம் இந்த அம்மன் படத்தில் நடிப்பதற்கு உடம்பில் தழும்பு எதுவும் இருக்கக்கூடாது. நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் உங்கள் உடம்பில் தழும்பு இருக்கிறதா? இல்லையா? என்று நாங்கள் செக் பண்ண வேண்டும் அதனால் நீங்கள் டிரெஸ்ஸ கழட்டுங்க என்று சொல்லி இருக்கின்றனர். அதோடு நாங்கள் டிரஸ் கழட்டி எடுக்கும் போட்டோக்கள் இந்த படத்தின் ஆடிஷனுக்கு தேவைப்படும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

    Advertisement

    சீரியல் நடிகைக்கு நடந்த கொடுமை

    இதனால் அந்த நடிகை பயந்து போய் முடியாது என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த இரண்டு பெண்களும் நந்தி ராமநாதனும் சேர்ந்து சினிமா வாய்ப்பு சும்மா வருமா? இப்படி எல்லாம் போட்டோ எடுத்தா தான் வரும் என்று அவரை கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் அந்த நடிகை முடியாது என்று சொல்லி வெளியே தப்ப முயன்றிருக்கிறார். அவர்கள் மூன்று பேரும் அந்த நடிகையை ரூமுக்குள் வைத்து அடைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

    போலீஸ் உதவி

    பிறகு அவர் அங்கிருந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்து வெளியே ஓடிவந்து சம்பவம் குறித்து சென்னை காவல் துறை சிங்கப்பெண் படைக்கு தகவல் கொடுத்து இருக்கிறார். தகவல் கிடைத்த கொஞ்ச நேரத்திலேயே சிங்கப்பெண் சிறப்பு படை போலீஸ் சார் அந்த ஹோட்டலில் பதுங்கி இருந்த போலி தயாரிப்பாளர் நந்தி ராமநாதன், தரமணி பகுதியை சேர்ந்த இந்திராணி மற்றும் விருதுநகரை சேர்ந்த கேமரா பெண் பார்திகா ஆகிய மூன்று பேரையும் பிடித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றனர்.

    Advertisement

    எந்தத் துறையில் பார்த்தாலும் இதுபோல சில ஏமாற்றுக்காரர்களால் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சினிமா துறையில் அதற்கு ஒரு படிக்கு மேலே தான் இருக்கிறது. இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகளை நம்பி பல பெண்கள் தங்களுடைய வாழ்க்கைகளை சீரழிக்கிறார்கள். ஒரு சிலர் தைரியமாக வெளியே வந்து புகார் கொடுக்கிறார்கள்.

    ஏமாற்று தயாரிப்பாளர்

    அதிலும் இந்த சம்பவத்தில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட நந்தி ராமநாதன் தயாரிப்பாளரே கிடையாதாம். அவர் எந்த பாடத்தையும் இதுவரைக்கும் தயாரிப்பு செய்யவே இல்லையாம். இதுபோல போலியான அட்வர்டைஸ்மென்ட் கொடுத்து பெண்களை மிரட்டி அவர்களுக்கு பணம் கொடுக்காமல் ஆடிஷன் என்ற பெயரில் போட்டோஸ் வீடியோக்கள் எடுத்து இருக்கிறார்கள். இது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இவர்களை காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில் இன்னும் அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Serial actress: The cruelty that happened to the famous serial actress has shocked the social media. The actress, who believed in the advertisement that wanted a heroine to act in a new Sami film, got a big shock at the end. That means they have tried to take pictures of the actress without clothes. At last the actress has taught them the right lesson.