சென்னை: தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த சங்ககிரி ராஜ்குமாரின் முயற்சிக்காக சிம்பு நேரில் பாராட்டி இருக்கிறார். ஒரு படத்தை 5 வருடங்களாக கஷ்டப்பட்டு தனி ஒருவராக எடுத்து முடித்து சாதித்து இருக்கிறார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இதுபோன்ற கலைஞர்களை மனதார பாராட்டிய சிம்புவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பொதுவாக ஒரு திரைப்படம் உருவாக வேண்டும் என்றால் பல வருடங்கள் ஆகலாம். அதே நேரத்தில் அந்த படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்தால் அதில் ஆயிரக்கணக்கானோர் வேலையும் செய்வார்கள். அப்படி இருந்தும் சில படங்கள் ப்ளாப் ஆகி விடுகிறது. ஆனால் ஒரு படத்தை உருவாக்குவதற்கு தேவையான 70-க்கும் மேற்பட்ட துறைகளில் ஒரே ஆள் தனியாகவே வேலை பார்த்திருக்கிறார்.
வரலாற்றில் முதல் முறை
அந்த படத்தை இயக்கிய இயக்குனர், தயாரிப்பாளர், கதை எழுத்தாளர், மியூசிக் டைரக்டர், பாடல் வரிகள், ஸ்கிரீன் பிளே, எடிட்டிங் என ஒவ்வொரு இடத்திலும் அந்த ஒரு தனிநபர் தான் வேலை பார்த்திருக்கிறார், அவர் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தான். ஐந்து வருடங்களாக ஒன் மேன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அந்த படம் கடந்த 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலக சினிமா வரலாற்றில் தனி மனிதராக ஒரு முழு திரைப்படத்தை உருவாக்க முயற்சியில் இந்த படம் பெரிய அளவில் கவனம் பெற்றது. ஆனாலும் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
அந்த படத்தின் கதை என்னவென்றால் 4 நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல சாதனைகள் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு விருது கிடைக்கவிருக்கிறது. அந்த விருதை வாங்குவதற்காக நான்கு பேரும் போகிறார்கள். அப்போது அவர்கள் ஒரு ஆய்வகத்திற்கு போக வேண்டிய சூழ்நிலைக்கு ஏற்படுகிறது. அப்போது நாட்டு மக்களை ஒரு ஆபத்து தாக்குகிறது. அந்த சமயத்தில் மக்களை காப்பாற்றுவதற்கான ஒரு விஷயத்தையும் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் இந்த 4 நண்பர்களில் ஒருவர் மட்டும் நாம எதற்கு மக்களை காப்பாற்ற வேண்டும் என்று நெகட்டிவாக பேசுகிறார். மற்ற 3 பேரும் அவருடன் சண்டை போட்டு மக்களை காப்பாற்றுகிறார்கள். இதுதான் படத்தின் கதை. இதில் கடலுக்கு அடியில் எடுத்த காட்சிகள், ட்ரைன் காட்சிகள் சண்டைக் காட்சிகள் என பல திரில்லர் காட்சிகளும் இருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் என்னவென்று இயக்குனரிடம் கேட்டால் என்னுடைய ஐந்து வருட உழைப்பு என்று சொல்லி இருக்கிறார். இதில் பல தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எல்லாமே அவரே தனி ஒருவராக செய்து இருக்கிறார். அப்படி இருந்தும் அந்த படம் பெரிதாக பேசப்படவில்லை. இந்த விஷயத்தை கேள்விப்பட்டால் நடிகர் சிலம்பரசன் சங்ககிரி ராஜ்குமாரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். சிம்பு இப்போது பரபரப்பாக ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார் அதற்கிடையில் அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார். படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றதும் இயக்குனர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். நான் இதுவரைக்கும் சம்பாதித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் இந்த படத்திற்கு போட்டு விட்டேன். ஆனால் போட்டதில் கால்வாசி கூட வரவில்லை. அதனால் சென்னையை விட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டேன். இனி சினிமாவை விட்டு விலகி வடலாம் என்று இருக்கிறேன் பழையபடி விவசாயம் தெருக்கூத்து வேலையை பார்க்க போறேன் என்று சில நாட்களுக்கு முன்பு மனம் நொந்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். ஜிடி நாயுடு படத்தை இயக்கியவர் யார் தெரியுமா? சிம்பு பட காமெடி நடிகர்! இத்தனை வருடம் கழித்து செம கம்பேக்ஒன் மேன் படத்தின் கதை
பாராட்டிய சிம்பு
இயக்குனர் வேதனை
அவருக்கு இப்போது திரை உலகில் இருந்து பாராட்டு கிடைத்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கிறது. எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தன் உழைப்பை நம்பியே ஒருவர் இத்தனை வருடங்களாக கஷ்டப்பட்டு இருக்கிறார். இவருக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பலரும் அவருக்காக கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.