மொத்தமாக பிரிகிறேன்.. பழைய நிலைமைக்கு போகிறேன்.. அனுபமா வெளியிட்ட புதிர் பதிவு! காரணம் இதுதானா?

  • சென்னை: நடிகை அனுபமா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவுதான் சோசியல் மீடியாவில் பலரையும் பேச வைத்திருக்கிறது. இவங்க இதுவரைக்கும் ஜாலியான போஸ்ட்களை போட்டு வந்த நிலையில் இப்போது என்ன திடீரென ஒரு சோகமான புரியாத புதிர் போல ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறாரே? என்று பலரும் குழப்பத்தில் இருக்கின்றனர். அதுபோல நெட்டிசன்கள் சில வேண்டுகோளையும் வைக்கிறார்கள்.

    Advertisement

    தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி போட்டோஸ்கள், க்யூட்டான வீடியோக்களை பகிர்ந்து வரும் இவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவுதான் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    நடிகை அனுபமா வெளியிட்ட பதிவு

    அந்த பதிவில் சில, சமயங்களில் நிம்மதியை அடைய பயனற்ற பாதைகளை கைவிட வேண்டி இருக்கும். இன்று அந்த நிம்மதி என்னை தேடி வந்தது. இன்றிலிருந்து என் குரலை நானே தேர்ந்தெடுக்கிறேன். என் வாழ்க்கையை நானே தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை. இனி பயமும் இல்லை. நான் மீண்டும் என்னையே கண்டடைகிறேன்.

    ஒரு காலத்தில் என்னுடையது என்பதை மறந்து இருந்தேன் அந்த வாழ்க்கையை மீண்டும் நேசிக்க தொடங்குகிறேன். நீண்ட நாட்களாக நான் சொல்ல நினைத்த ஒரு விஷயம் இருக்கிறது... நீண்ட காலமாக சொல்வதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரு விஷயம்.. எனக்கு துணையாக நின்றதற்கும் என் மீது நம்பிக்கை வைத்திருக்கும், என் வாழ்க்கையை அன்பால் நிரப்பியதற்கும் நன்றி.

    Advertisement

    நெகிழ வைத்த வார்த்தை

    இதை நான் முன்பே போதுமான அளவு சொல்லி இருக்காவிட்டாலும் என் மனதில் அந்த உணர்வு எப்போதும் இருந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எனக்கு மிகவும் தேவைப்பட்ட தருணங்களில் உங்கள் ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு பிரார்த்தனையும், ஒவ்வொரு அன்பான செயலும் என்னை வந்து அடைந்தன. என்னை மீண்டும் என்னிடம் அழைத்து வந்த பிரபஞ்சத்திற்கு நன்றி.

    மனம் மாறுவதை கொண்டாடுவோம்... சுதந்திரத்தை கொண்டாடுவோம்... எனையே தேர்ந்தெடுப்பதை கொண்டாடுவோம்... இறுதியாக முழுமையாக எதற்காகவும் தயங்காமல் எனக்கே உரித்தாக அமைந்த வாழ்க்கையை கொண்டாடுவோம் என்று அந்த பதிவில் அவர் கூறியிருக்கிறார். அதோடு அவர் ஜாலியாக இருப்பது போன்ற போட்டோக்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

    Advertisement

    ரசிகர்களை கேள்வி

    இதுதான் இப்போது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் சமீப காலமாகவே பைசன் படத்தில் அனுபமா துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக பேசப்பட்டது. இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் கூட சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. இருவரும் மாறி மாறி அடுத்தவர்களின் போஸ்ட்க்கு போடும் கமெண்டுகள் கூட காதல் என்று சொல்வது போலவே சூசகமாக இருந்தது. ஆனாலும் அதிகாரப்பூர்வமாக இருவரும் அறிவிக்கவில்லை.

    காரணம் இதுதானா?

    இதனால் அதற்கான நேரம் சீக்கிரமாக வரும், கண்டிப்பாக அனுபமா தன்னுடைய காதலை பற்றி சொல்லுவார் என்று எல்லோரும் காத்திருந்தனர். அதற்குள் இவர் இப்படி ஒரு பதிவை போட்டு இருக்கிறார். இதனால் இவர்களுக்குள் பிரேக்கப் ஆகிவிட்டதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அனுபமா போஸ்டில் கூட பலரும் இதைத்தான் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு எந்த பதிலும் அனுபமா கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    விக்ரம் மகன் துருவ்- அனுபமா இடையே காதல்? வைரலாகும் லிப் லாக் போட்டோ? உண்மை என்ன?
    கடந்த வருஷம் இவர் நடிப்பில் வெளியான பைசன் மற்றும் டிராகன் 2 படமுமே சூப்பராக வெற்றி பெற்று இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. அதனால் மீண்டும் அதுபோல படங்களில் நடிங்க, பர்சனல் வாழ்க்கையை பர்சனலாவே வச்சுக்கோங்க இல்லனா தேவையில்லாத மனக்கசப்புகள் தான் வரும் என்று அனுபமாவுக்கு ரசிகர்கள் அட்வைஸ் கொடுக்கிறார்கள்.

    English Summary

    Anupama Parameswaran: Actress Anubhavama's post on her Instagram page has got many people talking on social media. While they have been posting funny posts so far, why are they suddenly posting a post like a sad puzzle? Many people are confused. Similarly, netizens also make some requests.