சென்னை : நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கிடைத்துள்ள ஒரு சிறப்பு வாழ்த்து தற்போது கவனம் பெற்றுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சார்பில் பி.டி ரமேஷ் குருக்கள் நேரில் சென்று ஷோபா சந்திரசேகரை சந்தித்து மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
விஜய்யின் அரசியல் பயணத்தை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் குறித்த தகவல்களும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் அம்மா ஷோபா சந்திரசேகரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த சந்திப்பு சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
பொதுவாக பிறந்தநாள் என்றாலே குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரில் வந்து வாழ்த்து சொல்வது வழக்கம். ஆனால் ஷோபா சந்திரசேகருக்கு இந்த வருஷம் கிடைத்த வாழ்த்து சற்று வித்தியாசமானது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சார்பில் பி டி ரமேஷ் குருக்கள் அவரை நேரில் சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது வெரறும் பிறந்தநாள் வாழ்த்து மட்டுமல்லாமல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து வந்த ஒரு சிறப்பு ஆசிர்வாதமாகவே விஜய் ரசிகர்கள் இதை பார்க்கின்றனர். ஷோபா சந்திரசேகர் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் மட்டுமல்லாமல் இசை மற்றும் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். தயாரிப்பாளர், இயக்குனர், பாடகி என பல்வேறு துறைகளில் தனது திறமையை காட்டி இருக்கிறார். அதே நேரத்தில் விஜயின் அம்மா என்பதால் அவரது ஒவ்வொரு நிகழ்வும் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்த நிலையில் இப்போது அவரது பிறந்த நாளில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் குருக்கள் நேரில் வந்து வாழ்த்தியது அம்மாவுக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசுகளில் இதுவும் ஒரு ஸ்பெஷல் கிப்ட் என்று விஜய் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை கமாண்டுகளில் கொட்டுகின்றனர். சோபா சந்திரசேகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது தொடர்பான புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் கூட ஷோபா சந்திரசேகர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வழிபட்ட புகைப்படங்கள் வெளியானது. இதனால் தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ள ஷோபா சந்திரசேகருக்கு இப்போது கிடைத்த வாழ்த்துக்கள் ஸ்பெஷல் ஆக பார்க்கப்படுகிறது.ஸ்பெஷல் கிப்ட்
ரசிகர்கள் வாழ்த்து
ஆலய வழிபாடு