துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த தமிழ் நடிகை.. எம்ஜிஆர் உடன் நடித்தவர்! அதுவும் யார் தெரியுமா?

  • சென்னை: எம்ஜிஆர் நடித்த பழைய படங்களை இப்போதும் ரசித்து பார்க்கும் ரசிகர்களுக்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் "பச்சைக்கிளி முத்துச்சரம்" என்ற பாடல் நிச்சயம் நினைவிருக்கும். அந்த பாடலில் எம்ஜிஆருடன் இணைந்து டான்ஸ் ஆடிய தாய்லாந்து நடிகை மேட்டர் ரூங்ராத் 83 வயதில் தற்போது உயிரிழந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகி இருக்கும் தகவல் பலரையும் வருத்தப்பட வைத்திருக்கிறது.

    உலகம் சுற்றும் வாலிபன் பட நடிகை

    1973 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்து, தயாரித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் அன்றைய காலகட்டத்தில் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட காட்சிகள், வித்தியாசமான கதைக்களம் ஆகியற்றால் தனி அடையாளத்தை பெற்றது. இப்போதும் அந்த படத்தின் பாடல்களை கேட்டாலே பலருக்கும் பழைய நினைவுகள் வந்துவிடம் அப்படிப்பட்ட படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் மேட்டா ரூங்ராத்.

    எம்ஜிஆர் உடன் டான்ஸ்

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக மஞ்சுளா, லதா, சந்திரகலா நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் தாய்லாந்தை சேர்ந்த மேட்டாவும் நடித்திருக்கிறார். படத்தின் கதையில் தாய்லாந்தில் எம்ஜிஆரை காதலிக்கும் கேரக்டரில் அவர் வந்திருப்பார். குறிப்பாக பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலில் எம்.ஜி.ஆர் உடன் டான்ஸ் ஆடியது அப்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. மேட்டா ரூங்ராத்தின் சொந்த பெயர் தாராவடி கிட்சுவான். 1961 ஆம் ஆண்டு முதல் திரை துறையில் நடிக்க தொடங்கியவர்.

    கரூரில் 7 வயது மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை! கருப்பூரில் சோகம்

    நடிகை தற்கொலை

    தாய்லாந்து சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்திருக்கிறார். தமிழில் அவர் உலகம் சுற்றும் வாலிபன் வாலிபன் படத்தின் மூலம் தான் பிரபலமானர். அதற்குப் பிறகு பெரிதாக அவர் தமிழில் நடிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நவம்பர் 3ம் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உள்ள அவருடைய வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு 83 வயது. அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தாய்லாந்து போலீசார் விசாரணை செய்து நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வீட்டில் வேலை பார்த்த பெண் கொடுத்த தகவலின் பெயரில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    English Summary

    actress: Fans who still enjoy watching old MGR films will surely remember the song "Pachaikili Muthucharam" from the movie *Ulagam Sutrum Valiban*. The news that the Thai actress, Metta Roongrat—who danced alongside MGR in that song—has passed away at the age of 83, has come as a shock to fans. Furthermore, reports suggesting that she died by suicide have left many deeply saddened.