கூகுள் மேப் கைவிட்டாலும் கை விடாத தமிழன்.. நெகிழ்ந்த நடிகர் மம்மூட்டி.. சந்தோஷத்தில் பாண்டியன்

  • சென்னை: பொதுவாக சினிமா நட்சத்திரங்களை நேரில் பார்த்தாலே அவர்களுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்று தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு தோன்றும். ஆனால் காரைக்குடியில் நடந்த சம்பவத்தில் ஒரு தமிழர் தான் சந்தித்தது பெரிய நடிகர் என்பதைவிட வழி தெரியாமல் தவித்த ஒரு மனிதர் என்று தான் பார்த்திருக்கிறார். அதனால் தான் இப்போது அந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் இவ்வளவு மகிழ்ச்சியுடன் பகிரப்பட்டு வருகிறது.

    Advertisement

    வழி தெரியாமல் நின்ற நடிகர் மம்மூட்டி

    மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி காரைக்குடி பகுதியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு காலையில் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலை பணி நடந்து கொண்டிருந்ததால் மாற்றுபாதை தெரியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்திருக்கிறார். அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த குழப்பத்தில் கூகுள் மேப்பில் சரியான பாதை கிடைக்காமல் போனதாக கூறப்படுகிறது.

    Advertisement

    அப்போது அங்கிருந்த பாண்டியன் என்ற நபரிடம் மதுரைக்கு எப்படி போகணும் என்று நடிகர் மம்மூட்டி வழி கேட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு அது மம்மூட்டி கார் என்று தெரியாமல் மதுரைக்குப் போக வேண்டிய வழியை சொல்லி இருக்கிறார். ஆனாலும் அவர்களுக்கு அது சரியாக புரியவில்லை என்பதால் சரி என்கிட்ட பைக் இருக்கு வாங்க நானே வழி காட்டுறேன் என்று கூட்டிக்கொண்டு போயிருக்கிறார். உள்ளிருந்து மம்மூட்டி அந்த நபரிடம் பேசி இருக்கிறார். அப்போது கூட அதை நபருக்கு அது மும்முட்டி என்று தெரியாதாம்.

    காரில் லைட் ஆஃப் பண்ணி இருந்ததால் யார் என்று தெரியாமலே வழி தெரியாமல் இருந்தவர்களுக்கு அந்த நபர் உதவி செய்திருக்கிறார். சுமார் 10 கிலோமீட்டர் தூரம் காருக்கு முன்னால் பைக்கில் போய் சரியான பாதையை காட்டி அவர்கள் செல்ல வேண்டிய சாலையை அடைய உதவி செய்திருக்கிறார். அந்த நேரத்தில் பாண்டியனுக்கு மம்மூட்டியிடம் எதையும் கேட்க வேண்டும் என்ற எண்ணமே இல்லையாம் ஆனால் காரில் இருந்து இறங்கிய மம்மூட்டி உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என்று கேட்டிருக்கிறார்.

    Advertisement

    மம்மூட்டி சொன்ன வார்த்தை

    அப்போதான் பாண்டியனுக்கு ரொம்பவும் சந்தோஷமாம். உடனே போட்டோ வீடியோ எடுக்க சொல்லி என் நண்பன் என்று அந்த நபரை கட்டிப்பிடித்து மம்மூட்டி சொல்லி இருக்கிறார். இந்த வீடியோவையும் மம்மூட்டி தரப்பில் இருந்து ஷேர் செய்ததாக பாண்டியன் சொல்லியிருக்கிறார். ஆனால் அவருக்கு தெரியாமல் செய்த சின்ன உதவி இப்போ அவரை இணையத்தில் பிரபலம் ஆக்கி விட்டது. மம்மூட்டி என்னை நண்பன் என்று சொல்லுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை அவர் மலையாள உலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ரொம்பவும் எளிமையான மனிதராக இருந்தார் என்னை நண்பர் என்று மம்மூட்டி சொன்ன ஒரு வீடியோ இப்போ சோசியல் மீடியாவில் மீடியாவில் வைரல் ஆக்கிவிட்டது.

    Advertisement

    பாண்டியன் நெகிழ்ச்சி

    அதைப் பார்த்து எனக்கு தெரிந்த பலரும் எனக்கு போன் செய்து என்னை பாராட்டுறாங்க. எனக்கு இதெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. யாரோ ஒருவர் வழி தெரியாம நிக்கிறாங்க அவங்களுக்கு உதவணும்னு நினைச்சேன் அவ்வளவுதான். ஆனால் அது இவ்வளவு பிரபலமாகும் என்று எனக்கு தெரியல என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி இருக்கிறார்.

    உதவும் மனநிலை

    இதுதான் மனிதநேயம் என்று மக்கள் பாராட்டி வருகின்றனர். பொதுவாக பைக்கில் போய்க்கொண்டிருக்கும் போது ஒருவர் ஸ்டாண்ட் சரியாக எடுக்கவில்லை என்றாலே பின் தொடர்ந்து சென்று ஸ்டாண்ட் எடுங்க என்று சொல்கிறவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஒரு சிலர் அடுத்தவர்கள் எப்படி போனால் நமக்கு என்ன என்று போய்விட்டாலும் பலர் இதுபோல சின்ன சின்ன உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். கூகுள் மேப் போன்ற அதன் நவீனமான வழிகாட்டிகள் வந்தாலும் இதுபோல அரிதான நபர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் காட்டி இருக்கிறது.

    English Summary

    Mammootty: A video is going viral online showing an incident where actor Mammootty was struggling to find his way from Karaikudi to Madurai because Google Maps was not guiding him correctly; a Tamil man spotted him and declared, "He is my friend."