அமைச்சர் வரும்போது கால் மேல் கால் போடலாமா? ரம்யா கிருஷ்ணனை மோசமாக திட்டிய பெண்! அதுவும் இப்படியா?

  • சென்னை: கட்டா குஸ்தி 2 படத்தில் வெற்றி விழாவில் அமைச்சர் ராஜமோகன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அந்த சமயத்தில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் அவருக்கு எழுந்து நின்று வணக்கம் சொல்லாமல் உட்கார்ந்தபடியே வணக்கம் சொல்லிவிட்டு, வழக்கம் போல கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதும் ஒரு பெண் ரம்யா கிருஷ்ணனை மோசமாக திட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவரை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

    Advertisement

    ஒருவரை நமக்கு பிடித்து விட்டால் ஊருக்கே பிடிக்க வேண்டும் என்ற மனநிலை தான் பலருக்கும் இருக்கிறது. அப்படித்தான் பாலிடிஸ் மைக் என்ற youtube சேனலில் ஒரு பெண் பேசி இருக்கிறார். அவருடைய முகத்தை முழுமையாக காட்ட மாட்டார். முகம் முழுக்க மூடிக்கொண்டு கண்களில் கண்ணாடி மட்டும் அணிந்தபடி தான் அந்த சேனலில் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதில் விஜய்க்கு ஆதரவாக பல வீடியோக்கள் வெளியிட்டு இருக்கிறார்.

    Advertisement

    ரம்யா கிருஷ்ணன்

    விஜய் மற்றும் அவருடைய கட்சியினரை யாராவது திட்டினால் உடனே இந்த பொண்ணு அவர்களுக்கு எதிராக வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இந்த பெண்ணுக்கு அதிக சப்போர்ட் இருக்கிறது. அந்த வரிசையில் தான் தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணனையும் மோசமாக பேசியிருக்கிறார்.

    அதில் அவர் பேசும்போது, எம்மா ரம்யா கிருஷ்ணன் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? ஒரு அமைச்சர் வருகிறார் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று உனக்கு தெரியாதா? அவர் வரும்போது நீ திமிராக உட்கார்ந்து இருக்கிறாய்? இது என்ன மாதிரியான மனநிலை? சரி உட்கார்ந்தே இருக்கிற என்று பார்த்தால் அவர் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும்போது கூட அவரை அசிங்கப்படுத்துற மாதிரி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிற?

    Advertisement

    நடிகையை பற்றி மோசமான வார்த்தை

    நீ ஒரு ஆப்டால் நடிகை.. நாங்க உன்னுடைய படத்தை பார்த்தால் தான் உனக்கு சம்பளம். அப்படி இருக்கும்போது ஒரு அமைச்சர் வரும்போது நீ ஆணவமாக உட்கார்ந்து இருக்கிறார் என்று அந்த வீடியோ முழுக்க நடிகை ரம்யா கிருஷ்ணனை அந்தப் பெண் ஒருமையில் தான் மோசமாக விமர்சித்து இருக்கிறார். ஆனால் இதே வீடியோ இப்போ சோசியல் மீடியாவில் வைரல் ஆனதும் அந்த பெண்ணை பலரும் விமர்சிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    ரம்யா கிருஷ்ணனுக்கு சப்போர்ட்

    அந்த இடத்தில் என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்? அந்த வீடியோவில் கூட ரம்யா கிருஷ்ணன் எழுந்திருக்கிறார் அப்போது அவருடைய மடியில் இருந்த செல்போன் தவறி கீழே விழுகிறது. அதை எடுத்தபடி அந்த சீட்டில் உட்காருகிறார். பிறகு அவர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பது அவருடைய உரிமை அப்படி இருக்கக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று ரம்யா கிருஷ்ணனுக்கு ஆதரவாகவும் பலர் கமாண்ட் கொடுத்திருக்கின்றனர்.

    Advertisement

    விவாதம் ஆன கேள்வி

    அத்தோடு அமைச்சர் என்றால் அவர் கடவுளுக்கு நிகரானவர் என்று இல்லை. அமைச்சரும் நம்மைப் போன்ற மனிதர் தான். அந்த சம்பவத்தை அமைச்சரே பெரிதாக எடுத்திருக்க மாட்டார் ஆனால் அவருக்காக இதுபோன்று அடுத்தவர்களை மோசமாக விமர்சித்து வீடியோ வெளியிட வேண்டாம் என்றும் சிலர் கருத்து கூறி வருகிறார்கள். அதோடு ரம்யா கிருஷ்ணனை ஆஃப்டால் நடிகை என்று நீங்க சொல்லுறீங்களே? உங்களுடைய முதலமைச்சரும் நடிகராக இருந்தவர் தானே அது மறந்து போச்சா? என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதனால் இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    Ramya Krishnan: Minister Rajamohan attended the success event for the movie *Gatta Kusthi 2* as a special guest. During the event, actress Ramya Krishnan greeted him while remaining seated—without standing up—and continued to sit with her legs crossed, as was her usual posture. After a video of this incident went viral on social media, a woman released a video harshly criticizing Ramya Krishnan; many others have also been criticizing the actress.