பிறந்தநாளில் சூர்யா சொன்ன ஒரு வார்த்தை.. இது தேவையா? முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

  • சென்னை: விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியாகி உள்ள ஜனநாயகன் உலகம் முழுவதும் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் பட்டாசு வெடித்து மேளதாளத்துடன், பால் அபிஷேகம், ஊர்வலம் என திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

    Advertisement

    அதே நேரத்தில் டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்க்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவும் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். உடனே நெட்டிசன்கள் விஜய்யை சூர்யாவிடம் ஒப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள்.

    Advertisement

    நடிகர் சூர்யாவின் வேண்டுகோள்

    இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர். ஆனால் சூர்யா ஏற்கனவே தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கூறி இருக்கிறார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் செலவழிக்கப்படும் பணத்தைக் கூட சமூக நலத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார். தற்போது மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது கொண்டாட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல என்று அவர் சொல்லி இருக்கிறாராம்.

    ஜனநாயகன் கொண்டாட்டம்

    இதை வைத்து தான் இப்போது ரசிகர்கள் விஜய்யை கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒரு பக்கம் மாணவர்கள் நீட் பிரச்சினைக்காக போராடிக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் தியேட்டர் வாசலில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நடக்கிறது, விஜய் நீட் எக்ஸாமுக்கு எதிராக போராடுவேன் என்று ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தார். ஆனால் இப்போது மாணவர்கள் தடியடி வாங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் தன்னுடைய ரசிகர்களை அமைதியாக படத்தை பார்க்கும் படி கூட சொல்லவில்லையே இன்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

    Advertisement

    ரசிகர்கள் கேள்வி

    ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டு விட்டது. இதுவே பல மாதங்களுக்கு பிறகு போராடி ரிலீஸ் ஆகும் சமயத்தில் அந்த படத்தை நிறுத்தி கூட வைக்க வேண்டாம், ஆனால் இந்த நேரத்தில் கூட மாணவர்களுக்கு மதிப்பளித்து கொண்டாட்டத்தை எளிமையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூட அவர் ஒரு அறிக்கை விடவில்லையே...? அப்போ படிப்பை விட படம் தான் முக்கியமா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    ஜனநாயகன் பார்க்க போன திரிஷா செய்த செயல்.. திட்டும் ரசிகர்கள்.. ஆனால், கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டு குவியுது
    இன்னும் ஒரு சிலர் விஜய்யின் கடைசி படம் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வது ஒன்றும் தவறில்லையே என்று விஜய்க்கு ஆதரவாக பேசினாலும், படிப்பு முக்கியமா? அல்லது படம் முக்கியமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது குறித்து முதல்வர் விஜய் தரப்பில் என்ன விளக்கம் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    English Summary

    Jana nayagan: Vijay's last film, Demokraman, is running in theaters with fan celebrations around the world. From early in the morning, many theaters across Tamil Nadu are celebrating like a festival by bursting firecrackers and playing drums, milk abhishekam and processions.