விஜய் பற்றி சிம்பு சொன்ன ஒரு வார்த்தை.. பிடித்து கொண்ட ரசிகர்கள்.. முதலில் இதற்கு பதில் சொல்லுங்க பாஸ்!

  • சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டவர் சிம்பு. சினிமாவை தாண்டி அரசியல் விஷயங்களிலும் அவ்வபோது தனது கருத்துக்களை சொல்லி வருகிறார். அதனால் சிம்பு எப்போது அரசியலுக்கு வருவார்? என்ற கேள்வி அவருடைய ரசிகர்கள் மத்தியில் புதிதல்ல. இப்போது அந்த கேள்விக்கு சிம்பு கொடுத்திருக்கும் பதில் தான் மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

    Advertisement

    சமீபத்தில் சிம்பு கலந்து கொண்ட நிகழ்ச்சியில், உங்களுக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் இப்போதைக்கு தனக்கு அரசியலில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அதற்கான காரணத்தையும் அவர் தனது அப்பா டி. ராஜேந்திரனின் பழைய அரசியல் பயணத்துடன் இணைத்து பேசியிருந்தார்.

    Advertisement

    நடிகர் சிம்புவின் புது பேட்டி

    எங்க அப்பா கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட்ட போது அவர் சந்தித்த சிக்கல்கள், இடையூறுகள் எல்லாவற்றையும் நான் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன். அதனால் எனக்கு இப்போதைக்கு அரசியலில் பெரிய அளவில் ஈடுபாடு கிடையாது என்று சிம்பு சொல்லி இருந்தார். அப்போது அவரிடம் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீங்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிம்பு இப்போதைக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்று எந்த ஐடியாவில் இல்ல. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும் என்று சிரித்தபடியே சொல்லி முடித்திருக்கிறார். சிம்பு சொன்ன இந்த வார்த்தையை ரசிகர்கள் பிடித்து கொண்டார்கள். அதை வைத்தே விவாதத்தை நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    மேலும் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ள நிலையில் விஜய்யின் ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேள்வியும் சிம்புவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் 100 100 நாட்களிலே ஒருவருடைய ஆட்சி எப்படி இருக்கிறது என்று மதிப்பிடுவது ரொம்ப அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வருவது மாதிரி இருக்கும். அவருக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அவர் நல்லா தன் பண்ணிட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன் என சொல்லி இருந்தார்.

    விஜய் பற்றி சிம்பு பேட்டி

    விஜயை கடுமையாக விமர்சிக்காமலும் அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக பாராட்டாமலும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் என்று சிம்பு சொல்லி இருப்பதும் கவனம் பெற்று உளளது. அதுபோல சிம்பு எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவது அப்போதுதான் தெரியும் என்று சூசகமாக பதில் சொல்லியிருப்பதை வைத்து இப்போது நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே விஜய் வரிசையில் தனுஷும் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இப்போ சிம்புவும் அதையே செய்யப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    சிம்பு விளக்கம்

    ஆனால் அந்த பேட்டியில் அவரிடம் 2031ல் சிம்பு சொந்த கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடுவாரா? என்று கேள்வி கேட்கப்பட்டது. ஏற்கனவே அவர் எதிர்காலத்தில் நடப்பது அப்போதான் தெரியும் என்று சொல்லி இருந்தாலும் இந்த கேள்விக்கும் சிரித்தபடியே இப்படியே கேட்டுட்டு இருந்தீங்கன்னா எங்களையே கட்சி ஆரம்பிக்க வச்சிடுவாங்க போல என்று சொல்லி இருக்கிறார். இந்த பேட்டி வெளியான பிறகு சிம்புவும் அடுத்ததாக அரசியலுக்கு வரப்போகிறார் என்று சிலர் சொல்கின்றனர். இன்னும் ஒரு சிலர் டி ராஜேந்தரின் அரசியல் பயணத்தை பக்கத்திலிருந்து பார்த்தவர் என்பதால் அவசரப்பட்டு அரசியலுக்கு வர மாட்டார் என்று சொல்கின்றனர்.

    Advertisement

    ரசிகர்கள் வேண்டுகோள்

    இன்னும் ஒரு சிலர் நான் கண்டிப்பா வரமாட்டேன் என்று சொன்னவங்களே அரசியலுக்கு வந்துட்டாங்க. இவர் எதிர்காலத்தில் என்ன நடக்கும்னு இப்ப தெரியாது என்று சூசகமாக சொல்கிறாரே அப்போ அதில் விஷயம் இல்லாமலா இருக்கும்... என்றும் சிலர் இழுத்துக் கொண்டு இருக்கின்றனர். எது எப்படியோ சிம்புவிடம் முதலில் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வியை விட்டுவிட்டு அடுத்த படம் எப்போது என்று கேளுங்கப்பா சென்று அவருடைய ரசிகர்களும் குரல் கொடுக்கின்றனர்.

    ஜிடி நாயுடு படத்தை இயக்கியவர் யார் தெரியுமா? சிம்பு பட காமெடி நடிகர்! இத்தனை வருடம் கழித்து செம கம்பேக்
    சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் எப்போதான் வெளியாகும் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் சமயத்தில் அவரிடம் தேவை இல்லாமல் அரசியலுக்கு வருவீங்களா? வருவீங்களா? என்று கேட்டு அரசியலுக்கு இழுத்துவிட வேண்டாம் என்று சிம்பு ரசிகர்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள்.

    English Summary

    Simbu: Simbu has many faces in Tamil cinema as actor, singer, music composer. Apart from cinema, he also gives his views on political issues from time to time. So when will Simbu join politics? The question is not new among his fans. Now Simbu's answer to that question has again attracted attention.