அமீர்கானின் மூத்த மகனின் வயது 33... அவருடைய மூன்றாவது மனைவி யார்? வயது என்ன தெரியுமா?

  • சென்னை: பாலிவுட்டில் நேற்று முதலே அதிகமாக பேசப்படும் ஒரே விஷயம் என்றால் அது அமீர்கானின் மூன்றாவது திருமணம்தான். 61 வயதில் மீண்டும் திருமணம் செய்துகொண்டிருக்கும் அமீர்கான், சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறார். "இந்த வயதிலும் காதலா?" என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். "வாழ்க்கையை மீண்டும் புதிதாக தொடங்குவதில் என்ன தவறு?" என்று இன்னொரு தரப்பு ஆதரிக்கிறது.

    Advertisement

    அமீர்கானின் மூன்றாவது திருமணம்

    இந்த முறை அமீர்கான் திருமணம் செய்திருப்பது, பல ஆண்டுகளாக தோழியாக இருந்த கௌரி ஸ்ப்ராட் என்பவரை. அவருக்கு 47 வயது. அதாவது அமீர்கானை விட 14 வயது இளையவர். ஆனால் இதைவிட இணையத்தில் அதிகம் பேசப்படுவது இன்னொரு விஷயம். அமீர்கானின் மூத்த மகன் ஜுனைத் கான் தற்போது 33 வயதாகிறார். அப்பாவின் திருமணத்தில் ஜுனைத், மகள் ஐரா, கௌரியின் மகன் என அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டு வாழ்த்தியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

    Advertisement

    அமீர்கான் மூன்றாவது மனைவி

    "மகன் முன்னிலையிலேயே அப்பாவின் 3வது திருமணம்" என்பதுதான் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. இந்த திருமணம் மும்பையில் உள்ள அமீர்கானின் இல்லத்தில் மிகவும் எளிமையாக நடந்துள்ளது. சுமார் 100 முதல் 150 நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

    சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு திருமணமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌரி ஸ்ப்ராட் யார் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் அதிகமாக எழுகிறது. சினிமா நடிகை அல்ல. பல ஆண்டுகளாக அமீர்கானின் நெருங்கிய தோழியாக இருந்து வந்தவர். இருவரும் நீண்ட காலமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்து வந்ததாகவும், "எங்கள் மனதில் திருமணம் ஏற்கனவே நடந்துவிட்டது" என்று அமீர்கான் முன்பே ஒரு பேட்டியில் கூறியிருந்ததும் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

    Advertisement

    அமீர்கான் குடும்பம்

    அமீர்கானுக்கு இது மூன்றாவது திருமணம். முதல் மனைவி ரீனா தத்தாவுடனான திருமண வாழ்க்கையில் ஜுனைத் மற்றும் ஐரா என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். பின்னர் இயக்குநர் கிரண் ராவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கும் பின்னர் பிரிவு ஏற்பட்டது. இப்போது கௌரி ஸ்ப்ராட்டுடன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார்.

    சமீப காலமாக படங்களில் குறைவாகவே நடித்த அமீர்கான், மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது "சித்தாரே சமீன் பர்" படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு ரஜினிகாந்தின் "கூலி" படத்தில் கெஸ்ட் ரோலில்நடித்ததும் ரசிகர்களிடம் பேசப்பட்டது. இப்போது அந்த சினிமா செய்திகளை எல்லாம் தாண்டி, அவரது திருமணம்தான் இணையத்தின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

    Advertisement

    ரசிகர்கள் வாழ்த்துக்கள்

    சிலர் வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள். இன்னும் சிலர், "61 வயதிலும் வாழ்க்கையை புதிதாக தொடங்க தைரியம் வேண்டும்" என்று பாராட்டுகிறார்கள். அதே நேரத்தில், "33 வயது மகன் முன்னிலையில் நடந்த 3வது திருமணம்" என்ற கோணமும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதமாகி வருகிறது. அமீர்கான் எடுத்த இந்த முடிவு, வயது என்பது வாழ்க்கையை நிறுத்தும் காரணம் அல்ல என்று சொல்லும் உதாரணமா? இல்லை மீண்டும் ஒரு புதிய சர்ச்சைக்கான தொடக்கமா? என்ற விவாதமும் பாலிவுட்டில் சூடுபிடித்திருக்கிறது.

    English Summary

    Aamir Khan: Aamir Khan's third marriage is the most talked about thing in Bollywood since yesterday. Aamir Khan, who is remarried at the age of 61, is trending on social media. "Love at this age?" Some wonder that. "What's wrong with starting life over again?" Another side supports that. This time, Aamir Khan is married to Gauri Spratt, who has been his friend for many years. He is 47 years old. That means he is 14 years younger than Aamir Khan. But there is another thing that is more talked about on the internet than this. Aamir Khan's elder son Junaid Khan is now 33 years old. The fact that Junaid, daughter Aira and Gauri's son all attended and congratulated father's wedding has attracted the attention of fans.