இனி எவளாவது வந்தா ஹீல்ஸ்? ஆர்த்தி ரவி வெளியிட்ட வில்லங்கமான பதிவு.. ரவி மோகனுக்கு கிடைத்த நிம்மதி

  • சென்னை: ரவி மோகன்- ஆர்த்தி தம்பதியின் திருமண வாழ்க்கை கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது. இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக அறிவித்ததில் இருந்து நீதிமன்ற வழக்கு, ஜீவனாம்சம், பேட்டிகள், சோசியல் மீடியா போஸ்ட் என பல விஷயங்கள் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் ஆர்த்தி வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தைப் பெற்று இருக்கிறது.

    Advertisement

    அதாவது ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஜீவனாம்சமாக மாதம் 40 லட்சம் வேண்டும் என்று ஆர்த்தி கேட்டிருந்த நிலையில் அதற்கு நீதிபதி ரவி மோகன் வழக்கு முடியும் வரைக்கும் மாதம் 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் என்று சொல்லி இருந்தார். அதோடு குழந்தைகளை பார்க்க அவருக்கு முழு உரிமை இருக்கிறது என்றும் கூறியிருந்தனர்.

    Advertisement

    நீதிமன்ற உத்தரவு

    இதனால் ரவி மோகனுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்திருந்தது. அதை தொடர்ந்து கார்த்தியின் அம்மாவை தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் ஒரு சில ஸ்டோர்களை பகிர்ந்து இருந்தார். அதில், ஒரு உறவை மூன்றாவது நபருக்கு கெடுப்பதில்லை. அந்த மூன்றாவது நபரை உள்ளே அனுமதித்தவரால் தன் அந்த உறவுக்கு உடைகிறது என்ற வாசகம் ஒரு பதிவாகவும், மற்றொரு பதிவில் மனைவியை
    மிதித்து கொண்டு மற்றொரு பெண்ணுக்கு பூ கொடுப்பது போன்ற ஓவியத்தையும் பகிர்ந்திருந்தார். அதில் கவனம் என்ற ஒரு வார்த்தையை மட்டும் குறிப்பிட்டு இருந்தார்.

    சுஜாதா விஜயகுமார் பதிவு

    இன்னொரு பதிவில், மனைவிக்கு கொடுக்க வேண்டிய அன்பையும் மரியாதையும் வேறு ஒருவரிடம் காட்டக்கூடாது என்று கணவருக்கு அறிவுரை சொல்லும் வாசகத்தையும் ஒரு ஸ்டோரியாக வைத்திருந்தார். இந்த மூன்று பதிவுகளையும் பார்த்த நெட்டிசன்கள் அவை ரவி மோகனை மனதில் வைத்து பகிரப்பட்டு இருக்கலாம் என்று சொல்லி வந்தனர். ஆனால் அந்த பதிவுகளில் சுஜாதா எந்த பெயரையும் குறிப்பிடவில்லை.

    Advertisement

    ஆர்த்தி ரவி இன்ஸ்டா ஸ்டோரி

    இதைத்தொடர்ந்து ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரி ஒரு பதிவு வெளியிட, அது மீண்டும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அதில், "எவளாச்சும் உன்னை ஹீல் பண்ணுறேன்னு வந்தா ஹீல்ஸாலே அடிச்சு துரத்தி விடு" என்ற வாசகத்துடன் ஹை ஹீல்ஸ் ஒன்றையும் அதில் பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவிலும் ஆர்த்தி யாருடைய பெயரையும் சொல்லவில்லை. ஆனால் ஹீல் என்ற வார்த்தையை பார்த்து ரசிகர்கள் இது ரவி மோகன் தனது பேட்டியில் சொன்ன ஹீலிங் சம்பவத்தை நினைவுபடுத்துவதாக கூறி வருகின்றனர்.

    ரசிகர்கள் கருத்து

    குறிப்பாக கெனிஷாவை மனதில் வைத்து தான் இந்த பதிவு வெளியிட்டிருக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும் இதை ஆர்த்தி உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரியப்போகிறேன் என்று கடந்த வருடத்தில் வெளியிட்ட பதிவு பெரிதாக பேசப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்து ஆர்த்தியும் போஸ்ட் போட்டு இருந்தார்.

    Advertisement

    முடியாத பஞ்சாயத்து

    அந்த சமயத்தில் இரண்டு பேரும் மாறி மாறி தாங்கள் தரப்பு நியாயங்கள், தாங்கள் அனுபவித்த கஷ்டங்களை சோசியல் மீடியாவில் பதிவுகளாக வெளியிட அது பலரும் பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது. அதற்கு பிறகு நீதிமன்றம் நீங்கள் இருவரும் இனி சோசியல் மீடியாவில் எந்த பதிவுகளும் போடக்கூடாது என்று அறிவுறுத்தியது.

    அதற்கு பிறகு ஒருமுறை செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் தான் மன அழுத்தத்தில் இருந்த காலத்தில் கெனிஷாவை சந்தித்ததாகவும், அவர் என்னுடைய வாழ்க்கையில் வந்த ஒலி என்று எல்லாம் பேசி இருந்தார். அதற்குப் பிறகு கெனிஷா பெயர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து பேசப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெனிஷா இனி நான் ரவி மோகனை விட்டு பிரியப் போகிறேன் என்று அறிவித்துவிட்டு சோசியல் மீடியாவை விட்டு விலகி விட்டார்.

    Advertisement

    அதற்கு பிறகு ரவி மோகன் செய்தியாளர்கள் சந்தித்து, தன்னுடைய திருமண வாழ்க்கையில் அதிகமாக பாதிக்கப்பட்டதாகவும் தன்னுடைய குழந்தைகளை கூட பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாகவும் கண்ணீருடன் பேசி இருந்தார். அது அனைவரையும் பதற வைத்திருந்தது. ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று சொல்லி இருந்தனர்.

    ஆனால் அதற்கு பிறகும் இந்த விவாகாரம் ஓயவில்லை ரவி மகனின் பேட்டி, நீதிமன்ற உத்தரவுகள், சுஜாதா விஜயகுமார் பகிரும் போஸ்ட் மற்றும் அதை தொடர்ந்து ஆர்த்தி இன்ஸ்டா ஸ்டோரி என அடுத்தடுத்த நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் புதிய விவாதத்தை கிளப்பி வருகிறது.

    English Summary

    Ravi Mohan: The married life of Ravi Mohan-Aarthi couple has become the most talked about topic in Tamil cinema for the past few months. Ever since the two announced that they were living separately, court cases, alimony, interviews, and social media posts have sparked controversy. In this situation, the post published by Aarti is getting the attention of many people.