சென்னை: சினிமாவில் பல வருஷங்களாக வில்லன், குலச்சித்திரம், காமெடி என விதவிதமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஆனந்தராஜை திரையில் அவரை பார்த்தாலே வில்லத்தனமான கேரக்டர்கள் நினைவுக்கு வரலாம். நிஜ வாழ்க்கையில் அவர் செய்யும் சில விஷயங்கள் குறித்து வெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.
ஆனந்தராஜ் தனது பழக்க வழக்கங்களை பற்றி பேசும் போது, எனக்கு குடிப்பழக்கம் இல்லாததால் நஷ்டம் தான் என்று சொல்லி இருக்கிறார். ஆனந்த்ராஜ் இப்படி சொன்னதும் என்னங்க இவர் இப்படி சொல்றாரு? ஏற்கனவே குடியால் பலருடைய வாழ்க்கை அழிந்துட்டு இருக்கு. இவர் நான் குடிக்காததால் தான் எனக்கு நஷ்டம் என்று சொல்கிறாரே என்னவென்று கவனிக்கும்போது தான் அவர் அதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
நான் சிகரெட் பிடிக்க மாட்டேன். டீ, காபி குடிக்க மாட்டேன். வெற்றிலை, பாக்கு போட மாட்டேன். குடிப்பழக்கமும் எனக்கு கிடையாது. அதனால லாபமா? நஷ்டமா? என்று கேட்டால் நஷ்டம் தான். சினிமா துறையில் சில நேரங்களில் இப்படிப்பட்ட பழக்கங்களுடன் இருக்கும் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தான் ஒருவர் நெருக்கமாக இருக்க முடியும். அந்த வட்டத்தில் இல்லாதபோது சில வாய்ப்புகள் நம்மை விட்டு போய்விடும். குடிப்பழக்கம் இல்லாததால் சினிமா துறையில் சில நேரங்களில் நம்மை ஒதுக்கி விடுவார்கள், சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அப்போதெல்லாம் நம்ம இப்படியே இருந்து விடலாம் என்று நினைத்துக் கொள்வேன். இன்னைக்கு பலருடைய மனநிலையும் மாறிவிட்டது. யார் நல்லவர்? என்பதை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்கிறார்கள். எனக்கு பிடித்த மாதிரி நீங்கள் இருந்தால் நீங்கள் நல்லவர்கள். எனக்கு பிடித்த மாதிரி நீங்கள் இல்லை என்றால் கெட்டவர்கள் அவ்வளவுதான் என்று ஆனந்தராஜ் பேசி இருக்கிறார். ஒருவரை அவருடைய குணத்தை வைத்து மதிப்பிடுவதை விட நமக்கு பிடிக்கிறாரா? இல்லையா? என்பதை வைத்து நல்லவர், கெட்டவர் என்று முடிவு செய்யும் மனநிலை அதிகரித்து வருகிறது என்றுதான் அவர் சொல்லி இருக்கிறார். ஆனந்தராஜை 80,90ஸ் சினிமாவில் பார்த்த ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவருடைய வில்லதனமான கேரக்டர் தான். குறிப்பாக பாட்ஷா, சூரியவம்சம் உள்ளிட்ட படங்களில் அவருடைய நடிப்பு தனிக்கவனத்தை பெற்றது. அதற்கு பின்னர் கால போக்கில் வில்லனாக மட்டுமல்லாமல் காமெடியான கேரக்டர் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கினார். ஆனால் சினிமாவில் வில்லனாக பலமுறை பார்த்த ஆனந்தராஜனின் இன்னொரு முகம் பலருக்கு தெரிந்திருக்காது. இப்போதெல்லாம் ஒரு சிலர் சின்ன சின்ன உதவிகள் செய்தால் கூட அதை ஒரு வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் ஆனந்தராஜ் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய பிறந்தநாள், திருமணநாள், தன் குழந்தைகளின் பிறந்த நாள் போன்றவற்றிற்கு ஆதரவற்றோர், முதியோர் இல்லத்திற்கு சென்று தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அதைப் பற்றி எல்லாம் வெளியே அவர் காட்டிக் கொண்டது கிடையாது. அதனாலேயே அவரை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். சினிமாவில் ஹீரோவாக பார்க்கும் நடிகர்கள், நிஜ வாழ்க்கையில் அப்படி இருக்கிறார்களா என்றால் சந்தேகம் தான். ஆனால் சினிமாவில் வில்லத்தனம் செய்து கொண்டிருப்பவர்கள் கூட நிஜ வாழ்க்கையில் ஹீரோவை மிஞ்சி விடுகிறார்கள் என்று இவருக்கு பலரும் பாராட்டுகிறார்கள்.நடிகர் ஆனந்தராஜ் பேட்டி
மற்றவர்களின் பார்வை
ரசிகர்கள் பாராட்டு