மனைவி இறந்த 4 வருட தனிமை வாழ்க்கை.. பிள்ளைகளுக்காக நடிகர் பரத் கல்யாண் எடுத்த முடிவு! உருக்கம்

  • சென்னை: சின்னத்திரை நடிகர் பரத் கல்யாண் தனது மனைவியை இழந்த துயரம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருப்பது ரசிகர்களை கண்கலங்க வைத்திருக்கிறது. 40 நாட்கள் வேண்டிலேட்டரிலும், 7 மாதங்கள் கோமாவிலும் மனைவி இருந்தபோது கடைசி நேரம் வரைக்கும் ஏதாவது அதிசயம் நடக்கும் என காத்திருந்ததாகவும் ஆனால் இறுதியில் கடவுள் வேறு முடிவு எடுத்து விட்டதாகவும் வேதனையுடன் பேசி இருக்கிறார். அதோடு தன்னுடைய மனைவி இழந்து 4 வருடங்களாக குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்ந்து வரும் பரத் கல்யாண் உருக்கமாக பேசியதற்கு பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

    Advertisement

    நடிகர் மனைவி இறப்பு

    நடிகர் பரத் கல்யாண் மனைவி பிரியதர்ஷினி கடந்த 2022 ஆம் ஆண்டு தனது 43-வது வயதில் உயிரிழந்தார். உடல் எடையை குறைக்க அவர் எடுத்துக் கொண்டு டயட் மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான சிக்கல்களுக்கு பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்ததாக அப்போது செய்திகள் வெளியானது. பிறகு சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கோமாவிற்கு சென்றுவிட்டார்.

    Advertisement

    அப்போது வெளியான தகவலின்படி டயட்டை மாற்றியதால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்ததாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அவரது மரணத்திற்கு காரணம் அந்த டயட் தான் என்று உறுதியாக சொல்லவில்லை என்றாலும், அந்த காலகட்டத்தில் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தோம் என்று பரத் உருக்கமாக பேசியிருக்கிறார்.

    உருக்கமான வார்த்தை

    அதில், என் மனைவி 40 நாட்கள் வென்டிலேட்டரில் இருந்தார். அதற்கு பிறகு‌7 மாதங்கள் கோமாவில் இருந்தார். அப்போது தினமும் ஒரு அதிசயம் நடந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால் கடவுள் வேறு முடிவு எடுத்திருந்தார். என்னுடைய மனைவி இறந்த பிறகு பலரும் நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ என்று அட்வைஸ் கொடுக்குறாங்க. வாழ்க்கை இங்கேயே முடிந்து விடாது இன்னொரு திருமணம் செய்து கொள் என்று நண்பர்களும், உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    ஆனால் என் பையனுக்கு இப்போது 23 வயது, மகளுக்கு 18 வயது. அவர்கள் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். என்னையும் பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும். அதனால் எனக்கு இன்னொரு கல்யாணம் தேவை இல்லை என்று முடிவெடுத்து விட்டேன் என்று அவர் சொல்லி இருக்கிறார். மனைவி இழந்த பிறகு என்னுடைய குழந்தைகளுக்கு நானே அப்பாவாகவும், அம்மாவாகவும் வளர்த்து வருகிறேன். அவர்களை ஒரு நல்ல முறையில் வாழ்க்கையில் நிலை நிறுத்த வேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய நோக்கம் என்று சொல்லி இருக்கிறார்.

    இந்த வார்த்தைகள் தான் தற்போது ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது. மேலும் மனைவி இல்லாத வாழ்க்கை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்த நேரத்தில் சிங்கிள் பேரன்ட்ஸ் குழுக்களில் இணைந்து பலருடைய வாழ்க்கை அனுபவங்களை கேட்டதாகவும், அது தனது வாழ்க்கையை பார்க்கும் விதத்தையே மாற்றியதாகவும் அவர் அதில் பேசியிருக்கிறார்.

    ரசிகர்கள் அட்வைஸ்

    ஆனால் அவர் இப்படி பேசிய பிறகு ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் கொடுத்து இருக்கிறார்கள். அதாவது குழந்தைகள் இருவரும் வளர்ந்து விட்டார்கள் என்பதற்காக உங்களுடைய வாழ்க்கையை முழுமையாக தனிமையில் கழிக்க வேண்டிய அவசியம் இல்லை, பிள்ளைகள் நாளைக்கு திருமணம் செய்து அவர்களுடைய வாழ்க்கைக்கு சென்று விடுவார்கள். அப்போது உங்களுக்கு யார் துணை என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

    Advertisement

    இரண்டாவது திருமணம் என்பது மனைவியை மறந்து விட்டதாக அர்த்தம் கிடையாது. வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு மனதுக்கு துணையாக ஒருவர் இருப்பது முக்கியம் என்று பலரும் அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள். பரத் கல்யாண் வேறு யாரும் இல்லை நடிகர் கல்யாண் குமாரின் மகன் என்பது ஒரு சிலருக்கு தான் தெரிந்திருக்கும்.

    நடிகர் பரத் கல்யாண் நடித்த சீரியல்கள்

    அதுபோல பரத் கல்யாண் ஆரம்பத்தில் கன்னட திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். பிறகு தான் தமிழில் நடிக்க தொடங்கினார். ஆனால் சினிமாவில் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுக்காததால் சின்னத்திரை பக்கம் திரும்பினார். அபூர்வ ராகங்கள், வம்சம், பாரதி கண்ணம்மா இலக்கியா போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Bharath Kalyan: Small screen actor Bharat Kalyan opened up about his grief over the loss of his wife in a recent interview that has left fans in awe. When his wife was in a ventilator for 40 days and in a coma for 7 months, he said that he was waiting for a miracle until the last moment, but in the end God decided otherwise. Apart from this, many people are consoling Bharat Kalyan who has been living only for his children for 4 years after losing his wife.