Bigg Boss : ஏமாற்றத்தோடு பிக் பாஸை விட்டு போன பிளாக் பாண்டி.. இனி அவருக்கு பதில் உள்ளே வருவது இவரா?

  • சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் தொடங்கியது. ஆரம்பமான சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் சூடு பிடித்திருக்கிறது. ஆனால் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பிளாக் பாண்டி திடீரென உடல்நிலை குறைபாட்டால் நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக தான் இப்போது ஒரு புது போட்டியாளர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வரப் போகிறாராம். ஆனால் அது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் போட்டியாளர் என்று கூறப்படுகிறது.

    Advertisement

    வெளியேறிய பிளாக் பாண்டி

    ஏற்கனவே இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் முதல் நாளே சில போட்டியாளர்களை மேடையில் வைத்து எவிக்ஷன் செய்து வெளியே அனுப்பி விட்டார்கள். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மீண்டும் இவர்கள் வைல்ட் கார்டு போட்டியாளராக எப்போ வருவார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

    Advertisement

    வைல்டு கார்டு போட்டியாளர்கள்

    ஏற்கனவே மேடையில் வைத்து எவிக்ஷன் வைத்தது அன்ஃபேர் என்று ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். அதிலும் புவியரசு, ஷப்னம், பிரசாந்த் ரங்கசாமி போன்றோர் எல்லாம் நல்ல கண்டன்ட் குடுப்பாங்களே.. இவங்களை போய் அனுப்பிட்டீங்களே என்று இவங்களுக்கு ஏக கமெண்ட்ஸ் குவிந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும்போது சரி இந்த நிகழ்ச்சியின் ரூல்ஸ் படி ஒரு போட்டியாளர் வெளியே போனால் அவருக்கு பதில் ஒருவர் உள்ளே வைல்ட் கார்டு வருவார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அப்போதாவது நமக்கு பிடித்த போட்டியாளர்கள் வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

    Advertisement

    ரசிகர்கள் எதிர்பார்த்து

    ஆனால் இப்போது வரப் போகும் நபர் இருக்கிற வீட்டை இரண்டாக்க போகிறவராம். அது வேறு யாரும் இல்லை காமன்மேன் நிகழ்ச்சியில் முனியம்மாவுக்கு டப் கொடுத்தாரே மணிவாணன் அவர்தான் இனி வைல்டு கார்டு என்ட்ரியாக வரப்போகிறாராம். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் முனியம்மா செய்யும் அலப்பறையும் அக்கப்போருக்கும் அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரின் 2.0 என்று சொல்லுற மாதிரி தான் அவருடைய விளையாட்டு இருக்கிறது. இந்த நிலையில் மதிவாணன் வந்தால் சுவாரஸ்யம் இருக்குமா? அல்லது சண்டை சச்சரவுகள் மட்டுமே இருக்குமா? என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

    Advertisement

    English Summary

    Bigg Boss: Bigg Boss Tamil Season 10 kicked off just last Sunday and has already generated significant buzz among the public within a few days. However, in an unexpected turn of events yesterday, Black Pandi suddenly withdrew from the show due to health issues. A new contestant is set to enter the house as a wild-card entry to replace him, and it is rumored that this contestant will come as a shock to the fans.