சென்னை: நடிகர் கில்லி மாறனின் மகள் நிவ்யா மாறன் சமீபத்தில் பேசிய பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் முதலமைச்சர் விஜய்க்கும் தன்னுடைய அப்பா கில்லி மாறனுக்கும் இருந்த நட்பு, பிறகு ஏற்பட்ட தவறான புரிதல் போன்றவற்றைப் பற்றி எமோஷனலாக பேசியிருக்கிறார்.
கில்லி படத்தில் தன்னுடைய காமெடியான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மாறன் பல தமிழ் படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும் அவருடைய இறுதி வாழ்க்கை பல போராட்டங்களை சந்தித்தது. கொரோனா தொற்றால் 48 வயதிலேயே அவர் உயிரிழந்த செய்தி அப்போது திரை உலகிலேயே சோகத்தில் ஆழ்த்தியது.
நடிகர் கில்லி மாறன் இறப்பு
அந்த நேரத்தில் பா ரஞ்சித் கூட, "உன் முகத்தை கூட பார்க்க முடியலையேன்னு உன் மகள் அழுகுறாணா.. பேச வார்த்தையே இல்லை" என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார். அதுபோல நடிகர் ஆர்யா உட்பட பல பிரபலங்களும் அவருடைய இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
கில்லி மாறன் மகள் பேட்டி
இந்த நிலையில் மாறன் பற்றி பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை சமீபத்தில் கில்லிமாறனின் மகள் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில், பொதுவாக எல்லோரும் விஜய் சார் ரொம்ப அமைதியானவர் என்பார்கள் ஆனால் என் அப்பாவிடம் மட்டும் அவர் வேற மாதிரி இருப்பார். ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப ஜாலியா பேசுவாங்களாம். பிரியாணி சாப்பிடும் போது கூட என்னோட பிரியாணி தான் நல்லா இருக்கு, உன்னோடது நல்லா இல்லைன்னு குழந்தை மாதிரி சண்டை போடுவாங்களாம்.
அந்த அளவிற்கு நெருக்கமான நண்பர்களாம். இது பற்றி எல்லாம் அப்பா எங்க கிட்ட சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த நட்பு திடீரென முடிவுக்கு வந்துவிட்டது என்று அவர் வேதனையோடு பேசி இருக்கிறார். அதாவது, ஒரு சிலர் விஜய்யிடம் எங்க அப்பாவை பற்றி தப்பு தப்பா பேசி இருக்காங்க. அதற்குப் பிறகு விஜய்யிடம் என்னுடைய அப்பாவை பேச விடாமல் அவருடைய நம்பரையே பிளாக் பண்ணி விட்டார்களாம். அப்பா விஜய் சாரை எவ்வளவோ முறை தொடர்பு கொள்ள முயற்சி பண்ணினார். வேற நம்பர்ல இருந்து பேசினாலும் குரலை கேட்டதும் போனை கட் பண்ணி விட்டார்களாம். அதனால் அப்பாவால் கடைசி நேரத்தில் விஜய் சாருடன் பேசவே முடியவில்லை என்று கண்ணீருடன் நிவ்யா பேசி இருக்கிறார். மேலும் நாங்களும் விஜய் சாரிடம் பேச முயற்சி செய்தோம் ஆனால் அதுவும் முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு ஆரம்பத்தில் இருந்து விஜய் சார் ரொம்ப பிடிக்கும் ஒரு வேலை இந்த வீடியோ விஜய் சார் கண்ணில் பட்ட தயவுசெய்து எங்களிடம் ஒருமுறை பேசுங்க என்று அந்த வீடியோவில் எமோஷனலாக சொல்லி இருக்கிறார். நடிகர் மாறன் வெறும் துணை நடிகர் மட்டுமல்ல மேடை கச்சேரிகளில் கானா பாடல்கள் பாடியவர். சின்ன சின்ன கேரக்டர் மூலமாக ரசிகர்களை சிரிக்க வைத்தார். தலைநகரம், வேட்டைக்காரன், பட்டாசு, கே ஜி எஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும் கில்லிமாறன் என்ற பெயர்தான் அவருக்கு அடையாளமாக மாறியது. கில்லி மாறன் இப்போது உயிருடன் இல்லை ஆனால் அவருடைய மகள் வைத்துள்ள அந்த ஒரு வேண்டுகோள் மட்டும் சோசியல் மீடியாவில் பலருடைய மனதை தொட்டிருக்கிறது.விஜய் பற்றிய வருத்தம்
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்