சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த திருமதி செல்வம் சீரியலில் பூங்காவனம் கேரக்டரில் நடித்த நடிகர் ஜெயமணி மாரடைப்பால் 79 வயதில் காலமான செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இன்று அவரைப் பற்றி எல்லோரும் பேசுவது சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த கேரக்டரை பற்றி தான். ஆனால் அந்த கேரக்டருக்கு பின்னால் இருந்த கலைஞரின் வாழ்க்கையில் பல போராட்டங்களையும் அவமானங்களையும் கடந்த ஒரு நீண்ட பயணம் இருக்கிறது.
அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் இன்னும் நினைத்ததை சாதிக்கவில்லை என்று நம்பிக்கையோடு பேசி இருந்த ஜெயமணியின் வார்த்தைகளை இன்று கேட்கும் போது மனதை கணக்க வைக்கிறது. சிறகடிக்க ஆசை சீரியலில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த பிறகு அவர் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அந்த வீடியோக்கள் இன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆரம்ப காலம்
அதில் அவர் பேசும்போது, எனக்கு 7 வயதிலிருந்து சினிமா மீது ஆசை. என்னுடைய மாமா பாடகர் அவரைப் பார்த்து தான் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஆரம்பித்தது. ஆனால் அந்த கனவு உடனே நினைவாகவில்லை காலேஜ் படித்து முடித்த பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக கவர்மெண்ட் ஆபீஸில் வேலைக்கு சேர்ந்தேன். வாழ்க்கைக்காக வேலையை தேர்வு செய்தாலும் மனதிற்கு இருந்த நடிகர் மட்டும் இறக்கவில்லை.
வேலை முடிந்த பிறகு நாடகம்... அதற்குப் பிறகு நாடகத்திலிருந்து சினிமா.. அதிலிருந்து சின்னத்திரை என்று வாய்ப்பு கிடைத்த இடம் எல்லாம் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். மேலும் அவர் அந்த பேட்டியில் பேசும்போது நான் இன்னும் நினைத்ததை சாதிக்கல. எனக்கு தெரிந்தது சினிமா தான். அதனால்தான் அதை இறுகப் பற்றிக் கொண்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
அதபோல ஜெயமணி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது திருமதி செல்வம் சீரியல் தான். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு எளிமையாக கிடைக்கவில்லையாம் பூங்காவனம் கேரக்டருக்கு இயக்குனர் முதலில் தேர்வு செய்தது இவரை இல்லையாம். வேற ஒரு நடிகரை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று செலக்ட் பண்ணி வைத்திருந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் டெல்லிவிஸ்டாஸ் ராதா இவரை ரெக்கமண்ட் பண்ணி இருந்தாராம். அதனால் இயக்குனருக்கு இவர் மீது நம்பிக்கையில்லையாம் அதே நேரத்தில் கோபத்தில் இருந்ததாக இயக்குனரே அவரிடம் சொல்லி இருக்கிறார். அதனால் என்னுடைய கேரக்டரை முடிந்த அளவிற்கு முழுமையாக கொடுக்க வேண்டும் என்று நினைத்துதான் பூங்காவனம் கேரக்டரில் நடித்தேன். அந்த கேரக்டர் தான் ஜெயமணி என்ற பெயரை விட மக்கள் மனதில் பூங்காவனம் என்று பதிய வைத்தது. அதற்கு பிறகு பல வருஷங்களாக ரசிகர்கள் இவரை பூங்காவனம் என்று கூப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆனால் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு மலேசியா மாமா என்று கூப்பிடுறாங்க, சில நிகழ்ச்சிகளுக்கு வெளியே போகும் போது குழந்தைகள் கூட இவங்க மலேசியா மாமா என்று சொன்னால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று அவர் அந்த பேட்டியில் மகிழ்ச்சியுடன் பேசி இருந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை என்பதுதான் வேதனை. அதுபோல பலருக்கும் தெரியாத இன்னொரு சம்பவத்தையும் ஜெயமணி பகிர்ந்து இருந்தார். அரசு வேலையை விட்டு சினிமாவுக்கு வந்த ஆரம்ப நாட்களில் படப்பிடிப்பில் சாப்பாடு தட்டை எடுத்துக்கொண்டு நின்றபோது நீ அங்க போய் சாப்பிடு என்று கையில் இருந்த தட்டை பிடுங்கி அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என்று வேதனையுடன் கூறி இருந்தார். அந்த அவமானத்தையும் தாண்டி அவருடைய மனம் உடையவில்லை. பிறகு 280க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பல சீரியல்களிலும் நடித்திருந்தார். அதோடு 40 சீரியல்களை இயக்கவும் செய்திருக்கிறார். மேலும் அவர் அந்த பேட்டியில் இன்னொரு ஆதங்கத்தையும் பகிர்ந்து இருந்தார். அதாவது சீரியலில் நடிப்பவர்களை சினிமாவுக்கு செலக்ட் பண்ண கூடாது என்ற ஒரு தவறான எண்ணம் இருக்கிறது அது மாற வேண்டும், நமக்கு வர வேண்டிய வாய்ப்பு நிச்சயம் வரும் என்று நம்பிக்கையுடன் பேசி இருந்தார். பலர் 60 வயதில் ஓய்வு எடுப்பார்கள், சிலர் 70 வயதில் வீட்டில் அமைதியாக இருப்பார். ஆனால் ஜெயமணி அப்படி இல்லை 79 போது வயதிலும் புதிய கேரக்டர் கிடைத்தால் உற்சாகமாக நடித்துக் கொண்டிருந்தார். அதோடு படங்கள் இயக்க வேண்டும், எழுதி வைத்த கதையை திரைக்கு கொண்டுவர வேண்டும், புதிய வாய்ப்புகள் வரவேண்டும் என்று கனவு கண்டு இருந்தார். அதுவெல்லாம் பாதியிலேயே நின்று விட்டது.திருமதி செல்வம் நடிகர் மரணம்
நடிகர் ஜெயமணியின் கடைசி பேட்டி
நடிகர் ஜெயமணி பற்றிய ரகசியம்
ஜெயமணியின் நிறைவேறாத கனவு