இறைவா... என்னதான் உன் கணக்கு? அக்டோபர் மாதம் ரொம்ப மோசம்! பாடகர் கிருஷ்ணராஜ் மறைவால் நடிகர் உருக்கம்

  • சென்னை: தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாடகர் கிருஷ்ணராஜின் மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக, 90-களில் இவருடைய குரலை கேட்டு ரசித்தவர்களுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இசையமைப்பாளர் தேவாவின் இசையில் வெளியான பல பாடல்கள் மூலம் பிரபலமான கிருஷ்ணராஜ், தனது குரலால் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இந்நிலையில், நடிகர் காதல் சுகுமார் அவரை பற்றியும், அவருடைய கடைசி காலகட்டம் குறித்தும் பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது.

    Advertisement

    நடிகர் காதல் சுகுமார் பதிவு

    பாடகர் கிருஷ்ணராஜின் மறைவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் காதல் சுகுமார் வெளியிட்டுள்ள பதிவில், "இறைவா... என்னதான் உன் கணக்கு?" இறைவா... என்னதான் உன் கணக்கு? பாடகர் கிருஷ்ணராஜ் 74 வயதில் காலமாகி இருக்கிறார். 95 காலகட்டங்களில் மேடைப்பாடகராக வலம்வந்தவர்.. தேவாவின் இசையில் காதல்கோட்டை படத்தில் வெள்ளரிக்கா பிஞ்சு பாடலில் பிரபலமானவர்...அதைத்தொடர்ந்து தேவா சார் நிறைய ஹிட் பாடல்களை அவரை பாட வைத்தார்.

    Advertisement

    அதன் பின் கருடா கருடா என் காதலை சொல்லிவிடு, தஞ்சாவூரு மண்ணு எடுத்து, இதயம் இதயம் நனைகிறதே என இதுவரை 3000 பாடல்கள் பாடி இருக்கிறார். நானும் அவரும் லக்ஷ்மன்ஷ்ருதி குழுவில் இருந்தபோது பழக்கம். இசைக்கலைஞர்களுக்கே உரிய பண்பு, அமைதி என்று எல்லோருக்கும் பிடித்தமானவர். கலைமாமணி விருதை பெற்றவர்.

    கடைசி நேரத்தில் நடந்தது

    7 வருஷத்துக்கு முன்பு ஒருமுறை உடல்நலமில்லாமல் இருந்து மீண்டுவந்தார்.. அதன்பின் சரியாக பாடும் வாய்ப்புகள் வரவில்லை. சமீபத்தில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டவர் நேற்று இரவு மீளாத்துயில் சென்றுவிட்டார். அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை. அடுத்தடுத்த இழப்புகள் என்று இந்த அக்டோபர் மாசம் ..ரொம்பவே மோசம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக என்ற நடிகர் காதல் சுகுமார் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

    Advertisement

    அக்டோபர் மாத இழப்பு

    ஏற்கனவே கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தான் இசையமைப்பாளர் தேவா காலமானார், அந்த துயரமே அடங்குவதற்குள் அவருடைய தம்பி மகனான கார்த்திக் சபேஷ் அக்டோபர் 20ஆம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து இப்போது தேவாவுக்கு பெயர் வாங்கி தந்த தஞ்சாவூர் மண்ணெடுத்து என்ற பாடலை பாடி, தேவாவின் செல்ல தம்பியாக கூடவே இருந்த பாடகர் கிருஷ்ணராஜூம் அதே அக்டோபர் மாதத்தில் காலமானது அவரை சார்ந்தவர்கள் அனைவருக்குமே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    கடந்த அக்டோபர் மாதத்தில் தான் தேவாவின் தம்பியான சதீஷ் காலமானார். அப்போதே தேவா நொறுங்கி போயிருந்தார். தன்னுடைய தம்பிகள் தான் தனக்கு பலம் அவர்களால் தான் நான் இந்த அளவிற்கு வந்திருக்கிறேன், ஒரு வருஷத்தில் 35 படங்களுக்கு இசையமைத்தேன் என்றால் அதற்கு என்னுடன் இருந்த எனது தம்பிமார்கள் தான் காரணம் என்று சொல்லி இருந்தார். அதில் அவருடைய தம்பி சபேஷ் மற்றும் கிருஷ்ண ராஜும் இருந்தனர். ஆனால் இப்போது தேவா குடும்பத்தில் அடுத்தடுத்து இறப்பு அனைவரையுமே வருத்தப்பட வைக்கிறது.

    English Summary

    Actor Kadhal Sukumar: The passing of singer Krishnaraj has left the film fraternity and music fans in deep sorrow. For those who grew up enjoying his voice in the 90s, this news has come as a major shock. Having gained fame through numerous songs composed by Deva, Krishnaraj carved a unique niche for himself with his distinctive voice. In this context, a poignant post shared by actor Kadhal Sukumar—reflecting on the singer and his final days—is now drawing significant attention.