சென்னை: நடிகர் கவினுக்கு இன்று மறக்க முடியாத நாளாக மாறி இருக்கிறது. சின்னத்திரையில் ஒரு சாதாரண நடிகராக பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் நம்பிக்கைகுரிய இளம் ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் கவின் தற்போது தனது வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷமான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.
எனக்கு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்துள்ளதாகவும் தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் உருக்கமாக தெரிவித்து இருக்கிறார். இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ரசிகர்கள், திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கவின் வெளியிட்ட பதிவில் தனது மகிழ்ச்சியை மிக எளிமையாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையையும், பெண் குழந்தையும் பிறந்திருப்பது ரசிகர்களுக்கும் , கவின் குடும்பத்திற்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. இன்று பெரிய நடிகராக இருக்கும் கவின் பயணம் அவ்வளவு எளிமையானது இல்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான அவர் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதற்குப் பிறகு பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து வந்தார். அந்த நேரத்தில் தான் அவருக்கு திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய வாழ்க்கையை ரொம்பவும் மாற்றியது என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் அவர் அவருடைய இன்னொரு முகம் ரசிகர்களுக்கு தெரிய வந்தது. ஜாலியாக நண்பர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தாலும் சில சர்ச்சைகளையும் சந்தித்து இருந்தார். பிறகு பணப்பெட்டியுடன் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த கவினுக்கு டாடா திரைப்படம் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்த படம் குடும்ப ரசிகர்களிடமும், இளைஞர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு கவினுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன. பிறகு தன்னுடைய தோழி மோனிகா டேவிட் என்பவரை கடந்த 2023 ஆம் ஆண்டு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். அவருடைய திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது. இப்போது குழந்தை பிறந்ததை எப்படி எளிமையாக அறிவித்திருக்கிறாரோ அதேபோலத்தான் அவருடைய திருமணத்தை கூட செய்திருந்தார். கவின் இப்போது நடிகை நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் அவருக்கு ஒரு நேரத்தில் இளவரசனும், இளவரசியும் கிடைத்திருப்பது அவருக்கு கிடைத்த லக் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.பிக் பாஸ் பிரபலம்
வாழ்க்கையின் திருப்புமுனை
கவின் திருமண வாழ்க்கை
இரட்டை சந்தோசம்