தன் குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைத்த கவின்.. அதுவும் என்ன அர்த்தம் தெரியுமா?

  • சென்னை: நடிகர் கவின் வாழ்க்கையில் இப்போது சந்தோஷம் டபுள் ஆகவே இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் தனக்கு ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்த கவின் தற்போது அந்த குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயர்களையும் முதல் முறையாக வெளியிட்டிருக்கிறார்.

    Advertisement

    அதுவும் குழந்தைகளின் முகத்தை வெளியில் காட்டாமல் அவர்களுடைய சின்னஞ்சிறு கால்களை மட்டும் காட்டும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் கவின் "இறைவனுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். அதோடு
    தனது குழந்தைகளுக்கு தியோலினா கவின், தியோன் லியோ கவின் என்று இரட்டை குழந்தைகளின் பெயரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

    Advertisement

    நடிகர் கவின் குழந்தைகள் பெயர்

    இதில் மகன் பெயர் லியோ என்று வருவதை பார்த்ததும் உங்களுக்கு விஜய் நடித்த லியோ படம் ஞாபகம் வரலாம். ஒருவேளை கவின் விஜயின் ரசிகர் தானோ என்னவோ! தன்னுடைய மகனுக்கு விஜய் படத்தை வைத்திருக்கிறாரா? அல்லது இதற்கு பின்னாடி ஏதாவது விஷயம் இருக்கிறதா? என்று ஒரு ஆராய்ச்சியே ஓடிக்கிட்டு இருக்கு.

    இதை அடுத்து கவின் ரசிகர்கள் அந்த பதிவை பார்த்ததும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். பெண் குழந்தைக்கு தியோலினா, ஆண் குழந்தைக்கு தியான் லியோ என்று வைத்திருப்பது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. அதில் தியோலினா என்ற பெயருக்கு தெய்வீக தன்மை உடையவள் என்று அர்த்தம் வருகிறது. அதே போல தியோன் லியோ என்பதற்கு தியோன் என்றால் தெய்வீகமானவர், லியோ என்றால் சிங்கம் என்று அர்த்தம். இதனால் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு வித்தியாசமான பெயரை கவின் குடும்பத்தினர் யோசித்து வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

    Advertisement

    கவின் திருமண வாழ்க்கை

    கவின் மற்றும் அவர் நீண்ட நாளுக்கு காதலியான மோனிகா டேவிட் இருவரும் கடந்த 2023 ஆம் வந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய குடும்ப விஷயங்களைப் பற்றி கவின் பெரிதாக வெளியே சொல்லிக் கொண்டது கிடையாது.

    முதல் முறையாக தனது குழந்தைகள் பிறந்த செய்தியை அவர் அறிவித்ததும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அதற்குப் பிறகு தான் அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்த புகைப்படங்கள், வளைகாப்பு புகைப்படங்களையும் கவின் பகிர்ந்திருந்தார். அந்த சமயத்தில் எங்கள் வாழ்க்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி.. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்துள்ளனர் என்று மட்டும் கவின் போஸ்ட் போட்டு இருந்தார்.

    Advertisement

    கவின் நடித்த சீரியல்கள்

    சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கவின் அதற்குப் பிறகு தாயுமானவன், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதே சமயத்தில் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் அவருடைய ரசிகர்கள் வட்டம் பெரிதானது. சினிமாவில் லிப்ட் கவனத்தை பெற்றிருந்தாலும், டாடாதான் கவினின் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    கவினின் புதிய படம்

    அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பிளடி பெக்கர், கிஸ், மாஸ்க் என அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுக்கவில்லை. இந்த சமயத்தில் தான் நடிகை நயன்தாராவுடன் ஹாய் படத்தில் கமிட்டானார். இந்த படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்போது அவர் தன்னுடைய குழந்தைகளின் பெயரை அறிவித்ததும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    English Summary

    Kavin: Actor Kavin is currently experiencing double the happiness in his life. Having shared the joyful news with fans last July about the birth of his twins—a boy and a girl—he has now revealed their names for the first time.