Tvkவில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்காங்க! இன்ஸ்ட்டாவில் நடந்த மோதல்! லிவிங்ஸ்டன் மகள் ஆதங்கம்

  • சென்னை: நடிகர் லிவிங்ஸ்டனின் மகளும், நடிகையுமான ஜோவிதா தவெக உறுப்பினர்கள் சிலரை விமர்சித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனக்கும் தவெக தொண்டர்கள் சிலருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் நான் விஜய்க்கு எதிரானவள் கிடையாது, எனக்கு எப்போதுமே விஜய் பிடிக்கும் ஆனால் அவருடைய கட்சியினர் சிலர் செய்யும் செயல்கள் மோசமாக இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

    Advertisement

    இயக்குனரும் நடிகருமான லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா சன் டிவி, ஜீ தமிழில் சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுபோல சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்து பாடும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருவார். இது ஒரு பக்கம் இருந்தாலும் இதே சோசியல் மீடியாவில் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து ஜோவிகா கோபத்துடன் பேசி இருக்கிறார்.

    Advertisement

    நடிகர் லிவிங்ஸ்டன் மகள் பேட்டி

    அதில், நான் எங்க போனாலும் எங்கிட்ட நீங்க தவெகாவிற்கு எதிரானவளா? உங்களுக்கு ஏன் விஜய் பிடிக்கவில்லை? என்று கேட்கிறார்கள். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் விஜய் சாரின் ரசிகை. என்னை விட என்னுடைய தங்கைக்கு அவரை ரொம்பவே பிடிக்கும். எங்க வீட்டில் எல்லாருக்குமே அவரை பிடிக்கும். ஆனால் சோசியல் மீடியாவில் நான் போட்ட ஒரு லைக்கை வைத்து தவெகவினர் இப்ப வரைக்கும் என்னை ட்ரோல் செய்து வருகிறார்கள். அது எவ்வளவு பெரிய கேவலமான செயல் தெரியுமா?

    Advertisement

    கரூர் சம்பவம்

    சில மாதங்களுக்கு முன்பு அதாவது கரூர் சம்பவம் நடந்த சமயத்தில் ஒருவர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அவர் பேசியது எனக்கு சரியானதாக தெரிந்தது. அதாவது கரூரில் எத்தனை பேர் இறந்து போயிருக்கிறீர்களே... நீங்கள் ஒரு நடிகருக்காக போய் உங்களுடைய உயிரை இழக்க வேண்டுமா? ஒரு நடிகரை உங்களுக்கு பிடிக்கிறது என்றால் அவருடைய படங்களை பாருங்கள். ஆனால் அவர் பின்னாடி போய் உயிரை இழந்து கொள்ளாதீர்கள் என்று அவர் சொல்லி இருந்தார். அது எனக்கு சரி என்று பட்டது. நானும் ஒரு நடிகையாக இருந்தாலும் அவர் பேசிய வார்த்தை எனக்கு பிடித்திருந்தால் தான் அந்த வீடியோவுக்கு ஒரு லைக் போட்டேன்.

    Advertisement
    கலாச்சாரத்திற்கு எதிரானது! இதனால்தான் விலகல்.. டாப் சீரியலில் இருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள் பதிவு

    உடனே அதை வைத்து நான் தவெகவிற்கு எதிரானவர் என்று என்னை மோசமாக பேச தொடங்கி விட்டார்கள். ஒரு சிலர் இவளை உதயநிதி வைத்திருக்கிறாரா? ஸ்டாலின் வைத்திருக்கிறாரா? என்றெல்லாம் ஆபாசமாக பேசி வருகிறார்கள். நானும் என்னுடைய அப்பாவும் பாட்டு பாடி ஒரு வீடியோ போட்டு இருந்தோம். அப்போது அதில் தவெக தொண்டர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர், இன்னும் உன் அப்பன் சாகலையா? என்று கேட்டிருந்தார்.

    ஜோவிதாவின் பதிலடி

    அதற்கு நான், நீங்க தவெவிற்க்கு தொண்டர்தானே நீங்க கரூர் கூட்டத்தில் மாட்டி சாகலையா? இன்னுமா உயிரோடு இருக்கிறீங்க? என்று பதில் கொடுத்து இருந்தேன். அந்த கமெண்ட் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரல் ஆனது. இது எல்லாமே என்னுடைய மனதில் இருக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடுதான். அதற்கு பிறகு அந்த நபர் என்னை அன்பாலோ பண்ணிட்டு ஓடி போயிட்டார்.

    Advertisement

    நமக்கு என்ன பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதை நாம் தைரியமாக சொல்ல முடியாத சூழ்நிலையை இவர்கள் உருவாக்குகிறார்கள். அவர்களுக்கு பிடித்ததை தான் நாம செய்ய வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம்? உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இருக்கும் சிலருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது நான் எல்லோரையும் சொல்லவில்லை இதுபோல மோசமாக பேசுபவர்களை மட்டும் சொல்கிறேன் ஜோவிதா கூறி இருக்கிறார்.

    விஜய் ரசிகருக்கு நெத்தியடி பதில்.. கரூர் நெரிசலில் நீங்க சாகலையா? லிவிங்ஸ்டன் மகள் சுளீர்

    ரசிகர்கள் கேள்வி

    இவருடைய கேள்வி நியாயமாகத்தான் இருக்கிறது என்று பலரும் அவருக்கு சப்போர்ட் கொடுக்கின்றனர். முதல்வர் விஜய் மற்றும் அவருடைய கட்சியினர்கள் பெண்களை யார் தவறாக பேசினாலோ, விமர்சித்தாலோ அவர்களுக்கு எதிராக எங்களுடைய ஆக்சன் பாயும் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் அவர் கட்சியினர்கள் இதுபோன்று அடுத்த பெண்களை விமர்சிப்பதும், ஆபாச பேசுவதும் சரியா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    English Summary

    Actor Livingston daughter: A video of actress Jovita—daughter of actor Livingstone—criticizing certain members of the TVK party is going viral online. She has clarified the situation regarding a disagreement she had with some TVK cadres, stating that she is not against Vijay—whom she has always liked—but finds the behavior of some members of his party to be appalling.