நடிகர் நாகேஷ் மகன் ஆனந்த் பாபுவின் புது அவதாரம்.. சன் டிவி சீரியல் ப்ரோமோவில் கவனித்தீர்களா? ரசிகர்கள் பாராட்டு

  • சென்னை: தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் நடிகைகளை பல வருடங்கள் கழித்து சின்னத்திரையில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமாக இருக்கும். அதிலும் ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து டான்ஸில் தனி ஸ்டைல் காட்டிய நடிகரை இப்போது சீரியல்களில் முற்றிலும் வேறொரு கெட்டப்பில் வருவது இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அது வேறு யாருமில்லை மறைந்த காமெடி ஜாம்பவான் நாகேஷின் மகன் ஆனந்தபாபு தான்.

    Advertisement

    சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் சிறகுகள் சீரியலின் ப்ரோமோ மற்றும் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. ஜூலை 20ஆம் தேதி முதல் மதியம் 2 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்று சன் டிவி அறிவித்திருக்கிறது. இந்த ப்ரோமோ தான் இப்போ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    நடிகர் ஆனந்தபாபுவின் ஆரம்ப காலம்

    ஆனந்தபாபு என்றாலே 80ஸ், 90ஸ் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவருடைய டான்ஸ் தான். டி ராஜேந்திரின் தங்கைக்கோர் கீதம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் பாடும் வானம்பாடி, உதயகீதம், புது வசந்தம், புரியாத புதிர், சிகரம், சேரன் பாண்டியன் என பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் நாகேஷின் மகன் என்று அடையாளத்தை தாண்டி தன்னுடைய டான்ஸ் அவருக்கு தனி ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது.

    ஆனந்தபாபு நடித்த சீரியல்கள்

    ஆனால் சமீப காலமாக சினிமாவை விட சின்னத்திரையில் ஆனந்தபாபு கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் விஜய் டிவியில் மௌனராகம் சீரியலில் விஸ்வநாதன், முத்தழகு சீரியலில் வீரமுத்து, கிழக்கு வாசல் சீரியலில் தயாளன் என நெகட்டிவ் கேரக்டரிலேயே நடித்து வந்தார். சினிமாக்களில் இவரை ஹீரோவாகவும், ஜாலியான கேரக்டராகவும் பார்த்துவிட்டு சீரியலில் நெகடிவ் கேரக்டரில் பார்ப்பது பலருக்கும் வருத்தத்தை கொடுத்து இருந்தது. ஆனாலும் அது கூட என்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று அவர் பலபேட்டிகளில் சொல்லியிருந்தார்.

    Advertisement

    இந்த நிலையில் தான் சன் டிவியில் சிறகுகள் சீரியலில் முக்கிய கேரக்டரில் அவர் நடித்திருக்கிறார். ஒரு குடும்பத்தின் தலைவராக தன்னுடைய மொத்த பிள்ளைகளின் நலனுக்காக வாழும் தந்தையாக அவர் அதில் நடித்திருக்கிறார். அதை பார்க்கும் போது இந்த கேரக்டர் தான் உங்களுக்கு சூட் ஆகுது சார். நீங்க இப்படியே நடிங்க, அதிலும் உங்களுடைய ஃபேவரைட் காமெடியையும் விட்டுறாதீங்க என்று பலர் கமாண்ட் கொடுக்கின்றனர்.

    சிறகுகள் சீரியல் நடிகர்கள்

    அதுபோல இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் ஹீரோவாக அழகப்பன் நடிக்கின்றனர். ஜோவிதா பார்வதி என்ற கேரக்டரில் நடிக்கிறார். மேலும் வினோதினி, நரேஷ், வெற்றி, பாப்ரிகோஸ், பரத், சோனியா, அணு, ரேஷ்மா உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் நடிக்கிறார்கள். 90 ஃபேவரைட் சீரியல் பிரபலங்களும் இந்த சீரியலில் நடிப்பதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் இப்போது எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

    Advertisement

    ஆனந்தபாபுக்கு சன் டிவி சீரியல்கள் ஒன்று புதிதல்ல. ஏற்கனவே சூலம், குலவிளக்கு, மனைவி, கஸ்தூரி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் விஜய் டிவி பக்கம் போனார். இப்போது மீண்டும் சன் டிவி பக்கம் வந்திருக்கிறார். ஆனாலும் இந்த சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பானால் நல்ல டிஆர்பி வருமே என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    English Summary

    Anand Babu: Moreover, the actor who once played a hero and showed a unique style in dance, now comes in a completely different character in the serials has given a pleasant surprise. It was none other than late comedy legend Nagesh's son Anandha Babu. The promo and making video of the newly telecasted serial Chiragul on Sun TV is now out. Sun TV has announced that the serial will go on air from 20th July at 2 PM. This promo is now going viral on social media.